அவ்ளோ பெரிய பணக்காரருக்கு உள்ளே இருந்த மனித தன்மை அது.. கவிஞர் வாலியை அன்பால் நனைய வைத்த ரத்தன் டாடா.. வீடியோ வைரல்
அவருக்கு நன்றி சொல்லி விட்டு. உங்கள் பெயர் என்ன என்று தெரிந்து கொள்ளலாமா என்றேன். மக்கள் எல்லோரும் என்னை டாடா என அழைப்பார்கள் என்றார். அவ்வளவு பெரிய பணக்காரருக்கு உள்ளே உள்ள மனித தன்மை அது. மிகச் சிறந்த மனிதாபிமானம் கொண்ட மனிதர் தான் ரத்தன் டாடா என்று வாலி கூறினார்.

தமிழ் திரை உலகில் 4 தலைமுறையினருக்கு பாட்டெழுதியவர் வாலி. இவர் பாட்டு எழுதியதோடு, சிறுகதை, கவிதை, நடிப்பு, சித்திரம் தீட்டுவது என பல்துறை வித்தகராக திகழ்ந்தார். அவர் திரைத்துறையில் சுமார் 15 ஆயிரம் பாடல்களை எழுதி உள்ளார். சுமார் 17 திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதி உள்ளார். வடைமாலை என்ற படத்தை மாருதி ராவுடன் இணைந்து இயக்கினார். தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதை 5 முறை பெற்றவர். கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளை பெற்றவர்.
பாஸ்போர்ட்டே இல்லாத பாட்டுக்காரன்
எத்தனையோ அழைப்புகள் வந்தும் எந்த ஒரு வெளிநாட்டிற்கும் செல்லாதவர் வாலி. அதனாலேயே பாஸ்போர்ட்டே இல்லாத பாட்டுக்காரன் என புகழப்பட்டார். இந்த நிலையில் 18 ஜூலை 2013ல் இயற்கை எய்தினார். வாலி மறைந்தாலும் இன்றும் அவரது பாடல்கள் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் ரசிக்க வைக்கின்றன. அந்த அளவிற்கு காதல், சோகம், தாய்மை, தாலாட்டு, சோகம், குத்து பாட்டு என எம்ஜிஆர் தொடங்கி சிவாஜி, ரஜினி, கமல், என தனுஷ் வரை பாட்டு எழுதியவர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வாலி பேசிய ஒரு வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
மழையும் டாடாவும்
அந்த வீடியோவில், மனிதத் தன்மை மனித நேயம் எவ்வளவு பெரிய ஆட்களுக்கு எல்லாம் இருக்கிறது என்பதை சொல்வதற்காக இதைச் சொல்ல வருகிறேன் என்று சொல்லி விட்டு வீடியோவில் வாலி தொடர்ந்து சொல்லும் தகவல் மனதை தொடுகிறது. ஒரு நாள் பயங்கரமான மழை.. இடி, மழை, மின்னல்.. நான் சௌபாத்தி பீச் வழியாக நடந்து வருகிறேன். அப்படி நான் மழையில் நனைந்து வரும்போது ஒரு சின்ன கார் என் பக்கத்தில் வந்து நின்றது. நல்ல கொட்டும் மழை. அந்த காரில் இருந்து கண்ணாடியை ஒரு ஆள் இறக்கி 'யெங் பாய் நீ எங்க போற.. வா கொண்டு போய் இறக்கி விடுகிறேன் என்றார். இல்லை நான் VT ஸ்டேஷன் போகணும் என்றேன். come on get in என்றார். நான் ஏறி உட்கார்ந்தேன். அவர் என்னை நான் செல்ல வேண்டிய இடத்தில் இறக்கி விட்டார்.