Top 10 Songs Today : ஆச கூட.. விசில் போடு.. பத்தவைக்கும் பாடல்.. ஸ்பாட்டிபை தளத்தின் டாப் 10 தமிழ் பாடல்களின் லிஸ்ட்!
Top 10 Songs Today : விஜய்யின் கலக்கல் நடனத்தில் மட்ட பாடல், உலக அளவில் பேமஸ் ஆகியிருக்கும் காத்து மேல பாடல் வரை என இன்றைய டாப் 10 பாடல்களை இங்கே பார்க்கலாம்.

ஆச கூட பாடல்
சுயாதீன இசைக்கலைஞரான சாய் அபயங்கர் இசையமைத்து பாடிய ஆச கூட பாடல் இளைஞர்கள் மத்தியில் சமீபகால சென்சேஷனாக இருந்து வருகிறது. இசை,குரல், பாடல் வரிகள், நடனம் என அனைத்திலும் இந்த பாடல்கள் ஸ்கோர் செய்துள்ளன. சாய் அபயங்கர், பிரபல பின்னணி பாடகர்கள் திப்பு - ஹரிணி தம்பதியின் மகன் ஆவார். தனது முதல் பாடலிலேயே ரசிகர்களின் மனத்தைக் கவர்ந்தார் சாய் அபயங்கர். இவரின் இந்த பாடலுக்கு இன்ஸ்டாவில் அனைவரும் ரீல்ஸ் செய்து ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
மட்ட பாடல்
ஏஜிஎஸ் நிறுவனம் அர்ச்சனா கல்பாத்தி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், மோகன், பிரசாந்த், சினேகா, பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள கோட் திரைப்படம், செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் விஜயின் கலக்கல் நடனத்தில் மட்ட பாடல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கிடையே கோட் படத்தில் இடம்பெற்ற மட்ட பாடலுக்கு விஜய்யுடன் இணைந்து திரிஷா நடனமாடியிருக்கிறார். இதுவரை அவர் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடுவதென்பது அரிது. இப்போது விஜய்யுடன் ஆடியிருப்பதால் அவருக்கும், விஜய்க்கும் உள்ள நட்பு அனைவருக்கும் தெரிந்திருக்கிறது.
வாட்டர் பாக்கெட்
ஆடியோ ரிலீஸில் இருந்து ட்ரெண்டிங்கில் இருந்து வரும் பாடலாக ராயன் படத்தில் இடம்பெறும் வாட்டர் பாக்கெட் பாடல் உள்ளது. படத்தின் ரிலீஸுக்கு பின்னரும் மவுசு குறையாமல் அதிகம் பேரால் ரசிக்கப்பட்டு வருகிறது. கானா காதர் பாடல் வரிகள் எழுத ஏ.ஆர். ரஹ்மான் இசையில் சந்தோஷ் நாரயணன், ஷ்வேதா மேனன் ஆகியோர் பாடலை பாடியுள்ளனர்