Box Office Today: ரஜினி பட வசூலை முந்திய வாழை..! பாக்ஸ் ஆபிஸில் புதிய மைல்கல்லை எட்டிய தி கோட்-box office today mari selvaraj vaazhai movie crosses rajinikanth laal salam collection the goat movie reach rs 300 crore - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Box Office Today: ரஜினி பட வசூலை முந்திய வாழை..! பாக்ஸ் ஆபிஸில் புதிய மைல்கல்லை எட்டிய தி கோட்

Box Office Today: ரஜினி பட வசூலை முந்திய வாழை..! பாக்ஸ் ஆபிஸில் புதிய மைல்கல்லை எட்டிய தி கோட்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Sep 11, 2024 04:45 PM IST

Box Office Today: ரஜினி பட வசூலை முந்திய வாழை திரைப்படம் இன்னும் பல திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடி வருகிறது. இந்த ஆண்டுக்கான கோலிவுட் பாக்ஸ் ஆபிஸில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது தி கோட் திரைப்படம்.

Box Office Today: ரஜினி பட வசூலை முந்திய வாழை..! பாக்ஸ் ஆபிஸில் புதிய மைல்கல்லை எட்டிய தி கோட்
Box Office Today: ரஜினி பட வசூலை முந்திய வாழை..! பாக்ஸ் ஆபிஸில் புதிய மைல்கல்லை எட்டிய தி கோட்

இந்த மாதம் பெரிய படங்கள் இனி வரும் நாள்களில் வெளியாகபோவதில்லை. எனவே ரசிகர்களுக்கு பெரிதாக சாய்ஸ் இல்லாத நிலையில் தி கோட், வாழை படங்கள் பார்க்க வேண்டிய நிலை இருப்பதால் அந்த படங்களின் வசூல் மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தி கோட் வசூல் இதுவரை எவ்வளவு

தளபதி விஜய் நடிப்பில் வெளியான தி கோட் வசூல் தொடக்க வாரத்தின் இறுதியில் சீராக உயர்ந்த பிறகு, பாக்ஸ் ஆபிஸ் வசூல் கடந்த ஞாயிற்றுக்கிழமை ரூ.34 கோடியை எட்டியது. இதன்பின்னர் திங்கள்கிழமை 50 சதவீதத்துக்கும் மேல் சரிந்து ரூ.14 கோடியாக இருந்தது. இதனால் விஜய்யின் படம் உள்நாட்டு பாக்ஸ் ஆபிஸில் முக்கியமான திங்கள்கிழமை தேர்வில் தேர்ச்சி பெறவில்லை

முதல் வார இறுதி வரை ரூ. 288 கோடி வசூலித்திருந்த தி கோட், தற்போது கூடுதலாக ரூ. 14 கோடி வசூலை ஈட்டி ரூ. 302 கோடியை எட்டியுள்ளது. இதன்மூலம் ரூ. 300 கோடியை எட்டி சாதனை புரிந்துள்ளது. உலகம் முழுவதும் தி கோட் படத்தின் வசூல் ரூ. 316.44 கோடி என கூறப்படுகிறது. இந்தியாவில் மட்டும் படம் ரூ. 158 கோடி வசூலை ஈட்டியுள்ளது

வாழை பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்

பெரிய நட்சத்திரங்கள் யாரும் இல்லாமல், எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமலும் வெளியான வாழை திரைப்படம் முதல் நாளில் ரூ. 1.15 கோடி வசூல் செய்தது. தொடர்ந்து படம் குறித்து நேர்மறை விமர்சனங்கள் வெளியாக முதல் வார முடிவில் ரூ. 8.8 கோடி வசூல் செய்தது.

இதையடுத்து படம் வெளியாகி மூன்று வாரங்களுக்கு மேல் ஆகியிருக்கும் நிலையில் தற்போது வரை ரூ. 36.35 கோடி வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் இந்த படம் இன்னும் பல திரையரங்குகளில் ஹவுஸ் புஃல் காட்சிகளாக ஓடி வருகிறது.

எந்த பெரிய நடிகர்களும் இல்லாமல் ரஜினிகாந்தின் லால் சலாம் படத்தின் வசூலை முறியடித்த படமாகவும் வாழை இருந்து வருகிறது.

கோலிவுட்டை பொறுத்தவரை தி கோட், வாழை ஆகிய இரண்டு சினிமாக்கள் மட்டுமே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று திரையரங்குகளிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

வரும் வராம் எந்தவொரு புதிய படமும் வெளியாகவில்லை. எனவே தி கோட், வாழை ஆகிய படங்களின் வசூல் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

செம்படம்பர் ரிலீஸ்

இந்த மாதத்தில் எந்தவொரு பெரிய ஹீரோக்களின் படங்களும் வெளியாகும் என அறிவிக்கப்படவில்லை. முன்னணி ஹீரோவான கார்த்தி நடித்திருக்கும் மெய்யழகன் செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகிறது.

அதேபோல் பாரத் நடித்த ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் மெட்ராஸ், விஜய் ஆண்டனி நடித்த ஹிட்லர், சத்யராஜ் நடித்த தோழர் சேகுவேரா, எம். சசிக்குமார் நடித்த நந்தன், ஹரிஷ் கல்யாண் நடித்த லப்பர் பந்து போன்ற படங்கள் வெளியாக இருக்கின்றன.

இதற்கிடையே கடந்த இரு வாரங்களுக்கு முன் வெளியான தங்கலான், டிமாண்டி காலனி 2, ரகுதாத்தா போன்ற படங்கள் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றன. அத்துடன் இந்த படங்கள் வரும் வாரங்களில் ஓடிடியிலும் வெளியாக இருக்கின்றன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.