தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Captain Vijayakanth: ’நாளை விஜயகாந்திற்கு பத்மபூஷன் விருது!’ கேப்டன் கோயில் வரை பிரேமலதா செய்யப்போகும் சம்பவம்!

Captain Vijayakanth: ’நாளை விஜயகாந்திற்கு பத்மபூஷன் விருது!’ கேப்டன் கோயில் வரை பிரேமலதா செய்யப்போகும் சம்பவம்!

Kathiravan V HT Tamil
May 08, 2024 08:42 PM IST

”11ஆம் தேதி சென்னை திரும்பும் நாங்கள், இங்கிருந்து கேப்டன் கோயில் வரை சென்று கேப்டனுக்கு விருதுகளை சமர்பிக்க உள்ளோம் என கூறினார்”

’நாளை விஜயகாந்திற்கு பத்மபூஷன் விருது!’ கேப்டன் கோயில் வரை பிரேமலதா செய்யப்போகும் சம்பவம்!
’நாளை விஜயகாந்திற்கு பத்மபூஷன் விருது!’ கேப்டன் கோயில் வரை பிரேமலதா செய்யப்போகும் சம்பவம்!

ட்ரெண்டிங் செய்திகள்

11ஆம் தேதி சென்னை திரும்பும் நாங்கள், இங்கிருந்து கேப்டன் கோயில் வரை சென்று கேப்டனுக்கு விருதுகளை சமர்பிக்க உள்ளோம் என கூறினார். 

முதற்கட்ட பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்வில் கேப்டன் விஜயகாந்த் பெயர் பெயர் இடம்பெறாதது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், அது ஒன்றும் இல்லை, பத்ம விருதுகளை மூன்று முதல் நான்கு கட்டங்களாக பிரித்துதான் கொடுக்கிறார்கள். இந்த வழக்கம்தான் அங்கு பின்பற்றப்படுகிறது. பாஜக உடன் நாங்கள் கூட்டணி இல்லாததால் இப்படி சிலர் நினைத்துக் கொள்கிறார்கள் என கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், விவசாய பெருமக்கள் ஒரு பக்கம் தமிழகம் முழுவதும், தண்ணீர் இல்லாமல் வறுமையில் கஷ்டப்படுகின்றனர். மற்றொரு புறம் பலத்த காற்று அடித்து தென்னை, வாழை உள்ளிட்ட நெற் பயிர்கள் அழியும் நிலை உள்ளது. ஆனால் மூன்றாண்டு கால திமுக ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார். 

ஏழையின் சிரிப்பில்தான் இறைவனை காண முடியும். ஏழையின் சிரிப்பு யார் என்றால் விவசாயிகள்தான், விவசாயிகள் வறுமையில் உள்ளனர். அவர்களுக்கு உடனடியாக உதவிகளை கொடுத்து காப்பாற்ற வேண்டும். 

பத்திரப்பதிவு அலுவலகத்தில் முன் அறிவிப்பு இன்றி வரிகளை உயர்த்தி உள்ளனர். வரி என்பது மக்களுக்கு வலி இல்லாததாக இருக்க வேண்டும், இதனால் மக்கள் வாழ்கை கேள்விக்குறியாக உள்ளது. 

நீட் தேர்வு நடந்து முடிந்து உள்ளது. ஆனால் உதயநிதி ஸ்டாலின் முதல் கையெழுத்திலேயே நீட் தேர்வை ஒழித்துவிடுவோம் என்றார். எதையும் இங்கே நிறுத்த முடியவில்லை. வெறும் அரசியலுக்காக வாக்குறுதிகளை கொடுக்கிறார்கள். நீட் தேர்வை ஒழிப்போம் என்றார்கள் ஆனால் அதை பற்றி ஏன் வாய் திறக்கவில்லை. 

12ஆம் வகுப்புத்தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். தோல்வி அடைந்தவர்களும் மீண்டும் தேர்வு எழுதி நல்லபடியாக அவர்கள் வாழ்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் கூறினார். 

IPL_Entry_Point