NTR Memorial Day: ’தெலுங்கு மக்களின் மனித கடவுள்’ NTR நினைவுதினம் இன்று!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ntr Memorial Day: ’தெலுங்கு மக்களின் மனித கடவுள்’ Ntr நினைவுதினம் இன்று!

NTR Memorial Day: ’தெலுங்கு மக்களின் மனித கடவுள்’ NTR நினைவுதினம் இன்று!

Kathiravan V HT Tamil
Jan 18, 2024 05:45 AM IST

”ஆந்திர மாநிலத்தில் இன்றும் பலரது நெஞ்சங்களில் தெய்வமாக நந்தமூரி தாரக ராமாராவ் எனும் என்டிஆர் வாழ்ந்து வருகிறார்”

நடிகரும் ஆந்திர முன்னாள் முதலமைச்சருமான என்.டி.ராமாராவ்
நடிகரும் ஆந்திர முன்னாள் முதலமைச்சருமான என்.டி.ராமாராவ்

ஆந்திர மக்களின் மனதில் கடவுளாக வாழ்ந்த தலைவர் இவர். தமிழ்நாட்டில் எம்ஜிஆர் இருந்தது போல ஆந்திர மாநிலத்தில் திரையுலகில் இருந்து அரசியல் வாழ்க்கையில் பயணம் செய்தவர் என்டிஆர்.

சினிமா

மனதேசம் என்ற திரைப்படத்தில் காவல் அதிகாரியாக 1949 ஆம் ஆண்டு திரையுலகில் தடம் பதித்தார். பாதாள பைரவி என்ற திரைப்படத்தின் மூலம் மக்களிடையே பிரபலமடையத் தொடங்கி ஆகப்பெறும் நாயகனாக உருவெடுத்தார்.

’மாயா பஜார்’ என்ற திரைப்படத்தின் மூலம் கிருஷ்ணனாக நடித்த என்டிஆர், அதற்குப் பிறகு வந்த அனைத்து படங்களிலும் கிருஷ்ண பரமாத்மாவாக மக்களிடத்தில் தோன்றினார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த கர்ணன் திரைப்படத்திலும் இவரே கிருஷ்ண பரமாத்மாவாக நடித்திருப்பார். ஒருவேளை உண்மையில் கிருஷ்ண பரமாத்மா இருந்திருந்தால் இப்படித்தான் இருந்திருப்பார் போல என மக்களின் மனதில் கடவுளாகப் பதிந்தார்.

அரசியல்

தெலுங்கு சினிமாவில் கொடி கட்டி பறந்த என்டிஆர் 1980 ஆம் ஆண்டு திருவிழா வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற்று தீவிர அரசியல் பணியில் ஈடுபட்டார். திரைத்துறையில் இருக்கும் சிக்கல்களுக்கு எதிராகக் குரல்களைக் கொடுத்து அதனை நிவர்த்தி செய்யக் கடமையாக முயற்சி செய்தவர் என்டிஆர்.

அரசியலில் ஈடுபடுபவர்கள் மக்களிடம் நேரடி தொடர்பில் இருக்க வேண்டும் என்பதை ஊக்குவிக்கும் விதமாக, 1982 ஆம் ஆண்டு தெலுங்கு தேச கட்சியைத் தொடங்கி ஆந்திர மாநிலம் முழுவதும் சைதன்ய ரதம் என்று பெயரிடப்பட்ட வேனில் பயணம் மேற்கொண்டு மக்களை நேரடியாகச் சந்தித்தார்.

பின்னர் 1983 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்தின் பத்தாவது முதலமைச்சராக அரியணையில் என்டிஆர் அமர்ந்தார். 1994 ஆம் ஆண்டு வரை அசைக்க முடியாத சக்தியாக மூன்று முறை முதலமைச்சர் பதவியைத் தன்வசம் வைத்திருந்தார்.

உடல் நலக்குறைவு காரணமாக மாரடைப்பால் 1996 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18 ஆம் தேதி அன்று தனது 72 வயதில் என்டிஆர் காலமானார். ஆந்திர மாநிலத்தில் இன்றும் பலரது நெஞ்சங்களில் தெய்வமாக நந்தமூரி தாரக ராமாராவ் எனும் என்டிஆர் வாழ்ந்து வருகிறார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.