விஜயகாந்தின் மாநகர காவல் பட இயக்குநருக்கு நேர்ந்த கதி.. பதறி எழுந்த இன்ஸ்பெக்டர்.. ஏவிஎம் வாசலிலேயே உயிர் விட்ட சோகம்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  விஜயகாந்தின் மாநகர காவல் பட இயக்குநருக்கு நேர்ந்த கதி.. பதறி எழுந்த இன்ஸ்பெக்டர்.. ஏவிஎம் வாசலிலேயே உயிர் விட்ட சோகம்!

விஜயகாந்தின் மாநகர காவல் பட இயக்குநருக்கு நேர்ந்த கதி.. பதறி எழுந்த இன்ஸ்பெக்டர்.. ஏவிஎம் வாசலிலேயே உயிர் விட்ட சோகம்!

Pandeeswari Gurusamy HT Tamil
Oct 25, 2024 06:00 AM IST

மாநகர காவல் ஏவிஎம் தயாரிப்பில் வெளியான படம். எந்த ஏவிஎம் நிறுவனத்திற்காக படம் செய்து பெரிய ஹிட் கொடுத்தாரோ அதே ஏவிஎம் வாசலில் ஒரு நாள் குடி போதையில் உயிரிழந்து கிடந்தார் என்பது யாருக்கும் ஏற்படக்கூடாத ஒரு சோகமான நிகழ்வு என்றார்.

விஜயகாந்தின் மாநகர காவல் பட இயக்குநருக்கு நேர்ந்த கதி.. பதறி எழுந்த இன்ஸ்பெக்டர்.. ஏவிஎம் வாசலிலேயே உயிர் விட்ட சோகம்!
விஜயகாந்தின் மாநகர காவல் பட இயக்குநருக்கு நேர்ந்த கதி.. பதறி எழுந்த இன்ஸ்பெக்டர்.. ஏவிஎம் வாசலிலேயே உயிர் விட்ட சோகம்!

மூத்த பத்திரிகையாளர் வி.கே.சுந்தர் தனது V K Sundar Updates யூ டியூப் சேனலில் பேசி உள்ளார். மாநகர காவல் படத்தின் இயக்குநர் தியாகராஜன்.  இவர் பிலிம் இன்ஸ்டிடியூஷனில் படித்தவர். கொரோனா காலகட்டத்தில் ஒரு நாள் விருகம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் ஜீப்பில் ஒருத்தரை தலையில் தட்டி ஒருவரை உள்ளே கூப்பிட்டு செல்கின்றனர். அந்த வழியாக வாக்கிங் சென்ற வைரமணி என்ற உதவி இயக்குநர் இதை பார்க்கிறார். அவருக்கு மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது அவர் பிளாக்கில் மது விற்றார் என்ற கேஸில் கைது செய்யப்பட்டு 1500 ரூபாய் அபதாரம் போடப்பட்டிருந்தது.

இதையடுத்து வைரமணி வெளியில் வந்து நடிகர் மயில் சாமிக்கு போன் செய்து விஷயத்தை சொல்கிறார். உடனடியாக மயில்சாமி இன்ஸ்பெக்டருக்கு போன் செய்து எனது நண்பர் வெளியில் இருக்கிறார். அவரை அழைத்து பேசுங்கள் என்றார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் தியாகராஜன் வைரமணியை காட்டி இவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா என்கிறார். தியாகராஜன் எனக்கு அவரை யார் என்று தெரியவில்லை என்கிறார்.

உடனே வைரமணி இல்லை சார்.. அவரை எனக்கு தெரியும். ஆனால் அவருக்கு என்னை தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. அதனால் தான் மயில்சாமிக்கு போன் செய்து ஏதோ தவறு நடந்து விட்டது என்பதை சொல்ல சொல்லி காத்திருந்தேன் என்றார்.

சீட்டை விட்டு எழுந்து நின்ற இன்ஸ்பெக்டர்

சார் இவர் வந்து ஒரு இயக்குநர். மாநகர காவல் என்ற படத்தை இவர்தான் இயக்கினார் என்ற சொன்ன உடனே இன்ஸ்பெக்டர் சீட்டை விட்டு எழுந்து நின்று விட்டார்.

