TV Movies TRP : அடிச்சு தூக்கிய ரத்னம்.. அடிக்காமல் ஆடிய உறியடி.. சத்தம் போட்ட சைரன்!
TV Movies TRP : டிவி டிஆர்பி ரேட்டிங்கில், மூன்று திரைப்படங்கள், பயங்கரமான பாய்ச்சலை கண்டன. அதில் ஜி தமிழ் தொலைக்காட்சி கெத்து காட்டிய சம்பவமும் நடந்துள்ளது.
டிஆர்பி இல்லாத டிவியா? எல்லாமே டிஆர்பி மயம் தான்! அப்படி பார்க்கையில் கடைசியாக சுதந்திரமான ஆகஸ்ட் 14 ம் தேதி டிவியில் ஒளிபரப்பான திரைப்படங்களுக்கான டிஆர்பி ரேட்டிங் வெளியாகியிருக்கிறது. அதில், குறிப்பாக மூன்று படங்களின் டிஆர்பி புள்ளிகள் பேசு பொருளாக மாறியிருக்கிறது. அவை எந்த திரைப்படங்கள்? அவற்றின் புள்ளிகள் என்ன? எந்த தொலைக்காட்சியில் புள்ளிகள் கிடைத்தன என்பதை இப்போது பார்க்கலாம்?
1.ரத்னம்
விஷால், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரகனி உள்ளிட்டோர் நடிப்பில், இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளியான திரைப்படம் ரத்னம். திரையரங்கில் கலவையான விமர்சனத்தைப் பெற்ற ரத்னம் திரைப்படம், அதன் பின் ஓடிடி.,யிலும் திரையிடப்பட்டது. அதன் பின்பாக சாட்லைட் ரைட்ஸ் என்கிற முறையில் கடந்த ஆகஸ்ட் 14 ம் தேதி, ஜி தமிழ் தொலைக்காட்சியில் ரத்னம் திரைப்படம் திரையிடப்பட்டது. அன்றைய தினம் நிறைய திரைப்படங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின. அவற்றில் ரத்னம் திரைப்படம் முதல் இடம் பிடித்துள்ளது. புள்ளிகள் அடிப்படையில் 2.71 புள்ளிகளை ரத்னம் திரைப்படம் பெற்றுள்ளது. உண்மையில் விஷாலுக்கு இது மகிழ்ச்சியான செய்தி தான்!
2.சைரன்
ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் சைரன். தியேட்டரில் பெரிய அளவில் வரவேற்பை பெறாவிட்டாலும், ஓடிடி.,யில் ஒரளவிற்கு வரவேற்பை பெற்றது. ஜெயம் ரவியில் உடல் மொழி, நடை மொழி, தோற்றம் என அனைத்தும் மாறிய நிலையில் நடித்திருந்த சைரன் திரைப்படத்திற்கு தியேட்டரில், ஓடிடி.,யில் கிடைக்காத அங்கீகாரம், தொலைக்காட்சியில் கிடைத்திருக்கிறது. சைரன் திரைப்படத்திற்கு 2.64 புள்ளிகள் டிஆர்பி.,யில் கிடைத்திருக்கிறது. ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்த திரைப்படம், இரண்டாவது அதிக பார்வையாளர்களை பெற்ற திரைப்படமாகும்.
3.உறியடி
2016ல் விஜயகுமார் எழுதி, இயக்கி, நடித்த திரைப்படம் உறியடி. கல்லூரி மாணவர்களின் வாழ்க்கையை பின்னணியாக கொண்டு எடுக்கப்பட்ட உறியடி திரைப்படம், அப்போதே பரபரப்பாக பேசப்பட்ட திரைப்படம். குறைந்த பட்ஜெட்டில் எடுத்து பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம். உறியடி திரைப்படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பின் காரணமாக பின்னாளில், அதன் இரண்டாம் பாகம் வந்தது வேறு கதை. முதல் பாகம் அளவிற்கு இரண்டாம் பாகம் போகவில்லை என்பதும் தனிக்கதை. இருந்தாலும், முதல்பாகமான உறியடி தந்த வெற்றி, அந்த திரைப்படத்தின் டிஆர்பி., ரேட்டிங்கை 8 ஆண்டுகள் கழித்தும் குறையாமல் பார்த்துக் கொண்டுள்ளது. சுதந்திரத்தன்று கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உறியடி திரைப்படம், 0.64 புள்ளிகளை பெற்று, அதிக பார்வையாளர்களை பெற்ற மூன்றாவது திரைப்படமாக உறியடி உள்ளது.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்