Blue Sattai Maran: ‘உன்ன பத்தி தெரிஞ்சுதான் ரஜினி கழட்டி விட்டுட்டாரு.. இப்ப விஜய் பக்கம்- சிவாவை கிழித்த ப்ளூ சட்டை!
Blue Sattai Maran: என்னை யாரும் தூக்கி விடல. சொந்தமா கஷ்டப்பட்டு முன்னேறுனதா சொல்ல வேண்டியது. ஆனா தலைவர் பட டைட்டிலை உன் படங்களுக்கு வச்ச. அவரை மாதிரி மிமிக்ரி பண்ண, அவர் படத்துல மகனா நடிக்க ஆசைப்பட்ட. அவர் கழட்டி விட்டதும்.. - ப்ளூ சட்டை மாறன்!
கோட் திரைப்படத்தில் விஜய் தன்னுடைய இடத்தை சிவகார்த்திகேயனுக்கு விட்டுத்தருவது போன்ற காட்சி ஒன்று வருகிறது. அந்தக்காட்சியில் விஜய்க்கு ரிப்ளை கொடுக்கும் சிவகார்த்திகேயன், உங்கள் இடத்தில் இருந்து இனி நான் மற்றவற்றை பார்த்துக்கொள்கிறேன் என்பார். இதன் மூலம் இனி சினிமாத்துறையில் விஜய் இடத்தில் சிவகார்த்திகேயன் இருப்பார் என்பது அந்தக்காட்சியின் மூலம் விளக்கப்பட்டது. இந்தக்காட்சி பல்வேறு விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், பிரபல விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் இது குறித்து தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
இது குறித்து அவர் பதிவிட்ட எக்ஸ் பதிவில், “ ப்ளடி ராஸ்கல்..எந்த பேட்டி எடுத்தாலும்.. என்னை யாரும் தூக்கி விடல. சொந்தமா கஷ்டப்பட்டு முன்னேறுனதா சொல்ல வேண்டியது. ஆனா தலைவர் பட டைட்டிலை உன் படங்களுக்கு வச்ச. அவரை மாதிரி மிமிக்ரி பண்ண, அவர் படத்துல மகனா நடிக்க ஆசைப்பட்ட. அவர் கழட்டி விட்டதும்..
இப்ப விஜய் ரசிகர்களை கவர் பண்ண.. அவர் படத்துல கேமியோ பண்ற, உங்க இடத்தை நான் பாத்துக்கறேன்னு சொல்ற, நான்தான் அடுத்த தளபதின்னு மீடியா முழுக்க கூவ சொல்ற. பல வருசம் கஷ்டப்பட்டு உயர்ந்த நடிகர்களோட புகழை வச்சி குறுக்கு சந்துல மேல வர்றதுக்கு பேருதான்.. சொந்தமா முன்னேறுறதா?” என்று பதிவிட்டு இருக்கிறார். இது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
தி கோட் துப்பாக்கி சீன் வைக்க சொன்னது யார் - வெங்கட் பிரபு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் நிகழ்ச்சியில் கேள்வியாக முன்வைக்கும் நடிகை சங்கீதாவிடம் இயக்குநர் வெங்கட் பிரபு மெய்சிலிர்த்துப் பதில் அளித்தார். அதில் பதில் சொன்ன வெங்கட் பிரபு, ‘’ அது எவ்வளவு பெரிய விஷயம். அதை ஒத்துக்கிட்டு விஜய் சார் பண்ணணும்கிறதுதான். சிவகார்த்திகேயன் ஃபேன் பாய். சிவாவுக்கு விஜய் சார் ரொம்பப்பிடிக்கும். இந்தப் படத்தில் நான் எழுதினது இதை வச்சிக்கோங்க. சுட்ருங்கன்னு சொல்லி மிரட்டுங்கன்னு சொல்லிட்டுப் போவார். விஜய் சாராக தான் இதைப் போட்டார். துப்பாக்கியைப் பிடிங்க சிவா.
எவ்வளவு பெரிய விஷயம்
துப்பாக்கி அவர் படம். துப்பாக்கியைப் பிடிங்க சிவா. எல்லாமே உன் கையில் தான் இருக்குது அப்படின்னு சொன்னவுடனே, அதாவது இங்க இருக்கிறவங்க உயிர் எல்லாம் உங்கள் கையில் தான் இருக்குது அப்படின்னு சொன்னதும் படத்திலேயும் கனெக்ட் ஆகும். ஃபியூட்டிஃபுல்லாக ஹேண்டில் பண்ணுனார். உடனே, சிவா சொல்வார். சார் நீங்க இதை விட பெரிய வேலைக்குப் போறீங்க. இதை நான் பார்த்துக்கிறேன்.
நீங்க அதைப்பாருங்கன்னு சொல்வார். உடனே, விஜய் சார் தம்ப்ஸ்அப் காட்டிட்டுப்போவார். அவர் மனசோட ஆழம் தெரியுது. எனக்கு அய்யோ அவர் சினிமாவிட்டுட்டுப் போறாரே, அப்படின்னு மனசு கஷ்டப்படுறதா, என்ன சொல்றதுன்னு குழப்பமாக இருந்துச்சு. விஜய் சார் போனதற்குப் பின், சிவகார்த்திகேயன் சாருக்கும் மோகன் சாருக்கும் இடையில் என்ன நடந்தது அப்படின்னு ஒரு ஸீன் இருக்கும். எக்ஸ்ட்ரா ஆர்டினரி ஸீன் அது. படத்தின் நீளத்தால் பயன்படுத்த முடியலை. கண்டிப்பாக அது டெலீட்டட் ஸீனில் வெளியே வரும்’’ என்றார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
டாபிக்ஸ்