இப்போது இன்ஸ்பெக்டர் கண்கலங்கி சார்.. நான் உங்கள் படத்தை அத்தனை முறை பார்த்திருக்கிறேன். உங்க படத்தை பார்த்த பிறகுதான் இந்த போலீஸ் வேலைக்கே நான் வந்தேன். நீங்கள் ஏன் உங்க பெயரைக் கேட்ட போது தியாகராஜன் என்று சொல்லாமல் ராஜன் என்று சென்னீர்கள் என்றார்.

இல்ல சார் மாநகர காவல் என்று ஒரு படம் செய்தேன். அந்த தியாகராஜனை எல்லாருக்கும் தெரியும். நீங்க கேஸ் போட்டால் அந்த பெயர் வெளியில் வந்தால் அசிங்கமாகி விடும். அதனால் தான் அப்படி ஒரு பொய் சொன்னேன் என்றார். இதனால் இன்ஸ்பெக்டர் மேலும் நெகிழ்ந்து விட்டார்.

இப்போது தியாகராஜனுக்கு போட்ட பைன் தொகையை இன்ஸ்பெக்டரே கட்டி விட்டார். பின்னர் வெளியே வந்த வைரமணியும் தியாகராஜனும் டீ குடிக்க சென்றனர். அப்போது வைரமணி, தியாகராஜனை பார்த்து நீங்கள் எவ்வளவு பெரிய இயக்குநராக இருந்தவர் .. ஏன் சார் இப்படி முழுநேரமும் குடி போதைன்னு இப்படி ஆகிட்டீங்க என்று கேட்டதற்கு.. இல்ல நான் வீட்டிலும் டைரக்டராகவே இருந்திருப்பேன். என்றார்.

ஏற்கனவே தியாகராஜன் குடும்பத்துடன் காரில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் அவரது மனைவி இறந்து விட தியாகராஜனும் அவரது இரண்டு பிள்ளைகளும் பிழைத்து விட்டனர். மனைவியின் இழப்பை தாங்க முடியாமல் தியாகராஜனின் வாழ்க்கை இவ்வாறு மாறி விட்டது. இது தெரிந்ததால் வைரமணி அதற்கு மேல் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை.

இதையடுத்து இருவரும் கிளம்பும் போது தியாகராஜன் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று வைரமணியிடம் கேட்டுள்ளார். அதற்கு நான் உதவி இயக்குநராக உள்ளேன் என்று சொன்னவுடன் நான் மாநகர காவல் படத்தை ரீமேக் பண்ணலாம். இல்லை என்றால் பார்ட் 2 எடுக்கலாம் என்று இருககிறேன். அதுவும் விஜயகாந்த் பையனை வைத்துதான் எடுக்க உள்ளேன். அந்த படப்பிடிப்பு நடக்கும் போது உங்களை உதவி இயக்குநராக வைத்து கொள்கிறேன் என்றார்.

இந்நிலையில் மாநகர காவல் படத்தை தியாகராஜன் ரீமேக் அல்லது பார்ட் 2 எடுக்க போகிறார் என்பது ஒரு பத்திரிக்கையில் செய்தியாக வந்து விட்டது.

இதை அறிந்த பிரேமலதா விஜயகாந்த் 25 ஆயிரத்தை கொடுத்து வச்சுக்கோங்க சார்.. உடம்ப பாருங்க என்று சொல்லி உள்ளார்.

துயரமான சம்பவம்

மாநகர காவல் ஏவிஎம் தயாரிப்பில் வெளியான படம். எந்த ஏவிஎம் நிறுவனத்திற்காக படம் செய்து பெரிய ஹிட் கொடுத்தாரோ அதே ஏவிஎம் வாசலில் ஒரு நாள் குடி போதையில் உயிரிழந்து கிடந்தார் என்பது யாருக்கும் ஏற்படக்கூடாத ஒரு சோகமான நிகழ்வு என்றார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.