Story Of Song : ஒரு வேளை சோற்றுக்கே வழி இல்லாமல் அலைந்த கண்ணதாசன்.. பாடலாக எழுதி இயக்கி ஹிட் ஆன பாடல்!-the story of the song manithan enbavan dhaivamagalam featured in the film sumathangi - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Story Of Song : ஒரு வேளை சோற்றுக்கே வழி இல்லாமல் அலைந்த கண்ணதாசன்.. பாடலாக எழுதி இயக்கி ஹிட் ஆன பாடல்!

Story Of Song : ஒரு வேளை சோற்றுக்கே வழி இல்லாமல் அலைந்த கண்ணதாசன்.. பாடலாக எழுதி இயக்கி ஹிட் ஆன பாடல்!

Divya Sekar HT Tamil
Sep 11, 2024 03:26 PM IST

Story Of Song : பாடல் ஆசிரியராக சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சென்னை வந்த கண்ணதாசனுக்கு போதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் ஒரு வேளை சோற்றுக்கே வழி இல்லாமல் அலைந்துகொண்டிருந்தார்.

Story Of Song : ஒரு வேளை சோற்றுக்கே வழி இல்லாமல் அலைந்த கண்ணதாசன்.. பாடலாக எழுதி இயக்கி ஹிட் ஆன பாடல்!
Story Of Song : ஒரு வேளை சோற்றுக்கே வழி இல்லாமல் அலைந்த கண்ணதாசன்.. பாடலாக எழுதி இயக்கி ஹிட் ஆன பாடல்!

மிகவும் ரசிக்கப்படும் பாடல்

'மனிதன் என்பவன் தெய்வமாகலாம்', 'மயக்கமா கலக்கமா' ஆகிய பாடல்கள் இந்தப் படத்தில் இடம்பெற்றவை தான். இன்றளவும் மிகவும் ரசிக்கப்படும் பாடல்களாக இருந்து வருகிறது.

ஓய்வுபெற்ற தந்தை சாரங்கபாணி, இளைய சகோதரர் ஜெமினி கணேசன் மற்றும் தங்கை எல். விஜயலட்சுமி ஆகியோரை உள்ளடக்கிய குடும்பத்தை முத்துராமன் பார்த்துக் கொள்கிறார்.

தேவிகாவை காதலிக்க வைக்கிறார்

ஜெமினி கணேசன் ஒரு கல்லூரி மாணவர், அவர் தனது நண்பர்கள், நாகேஷ் மற்றும் பிறரால் அவர் அவர்களின் முன்னாள் பள்ளி ஆசிரியர் வி.எஸ். ராகவனின் ஒரே மகளான தேவிகாவை காதலிக்க முடியுமா என சவால் விடுக்கின்றனர். ஜெமினி கணேசன் சவாலை ஏற்றுக்கொண்டு, ஆங்கில இலக்கியம் கற்க முயற்சிக்கும் மாணவராக அவர்களது வீட்டிற்குள் நுழைகிறார். நாட்கள் செல்ல செல்ல, அவர் தேவிகாவை காதலிக்க வைக்கிறார்.

இந்தத் தருணத்தில் முத்துராமனுக்கு வேலை இழப்பு ஏற்படுகிறது. இதனால், அதிர்ச்சி அடையும் அவர் குடும்பத்தினரிடம் கூறுகிறார். இதைத் தொடர்ந்து ஜெமினி கணேசன் வேலைக்குச் செல்கிறார். அப்போது ஒரு பர்ஸை கண்டெடுக்கும் அவர், அது யாருடையது என கேட்டு கொடுக்க செல்கிறார். பார்த்தால் அது ஓய்வு பெற்ற நீதிபதியின் பர்ஸ் என்பது தெரியவருகிறது. 

தேவிகா, ஜெமினி காதல் என்ன ஆனது

அவர் ஜெமினி கணேசனின் நேர்மையைப் பாராட்டி, தனது மகளை மணமுடித்துக் கொடுக்க முடிவு செய்கிறார். அதுமட்டுமல்லாமல், முத்துராமனுக்கு வேலை வாங்கி தருவதாக உறுதியளிக்கிறார். தேவிகா, ஜெமினி காதல் என்ன ஆனது என்பது மீதிக் கதை. விஸ்வநாதன்-ராமமூர்த்தி இந்தப் படத்திற்கு இசையமைத்தனர். ஏ.வின்சென்ட் கேமிராமேனாக பணிபுரிந்தார்.

இந்த படத்தில் இடம்பெற்ற மனிதன் என்பவன் தெய்வமாகலாம் என்ற பாடல் கண்ணதாசன் கடந்து வந்த பாதை. இப்பாடலை அவரே எழுதி இயக்கியுள்ளார். தான் வறுமையில் இருந்த காலக்கட்டத்தில் தான் சந்தித்த வலியை உணர்த்துவதற்காக ஒரு பாடலை எழுதி அதில் தன்னை போலவே ஒரு நடிகரையும் நடிக்க வைத்துள்ளார் கண்ணதாசன்.

போலீஸ் அவமானப்படுத்தி விரட்டி அடிக்கிறார்

பாடல் ஆசிரியராக சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சென்னை வந்த கண்ணதாசனுக்கு போதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் ஒரு வேளை சோற்றுக்கே வழி இல்லாமல் அலைந்துகொண்டிருந்தார். அந்த காலக்கட்டத்தில் ஒருநாள் இரவு பசியுடன் மெரினா கடற்கரையில் படுத்து தூங்கிக்கொண்டிருந்த கண்ணதாசனை ஒரு போலீஸ் அதிகாரி வந்து எழுப்பியுள்ளார். இங்கு படுக்க கூடாது என்று சொல்ல, வேலை தேடி சென்னை வந்தேன் எனக்கு இங்கு யாரையும் தெரியாது என கண்ணதாசன் கூறியுள்ளார்.இதை கேட்ட போலீஸ், யாரையும் தெரியாம எதுக்கு சென்னை வந்த  இங்கு படுக்க கூடாது. அப்படி படுக்க வேண்டும் என்றால் எனக்கு 25 பைசா கொடு என்று கேட்டுள்ளார்.

இதற்கு அவர் என்னை வெட்டி போட்டாலும் என்னிட்டம் ஒரு பைசா இல்லை என்று சொல்ல, அப்படியென்றால் இங்கே படுக்காதே என்று அந்த போலீஸ் அவமானப்படுத்தி விரட்டி அடிக்கிறார். அப்போது கண்ணதாசன் மெரினாவில் இருக்கும் காந்தி சிலை வரை நள்ளிரவில் நடந்தே வந்துள்ளார். தான் சந்தித்த வலியை காட்சியாக மாற்ற நினைத்து கண்ணதாசன், அதற்காக ஒரு பாடலை எழுதி முடிக்கிறார்.

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்

அந்த பாடல் தான் மனிதன் என்பவன் தெய்வமாகலாம். ஜெமினி கணேசன் நடிப்பில் வெளியான சுமைதாங்கி படத்தில் இடம் பெற்ற  இந்த பாடலுக்கு எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையமைத்திருந்தனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.