The GOAT Box Office Day 4: விஜய்யின் 'தி கோட்' 4 நாட்களில் எத்தனை கோடி வசூல் தெரியுமா? - அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!
The Goat Box Office Day 4: நடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘தி கோட்’ படத்தின் வசூல் விபரங்களை பார்க்கலாம்.

The Goat Box Office Day 4: நடிகர் விஜயின் நடிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படமானது செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் மீனாட்சி சவுத்ரி, சிநேகா, பிரசாந்த், பிரபு தேவா, ஜெயராம், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தை அர்ச்சனா கல்பாத்தி தனது ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.
விஜயின் 68வது படம்
தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (The Greatest Of All Time) என்பதின் சுருக்கமே 'தி கோட்'. விஜய்யின் 68ஆவது படமாக உருவாகி இருக்கும் இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா, மோகன், ஜெயராம், யோகி பாபு, வைபவ், பிரேம்ஜி, அஜ்மல், விடிவி கணேஷ், அர்விந்த் ஆகாஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தி கோட் படத்தின் கதை
கென்யாவில் ரயிலில் கொண்டு செல்லப்படும் யுரேனியத்தையும், பயங்கவாதி ஓபரையும் பத்திரமாக கொண்டு வர Special Anti terrorist squad team சார்பில் காந்தி ( விஜய்), அஜய் (அஜ்மல்), சுனில் (பிரசாந்த்), கல்யாண் ( பிரபு தேவா) ஆகியோர் கொண்டு செல்ல ஆயுதங்களுடன் களமிறங்க, அந்த சண்டையில் ரயில் வெடித்து தீவிரவாதி மேனன் ( மோகன்) இறந்துவிடுவதாக காட்டப்படுகிறது.