The GOAT: வசூலில் நிலவிய சறுக்கல்..தளபதி விஜய்யின் இரண்டாவது படமாக தி கோட் செய்த மைல்கல் சாதனை - முழு விவரம்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  The Goat: வசூலில் நிலவிய சறுக்கல்..தளபதி விஜய்யின் இரண்டாவது படமாக தி கோட் செய்த மைல்கல் சாதனை - முழு விவரம்

The GOAT: வசூலில் நிலவிய சறுக்கல்..தளபதி விஜய்யின் இரண்டாவது படமாக தி கோட் செய்த மைல்கல் சாதனை - முழு விவரம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Sep 10, 2024 09:34 PM IST

The GOAT Box Office Collection Day 5: வசூலில் சறுக்கல் நிலவியபோதிலும், தி கோட் தளபதி விஜய்யின் இரண்டாவது படமாக வசூலில் புதிய மைல்கல் சாதனை புரிந்துள்ளது. தமிழில் 7வது படமாகவும் தி கோட் ரூ. 300 கோடி கிளப் லிஸ்டில் இணைந்துள்ளது.

The GOAT box office collection day 5: Vijay's film sees more than 50% drop on first Monday
The GOAT box office collection day 5: Vijay's film sees more than 50% drop on first Monday

ரூ. 300 கோடி கிளப்பில் விஜய்யின் இரண்டாவது படம்

கடந்த ஆண்டு அக்டோபரில் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 600 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை புரிந்தது. இதைத்தொடர்ந்து தற்போது வரும் தி கோட் திரைப்படம் ரூ. 303 கோடி வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரங்களை தெரிவிக்கும் sacnilk.com கூறியுள்ளது.

இந்த மாதத்தில் இனி வரும் நாள்களில் தமிழில் வேறு பெரிய படங்கள் எதுவும் வெளியாகப்போவதில்லை என்பதால் தி கோட் வசூல் ரூ. 500 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. லியோவுக்கு அடுத்தபடியாக ரூ. 300 கோடியை கடந்த விஜய்யின் இரண்டாவது படமாக தி கோட் உள்ளது.

கடைசியாக வெளியான விஜய் படங்களில் வாரிசு ரூ. 297 கோடி, பிகிஸ் ரூ. 295 கோடி, மாஸ்டர் ரூ. 290 கோடி என வசூல் மழை பொழிந்தன.

அதேபோல் தமிழில் 2.0, லியோ, ஜெயிலர், பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2, விக்ரம் ஆகிய படங்களை தொடர்ந்து ரூ. 300 கோடி கிளப்பில் இணையும் 7வது படமாக தி கோட் உள்ளது. 

பாதியாக சறுக்கல்

முன்னதாக, தி கோட் படத்துக்கு முதல் நான்கு நாள்கள் நல்ல ஓபனிங் கிடைத்தது. இதனால் படத்தின் முதல் வார வசூலானது ரூ. 288 கோடி என படத்தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வாக அறிவித்தனர். இதையடுத்து படத்தின் ஐந்தாம் நாளான நேற்று வசூல் முந்தைய நாள்களை காட்டிலும் பாதியாக குறைந்தது. இது வழக்கமாக விஜய் படங்கள் நடக்கும் நிகழ்வாகவே இருந்தது.

இதற்கு முன்னர் ரிலீஸான பல விஜய்யின் படங்களிலும் முதல் வாரத்துக்கு பின்னர் வரும் திங்கள் கிழமையில் படத்தின் வசூல் குறைவதும் பின்னர் நன்கு பிக்கப் ஆவதுமாகவே இருந்துள்ளது. எனவே தி கோட் படமும் இனி வரும் நாள்களில் பேமிலி ஆடியன்ஸ் வருகையால் வசூல் அதிகரிக்கலாம் என தெரிகிறது.

விறுவிறுப்பான திரைக்கதையில் தி கோட்

தி கோட் படத்தில் அப்பா, மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் விஜய் தோன்றியுள்ளார். இதில் மகனாக வரும் விஜய் டீஏஜிங் தொழில்நுட்பத்தில் 25 வயது இளைஞனாக வருகிறார். அத்துடன் அவர் வில்லனாகவும் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். 

இதுதவிர பிரசாந்த், பிரபுதேவா, மோகன், சிநேகா, லைலா, ஜெயராம், அஜ்மல் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள். விறுவிறுப்பான திரைக்கதை, ஏராளமான டுவிஸ்ட், யுவன் ஷங்கர் ராஜாவின் தெறிக்கவிடும் பிஜிஎம், விஜயகாந்த், சிவகார்த்திகேயன், த்ரிஷா போன்றோரின் கேமியோ உள்ளிட்ட அம்சங்கள் தி கோட் படத்தை ரசிக்க வைக்கும் விதமாக அமைந்துள்ளது. படத்துக்கு முதல் நான்கு நாள்கள் கலவையான விமர்சனங்கள் வெளிவந்தபோதிலும் பேமிலி ரசிகர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளது.  

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.