Mazhai Pidikatha Manithan Review: ‘பிடிக்கும்.. ஆனா பிடிக்காது’ மழை பிடிக்காத மனிதன் விமர்சனம்!
Mazhai Pidikatha Manithan Review: ‘வில்லனை பேசியே திருத்துவதெல்லாம் பேசிக் கொல்லும் ரகமாக எடுத்துக் கொள்ளலாம். மேகா ஆகாஷ் வரும் காதல் காட்சிகள், குழப்பும் படத்தை மேலும் குழப்புகிறது. பாடல்கள் ரசிக்கும்படியாக இருக்கிறது. எடிட்டிங் ஓகே. அதே ரகத்திற்கு மற்றவையும் இருந்திருந்தால், ரசித்திருக்கலாம்’
Mazhai Pidikatha Manithan Review: வாரத்திற்கு ஒரு படம் வெளியாகி வந்த இருவரில் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ், மற்றொருவர் விஜய் ஆண்டனி. இந்த இருவரின் படங்களை பார்ப்பவர்களுக்கு, எந்த படத்திற்கு வந்திருக்கிறோம் என்கிற குழப்பம் வரும் அளவிற்கு, டஜன் கணக்கில் படங்களில் வந்து சென்றனர். சமீபத்தில் அது ஓய்ந்திருந்தது. மீண்டும் தன்னுடைய இன்னிங்ஸை தொடங்கியிருக்கிறார் முன்னாள் இசையமைப்பாளரும், இந்நாள் நடிகருமான விஜய் ஆண்டனி.
நமக்கு ஒரு உண்மை தெரிஞ்சு ஆகணும்
முன்பு விஜய் ஆண்டனி நடித்த நான், சலீம் படங்களின் தொடர்ச்சியாக தான், இந்த திரைப்படம் இருப்பதாக படம் பார்த்த பலரும் கூறுகிறார்கள். ஆனால், படத்திற்கு உரியவர்கள், அந்த சர்சை வந்த போதே மறுத்தார்கள். ஆனால் கதை என்னவோ முன்பு வெளியான விஜய் ஆண்டனியின் ஏதோ ஒரு படத்தின் தொடர்ச்சி போலவே தொடங்குகிறது.
ரகசிய பாதுகாப்பு படையில் பணியாற்றி வரும் விஜய் ஆண்டனிக்கு உடன் பணியாற்றுபவரின் தங்கை உடன் திருமணம் நடைபெறுகிறது. நான் படத்தின் தொடர்ச்சியாக, தன் மகன் கொலைக்கு பழிவாங்க, தந்தை ஒருவர், விஜய் ஆண்டனியை கொலை செய்ய வருகிறார். ஆனால், எதிர்பாராமல், விஜய் ஆண்டனியின் மனைவி கொல்லப்படுகிறார்.
மீண்டும் விஜய் ஆண்டனியை கொலை செய்துவிடுவார்களோ என்ற அச்சத்தில், கமாண்டர் சரத்குமார் ஒரு திட்டம் போடுகிறார். விஜய் ஆண்டனி இறந்தது இறந்ததாக இருக்கட்டும் என்று நம்ப வைத்துவிட்டது, அவரை அந்தமானில் மறைத்து வைக்கிறார். புதிய ஊரில் புதிய உறவுகள் கிடைக்கிறது. உறவுகள் வரும் போது, உரசல் இல்லாமல் இருக்குமா? வட்டிக்காரர்களால் பெட்டி நிறைய புதிய பிரச்னை வருகிறது.
எங்கெல்லாம் பிரச்னை இருக்கிறது
அந்த பிரச்னைகளில் இருந்து விஜய் ஆண்டனி தப்பித்தாரா? சிக்கினாரா என்பது தான் மழை பிடிக்காத மனிதன். மனைவி இறக்கும் போது மழை பெய்ததால், மழை பிடிக்காதாம்.. ‘ஒரு நியாயம் வேணாமா?’ என்பது போல் படம் பார்ப்பவர்களுக்கும் இருக்கிறது. விஜய் ஆண்டனிக்கு ஆக்ஷன் காட்சிகள் சுத்தமாக ஒட்டவில்லை. கதையோடு கச்சிதமாக பொருந்தவில்லை.
வில்லனை பேசியே திருத்துவதெல்லாம் பேசிக் கொல்லும் ரகமாக எடுத்துக் கொள்ளலாம். மேகா ஆகாஷ் வரும் காதல் காட்சிகள், குழப்பும் படத்தை மேலும் குழப்புகிறது. பாடல்கள் ரசிக்கும்படியாக இருக்கிறது. எடிட்டிங் ஓகே. அதே ரகத்திற்கு மற்றவையும் இருந்திருந்தால், ரசித்திருக்கலாம். அடுத்த பாகத்திற்கான அடித்தளத்தோடு மழைப் பிடிக்காத மனிதன் முடிகிறது. முதல் பாகத்தையும் நமக்கு பிடித்த மாதிரி கொஞ்சம் எடுத்திருக்கலாம்.
சில கதாபாத்திரங்கள் கச்சிதமாக இருக்கின்றன. பல கதாபாத்திரங்கள் ஓவர் டோஸ் ஆக இருக்கின்றன. அதுவே மைனாஸாகவும் தெரிகிறது. ‘எனக்கே தெரியாமல் சில காட்சிகளை சேர்த்துவிட்டார்கள்’ என்று வீடியோ வெளியிட்டிருக்கிறார் இயக்குனர் விஜய் மில்டன். அப்படியென்றால், யார் தான் இந்த படத்தின் கதைக்கு பொறுப்பு? பார்க்கும் நாம் தான் என்றால், கண்டிப்பாக மழை பிடிக்காத மனிதனை பிடிப்பது கொஞ்சம் சிரமம் தான்.
தொடர்ந்து நிறைய தோல்வி படங்களை தந்த விஜய் ஆண்டனிக்கு, இந்த திரைப்படமும் சுமார் ரகம் தான் என்பது கவலைக்குரியது தான்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்