Actress Abhirami: ‘நானும் தாயானேன்’.. பெண் குழந்தையை தத்தெடுத்த ‘விருமாண்டி’ அபிராமி.. பெயர் என்ன தெரியுமா?
பிரபல நடிகையான அபிராமி குழந்தை ஒன்றை தத்தெடுத்து இருப்பதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்.

Actress Abhirami
தமிழில் ‘மிடில் கிளாஸ் மாதவன்’ ‘சமுத்திரம்’ ‘சார்லி சாப்ளின்’ ‘மாறா’ ‘நித்தம் ஒரு வானம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை அபிராமி.
பல படங்களில் நடித்தாலும் கமலுடன் விருமாண்டி படத்தில் இவர் ஏற்று நடித்த அன்னலட்சுமி கதாபாத்திரம் இன்றும் மக்கள் மனதில் நிற்கிறது. இவர் பிரபல எழுத்தாளரான பவணனின் பேரன் ராகுல் பவணனை கடந்த 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.