தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rajini On Vettaiyan: ஆன்மிக துறவியுடன் உரையாடல்! கூலி அப்டேட், வேட்டையன் ரிலீஸ் டேட் பகிர்ந்த ரஜினி - ரசிகர்கள் குஷி

Rajini on Vettaiyan: ஆன்மிக துறவியுடன் உரையாடல்! கூலி அப்டேட், வேட்டையன் ரிலீஸ் டேட் பகிர்ந்த ரஜினி - ரசிகர்கள் குஷி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 03, 2024 05:47 PM IST

ஆன்மிக துறவியுடன் உரையாடல் மேற்கொண்ட போது தனது புதிய படமான வேட்டையன் ரிலீஸ் டேட், கூலி படத்தின் அப்டேட்களை வெளிப்படுத்தியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதுதொடர்பான விடியோவும் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

ஆன்மிக துறவியுடன் உரையாடலில் கூலி அப்டேட், வேட்டையன் ரிலீஸ் டேட் பகிர்ந்த ரஜினி
ஆன்மிக துறவியுடன் உரையாடலில் கூலி அப்டேட், வேட்டையன் ரிலீஸ் டேட் பகிர்ந்த ரஜினி

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த படத்தில் பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன், மலையாள நடிகர் ஃபகத் பாசில், தெலுங்கு நடிகர் ராணா டகுபதி, துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்பட பலரும் நடித்துள்ளார்கள். படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி வரும் வேட்டையன் படத்தில் தனது காட்சிகளை நிறைவு செய்த ரஜினிகாந்த் இமயமலைக்கு ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பத்ரிநாத், கேதார்நாத் உள்பட பல்வேறு இடங்களுக்கு அவர் சென்று வந்தார்.

வேட்டையன் ரிலீஸ் தேதி

இதையடுத்து ஆன்மிக துறவியிடம் ரஜினிகாந்த உரையாடல் நிகழ்த்தும் விடியோ ஒன்று வைரலாகியுள்ளது. அதில் வேட்டையன் படம் ரிலீஸ் தேதி குறித்து ரஜினிகாந்த் வெளிப்படுத்தியுள்ளார்.

அதன்படி படம் அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வரும் என அவர் துறவியிடம் தெரிவித்தார். அக்டோபர் 12ஆம் தேதி தசரா கொண்டாடப்பட இருக்கும் நிலையில், இரண்டு நாள்கள் முன்னரே படம் வெளியாகும் என தெரிகிறது.

முன்னதாக படத்தை அக்டோபர் மாதம் திரையிட திட்டமிட்டிருப்பதாக படக்குழுவினர்கள் தெரிவித்திருந்தனர்.அதாவது படம் தசரா விடுமுறையை ஒட்டி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரஜினிகாந்த் படத்தின் ரிலீஸ் தேதியை வெளிப்படுத்தியிருப்பது ரசிகர்கர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.

இருப்பினும் படக்குழுவினர் மற்றும் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வேட்டையன் ரிலீஸ் குறித்து பகிரப்படவில்லை. இதற்கிடையே வேட்டையன் படத்தின் டைட்டில் டீசர் கடந்த டிசம்பர் மாதம் ரஜினிகாந்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியிடப்பட்டது.

கூலி அப்டேட்

ஆன்மிக துறவியுடனான உரையாடலில் மற்றொரு தகவலையும் வெளிப்படுத்தினார் ரஜினிகாந்த். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடிக்க இருக்கும் புதிய படமான கூலி படத்தின் ஷூட்டிங் வரும் 10ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாக கூறியுள்ளார். இதனால் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமைந்துள்ளது.

கூலி படத்தில் ரஜினியுடன் நடிக்க இருக்கும் மற்ற நடிகர்கள் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இந்த படத்தின் டைட்டில் லுக் மற்றும் போஸ்டர்க் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் வாரத்தில் கூலி படம் குறித்து பல சர்ப்ரைஸான அப்டேட்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூனயர் என்டிஆர் தேவரா படத்துடன் மோதல்

தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோ ஜூனியர் என்டிஆர் தேவரா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஹீரோயினாக பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நடிக்கிறார். இதன் மூலம் தென் இந்திய சினிமாவில் அவர் கதாநாயகியாக அறிமுகமாகிறார். தேவரா படமும் தசரா விடுமுறை தினத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த படத்துக்கும் வேட்டையன் படத்துக்கும் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்