Top OTT Movies: ஓடிடி ஹிட் லிஸ்ட்டில் இருக்கும் டாப் ஐந்து ஆங்கில படங்கள் என்னென்ன?
Top OTT Movies: ஜியோ சினிமா OTT இல் சில ஹாலிவுட் திரைப்படங்கள் இந்த வாரம் டாப் ட்ரெண்டிங்கில் உள்ளன.
Top OTT Movies: சினிமா படங்கள் மொழிகளை கடந்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் விதமாக பான் இந்தியா படமாக உருவாக்கப்பட்டு இந்திய முழுவதும் வெளியிடப்படுகிறது. இந்த படங்களில் பல்வேறு பிற மொழி ரசிகர்களையும் கவரும் விதமாக பல்வேறு அம்சங்களும் நிறைந்திருக்கும். ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் டாப் 5 இடங்களில் இருக்கும் ஹாலிவுட் படங்கள் பற்றி பார்க்கலாம்.
அபிகாயில்
திகில் திரைப்படமான அபிகாயில் ஜியோ ஓடிடி தளத்தில் பிரபலமான இந்தி படங்களில் ஒன்றாகும். பாதாள உலக கும்பல் ஒருவரின் மகள் கடத்தப்பட்டு பழைய கட்டிடத்தில் மறைத்து வைக்கப்பட்டு உள்ளார். அங்கு அவள் அனுபவித்த வித்தியாசமான அனுபவங்கள்தான் படத்தின் கதை.
The American Society of Magical Negroes
The American Society of Magical Negroes படம், ஒரு காமெடி த்ரில்லர் திரைப்படம். இந்த வாரம் ஜியோ சினிமாஸில் அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் மேஜிக்கல் நீக்ரோஸ் டிரெண்டிங் திரைப்படம். இந்த படத்தில் ஜஸ்டிஸ் ஸ்மித் மற்றும் டெவில் ஆலன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர்.
தி கில்லர்
அதிரடி ஐகான் ஜான் வூ , 1989 ஆம் ஆண்டு தனது தலைசிறந்த படைப்பான தி கில்லரை நவீன பார்வையாளர்களுக்காக உருவாக்கினார். தி கில்லர் படம், ஒரு மர்ம திரில்லர் திரைப்படமாகும். இது ஜியோ ஓடிடியில் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து உள்ளது. பார்வையற்ற இளம் பெண் தன்னைக் கொல்ல முயன்ற சிலரை எப்படிப் பழி வாங்குகிறார்? ஒரு வாடகைக் கொலைகாரன் அவளுக்கு எப்படி உதவுகிறான் என்பதை கொலையாளி படம், சொல்கிறது. ஜெசிக்கா கொலைகாரனிடம் இருந்து தப்பிக்க முடியுமா? உண்மையான கொலையாளி யார்? என்பதை இயக்குநர் அழகாக எடுத்து காட்டி உள்ளார்.
டிரைவ் அவே டல்லாஸ்
டிரைவ் அவே டல்லாஸ் படம், ஒரு க்ரைம் காமெடி திரைப்படம். டிரைவ் அவே டல்லாஸ் சமீபத்தில் ஜியோ சினிமா ஓடிடி இல் வெளியிடப்பட்டது. இது ஒரு பயணத்தில் இரண்டு இளைஞர்களின் வாழ்க்கையைப் பற்றிய கதையைச் சொல்கிறது. ஜியோ சினிமாவிலும் இந்த வாரம் டிரெண்டாகி வருகிறது.
சினிமா தொடர்பான செய்திகளுக்கு ஹிந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தை ஃபாலோ செய்து கொள்ளுங்கள்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.