22 Years of Samuthiram : ‘இதுபோல சொந்தம் தந்ததால் இறைவா வா நன்றி சொல்கிறோம்’ சகோதர பாசம் உணர்த்திய சமுத்திரம் படம்!
22 Years of Samuthiram : குடும்ப பாசத்தை உணர்த்திய திரைப்படம் சமுத்திரம். உறவுகள், அண்ணன் - தங்கை பாசம், குடும்பம் என இந்தப்படம் பல்வேறு உணர்வுகளை உணர்த்திய படம்.

வழக்கமான கே.எஸ். ரவிக்குமார் பாணி குடும்ப படம். சரத்குமார், முரளி, மனோஜ் பாரதிராஜா மூன்று பேரும் சகோதரர்கள். இவர்களின் ஒரே தங்கை காவேரி. உறவினராக கவுண்டமணி, வீட்டின் உதவியாளரா செந்தில், மஞ்சுளா, அபிராமி, சிந்து மேனன், மோனல், மணிவண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மூன்று சகோதரர்களின் ஒரே தங்கை என்பதால் காவேரி பாசமாக வளர்க்கப்படுகிறார். ஊரில் கோயிலுக்கு மரியாதை வழக்கமாக சரத்குமாருக்கு கிடைக்கும். அதை வில்லனின் தந்தை தட்டிப்பறிக்க முயல்கிறார். ஆனால் ஊர்மக்கள் அதை சரத்குமாருக்கு கொடுக்க, ஆத்திரமடைந்த தந்தை சரத்குமாரை பழிவாங்க விரும்புகிறார்.
இதனால் தனது மகனுக்கு காவேரியை திருமணம் செய்துகொண்டு சென்று கொடுமை செய்கிறார். அவர்களை ஏமாற்றி அவர்களின் சொத்து மொத்தத்தையும் அபகரித்துக்கொள்கிறார். இதற்கிடையில் சரத்குமாருக்கும், அபிராமிக்கும் திருமணம் நடைபெறுகிறது. இவற்றையெல்லாம் பொருத்துக்கொள்ளும் பெண்ணாக அபிராமி இருக்கிறார்.