பிரபல நகைச்சுவை நடிகர் காலமானார்.. சூர்யா 45 படத்தை இயக்கும் ஆர்.ஜே. பாலாஜி.. இன்றைய டாப் 10 சினிமா செய்திகள்!
முக்கிய சினிமா செய்திகளின் தொகுப்புகள் இங்கே தரப்பட்டுள்ளது. இந்த செய்தித் தொகுப்பில், சூர்யா 45 படத்தை இயக்கும் ஆர்.ஜே. பாலாஜி முதல் என தளபதி 69 அப்டேட் வரை நடந்த முக்கிய சினிமா செய்திகள் குறித்து காணலாம்.

சூர்யா 45 படத்தை இயக்கும் ஆர்.ஜே. பாலாஜி
சூர்யா 45 படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்குவதாகவும், படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பதாகவும் தகவல்கள் சோசியல் மீடியாக்களில் வைரலானது. இந்த நிலையில் தற்போது அந்த தகவல் உறுதிசெய்யப்பட்டுள்ளது, இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சூர்யாவின் 45-வது படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்குகிறார் என்றும் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பதாகவும், படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல நகைச்சுவை நடிகர் காலமானார்!
பிரபல இந்தி மற்றும் மராத்தி பட நகைச்சுவை நடிகர் அதுல் பர்சுரே (57) காலமானார். நாடகங்களில் இருந்து சினிமாவுக்கு வந்த அவர், "ஜிந்தகி 50 50", "லவ் ரெசிபி", "கட்டா மிட்டா", "கல்கத்தா மெயில்" உள்ளிட்ட பல திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் சிறந்து விளங்கினார்.
புகழின் மகள் சாதனை
குக் வித் கோமாளி புகழின் மகள் ரிதன்யா. 1 வயதே ஆன ரிதன்யா, தனது திறமையால் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி, சர்வதேச சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். 17 வினாடிகளில் 2 கிலோ டம்புளை இடைவிடாமல் பிடித்துக் கொண்டு சாதனை படைத்துள்ளார். இளம் வயதில் இவ்வளவு திறமை காட்டியதால், ரிதன்யாவிற்கு பல்வேறு துறைகளில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்த சாதனையை பார்த்து மகிழ்ந்த புகழ் – பென்ஸி தம்பதியினர், மகள் ரிதன்யாவின் திறமையை உலகிற்கு காட்டியதற்கு பெருமிதம் அடைந்துள்ளனர்.