சரியான கஷ்டம்.. ரூ.45 லட்சம் கொடுக்குறான்.. எப்படிப்பட்ட நண்பன்.. ரஜினியின் நட்பு பற்றி பேசிய தெலுங்கு நடிகர் மோகன் பாபு
சரியான கஷ்டம்.. ரூ.45 லட்சம் கொடுக்குறான்.. எப்படிப்பட்ட நண்பன்.. ரஜினியின் நட்பு பற்றி பேசிய தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் பேட்டியைக் காணலாம்.

சரியான கஷ்டம்.. ரூ.45 லட்சம் கொடுக்குறான்.. எப்படிப்பட்ட நண்பன்.. ரஜினியின் நட்பு பற்றி பேசிய தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் பேட்டி வைரல் ஆகி வருகிறது.
ரஜினியின் நட்பு பற்றி, அவரது கல்லூரித்தோழனும் தெலுங்கு நடிகர் மோகன் பாபுவும் டெய்லி கல்ச்சர் யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, ‘’1982ல் லட்சுமி பிரசன்னா பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை எனது தாயின் பெயரில் தொடங்கினேன். அதை எங்கள் அண்ணன் என்.டி.ஆர் சென்னைக்கு வந்து தொடங்கி வைத்தார். அப்போது பிரதிக்ஷா என்ற சினிமாவை எடுத்தேன். அப்படி 1995ஆம் ஆண்டு வரை எத்தனை படங்கள் எடுத்தேன். அதில் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி கிடைத்தது.
அப்படி 1995ஆம் ஆண்டு ’பெத்தராயுடு’ என்ற தெலுங்கு படம் தயாரிச்சேன். அந்தப்படம் அதே வருடம் ஜூன் 15ஆம் தேதி ரிலீஸ் ஆனது. என்னுடைய பல படங்களில் பெத்தராயுடு சினிமா செய்த கலெக்ஷன் வேறு எந்தப் படங்களிலும் இல்லை.. இல்லை.. இல்லை.. இது தான் உண்மை. முதல் பிரிவியூ ஷோ கூட, எங்கள் அண்ணன் என்.டி.ஆருக்குப் போட்டு காட்டினேன். அதைப் பார்த்துட்டு இந்தப் படம் மிகப்பெரிய ஹிட்டாகும்ன்னு சொன்னார். இந்தப் படம் நாட்டாமை என்று தமிழில் வெளிவந்தது.
ரஜினி ஏற்படுத்தி தந்த நல்ல வாய்ப்பு:
தமிழில் நாட்டாமை படத்தைப் பார்த்துட்டு தன்னை தனது வீட்டுக்கு வாடான்னு கூப்பிட்டான், ரஜினி. நாட்டாமை படம் இங்கு ஹிட்டாயிருச்சு. அதை முதலில் பாரு. அது பிடிச்சிருந்தது என்றால் ரைட்ஸ் வாங்குறதுக்கு நான் உனக்கு சொல்றேன்னு சொல்றான். நானும் படத்தைப் பார்த்துட்டு ரொம்ப நல்லாயிருக்குடான்னு சொல்றேன். பிறகு படத்தின் தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரியிடம் ரைட்ஸ் எனக்காக வாங்குறதுக்காக பேசுகிறார். பின், நான் ஆர்.பி.செளத்ரியிடம்பேசும்போது, ரஜினிகாந்த் சொன்னதால், உங்களுக்காக குறைச்சு தரேன்னு ஒரு ரேட்டுக்கு நாட்டாமை பட ரைட்ஸை கொடுக்குறாங்க.