தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vettaiyan:‘வேட்டையன்’ திரைப்படத்தின் ஓடிடி உரிமை: கோடிகளை கொட்டி வாங்கிய அந்த ஓடிடி நிறுவனம்? எவ்வளவு தொகை தெரியுமா?

Vettaiyan:‘வேட்டையன்’ திரைப்படத்தின் ஓடிடி உரிமை: கோடிகளை கொட்டி வாங்கிய அந்த ஓடிடி நிறுவனம்? எவ்வளவு தொகை தெரியுமா?

Marimuthu M HT Tamil
Jun 11, 2024 01:46 PM IST

Vettaiyan: ’வேட்டையன்’ திரைப்படத்தின் ஓடிடி உரிமையை கோடிகளை கொட்டி, ஒரு முக்கிய ஓடிடி நிறுவனம் வாங்கியுள்ளது. அது எவ்வளவு தொகை என்பது குறித்து அறிந்துகொள்வோம்.

Vettaiyan:‘வேட்டையன்’ திரைப்படத்தின் ஓடிடி உரிமை: கோடிகளை கொட்டி வாங்கிய அந்த ஓடிடி நிறுவனம்? எவ்வளவு தொகை தெரியுமா?
Vettaiyan:‘வேட்டையன்’ திரைப்படத்தின் ஓடிடி உரிமை: கோடிகளை கொட்டி வாங்கிய அந்த ஓடிடி நிறுவனம்? எவ்வளவு தொகை தெரியுமா?

ட்ரெண்டிங் செய்திகள்

வேட்டையனின் வளர்ச்சியில் ரஜினி:

'ஜெய் பீம்’ பட இயக்குநர் டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில் ’வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

இந்தப் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ஆந்திரா மாநிலம், கடப்பாவில் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு சூட்டிங்கினை முடித்துவிட்டு, இமயமலைக்கு ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பின்னர் பத்ரிநாத், கேதார்நாத் உள்பட பல்வேறு இடங்களுக்கு அவர் சென்று வந்தார். அதன்பின், சமீபத்தில் டெல்லியில் பிரதமர் மோடி, மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்கும் நிகழ்வில் கலந்துகொண்டார். 

'வேட்டைன்’ திரைப்படத்தில் ரஜினிகாந்துடன், ஃபகத் பாசில், ராணா டகுபதி ஆகியோரும் படம் முழுக்க நடித்துள்ளனர். மஞ்சு வாரியர் கதையின் நாயகியாக நடித்துள்ளார். மேலும் துஷாரா விஜயன், ரித்திகா சிங், ரக்‌ஷன் உள்பட பலரும் நடித்துள்ளார்கள்.

’’வேட்டையன்’’ படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு படம் உருவாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் இணைந்து நடித்துள்ளார்கள். ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்கிறார். பிலோமின் ராஜ் எடிட்டிங்கினை மேற்கொண்டார். 

வேட்டையன் ரிலீஸ் தேதி:

நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு ஆன்மிக யாத்திரை சென்றபோது, ஆன்மிகத் துறவியிடம் ரஜினிகாந்த் உரையாடல் நடத்தும் வீடியோ வெளியாகியுள்ளது. அதில் ’வேட்டையன்’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்து ரஜினிகாந்த் சில தகவல்களைப் பகிர்ந்திருந்தார்.

அதன்படி, படம் அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வரும் என அவர் துறவியிடம் தெரிவித்தார். அக்டோபர் 12ஆம் தேதி தசரா கொண்டாடப்பட இருக்கும் நிலையில், இரண்டு நாள்கள் முன்னரே படம் வெளியாகும் எனத் தெரிகிறது.

முன்னதாக படத்தை அக்டோபர் மாதம் திரையிட திட்டமிட்டிருப்பதாக படக்குழுவினர்கள் தெரிவித்திருந்தனர். அதாவது படம் தசரா விடுமுறையை ஒட்டி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரஜினிகாந்த் படத்தின் ரிலீஸ் தேதியை வெளிப்படுத்தியிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. 

இருப்பினும் படக்குழுவினர் மற்றும் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் '’வேட்டையன்’’ ரிலீஸ் குறித்து பகிரப்படவில்லை. இதற்கிடையே வேட்டையன் படத்தின் டைட்டில் டீசர் கடந்த டிசம்பர் மாதம் ரஜினிகாந்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியிடப்பட்டது.

ஜூனியர் என்டிஆர் தேவரா படத்துடன் மோதல்:

தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோ ஜூனியர் என்டிஆர் ’’தேவரா’’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ஹீரோயினாக பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நடிக்கிறார். இதன் மூலம் தென் இந்திய சினிமாவில் அவர் கதாநாயகியாக அறிமுகமாகிறார். தேவரா படமும் தசரா விடுமுறை தினத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த படத்துக்கும் ’’வேட்டையன்’’ படத்துக்கும் இடையே கடும்போட்டி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ‘வேட்டையன்’ திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி ரூ. 65 கோடிக்கு கைப்பற்றியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ‘வேட்டையன்’ திரைப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் ப்ரைம் ஓடிடி நிறுவனம் ரூ.90 கோடிக்கு கைப்பற்றியுள்ளதாகத் தெரிகிறது.

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்