Fight Club: ஃபைட் கிளப் படத்தின் டீஸர்: கடற்கரை கிராமத்தில் செம சண்டை போடும் விஜய்குமார்!-fight club movie teaser released and vijaykumar fights in beach village - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Fight Club: ஃபைட் கிளப் படத்தின் டீஸர்: கடற்கரை கிராமத்தில் செம சண்டை போடும் விஜய்குமார்!

Fight Club: ஃபைட் கிளப் படத்தின் டீஸர்: கடற்கரை கிராமத்தில் செம சண்டை போடும் விஜய்குமார்!

Marimuthu M HT Tamil
Dec 02, 2023 06:19 PM IST

ஃபைட் கிளப் படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.

ஃபைட் கிளப் படத்தின் டீஸர் வெளியீடு
ஃபைட் கிளப் படத்தின் டீஸர் வெளியீடு

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அண்மையில் ஜி ஸ்குவாட் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்தார். அதில் முதற்கட்டமாக தனது உதவி இயக்குநர்கள் மற்றும் நண்பர்களின் படங்களை புரொடியூஸ் செய்யவுள்ளார்.

இந்நிலையில் அப்பாஸ் ஏ. அஹ்மத் என்னும் இயக்குநரை தன்னுடைய பேனரில் கீழ் இயக்குநராக அறிமுகப்படுத்துகிறார், லோகேஷ் கனகராஜ். இப்படத்தில் உறியடி பட கதாநாயகன் விஜய் குமார், லீட் ரோலில் நடித்துள்ளார். இப்படத்துக்குண்டான இசையை கோவிந்த் வசந்தா செய்கின்றார்.

இந்த டீஸர் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகரும் இயக்குநருமான விஜய் குமார், ‘லோகேஷ் எனக்கு ரொம்ப காலமாக உடன் இருக்கும் நண்பர். இந்தப் படத்தை லோகேஷ் தயாரிப்பது ரொம்ப சந்தோஷம். இயக்குநர் அப்பாஸை நினைத்துப் பெருமைப்படுகிறேன்.(சொல்லும்போதே கண்கள் கலங்குகிறார்). இந்தப் படத்திற்காக மிகவும் அர்ப்பணித்து வேலை செய்துள்ளோம். ஆங்கிலப் படமான ஃபைட் கிளப்புக்கும் இதற்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை. அதனை அங்கீகரிக்கும் வகையில் இந்தப் படத்துக்கு இப்பெயர் வைத்திருக்கிறோம். இயக்குநர் அப்பாஸ் மணிரத்னம் ரசிகன். இந்த சினிமா உங்கள் அனைவரையும் ஈர்க்கும்’என நினைக்கிறேன்.

இதனைத் தொடர்ந்து சற்றுமுன் சரியாக மாலை 6 மணியளவில் இப்படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. ஆரம்பம் முதல் இறுதி வரை, பேண்ட் வாத்தியத்தில் ஏ ஜோடி மஞ்சக்குருவி பாடல் ஒலிக்க, கடற்கரையை ஒட்டிய கிராமத்தில் வசிக்கும் இளைஞர்களின் சண்டை தான் டீஸர் முழுவதும் விரவி இருக்கிறது. 

ஃபைட் கிளப் படத்தின் டீஸர் இதோ.. தங்கள் பார்வைக்கு..

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.