Rathnam Box Office: ஆக்‌ஷன் அலப்பறை.. விஷாலுக்கு வெற்றி வந்ததா? - ரத்னம் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!-actor vishal director hari rathnam box office collection - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rathnam Box Office: ஆக்‌ஷன் அலப்பறை.. விஷாலுக்கு வெற்றி வந்ததா? - ரத்னம் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!

Rathnam Box Office: ஆக்‌ஷன் அலப்பறை.. விஷாலுக்கு வெற்றி வந்ததா? - ரத்னம் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!

Kalyani Pandiyan S HT Tamil
Apr 28, 2024 02:44 PM IST

ரத்னம் திரைப்படம் வெளியான அன்றைய தினம் 2.3 கோடி வசூல் செய்திருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறது.

ரத்னம் பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்‌ஷன்!
ரத்னம் பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்‌ஷன்!

இதனையடுத்து தற்போது இருவரும் ‘ரத்னம்’ படத்தில் இணைந்து இருக்கின்றனர். இந்தப்படம் வரும் ஏப்ரல் மாதம் 26-ம் தேதி வெளியானது. இந்தப்படத்தில், ப்ரியா பவானி ஷங்கர், ராமச்சந்திர ராஜூ, சமுத்திரகனி, கவுதம் வாசுதேவ் மேனன், யோகி பாபு மற்றும் பல பிரபல நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்தப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்தப்படத்தின் பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரத்தை பார்க்கலாம். 

Sacnilk தளம் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி, இந்தியாவில், ரத்னம் திரைப்படம் வெளியான அன்றைய தினம் 2.3 கோடி வசூல் செய்திருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறது. 

சனிக்கிழமையான நேற்றைய தினம் 2 கோடி வசூல் செய்தது. ஆக மொத்தமாக இந்தியாவில் மட்டும் ரத்னம் திரைப்படம் 4.30 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. உலக அளவில் ரத்னம் திரைப்படம் 9 கோடி வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. இன்றைய தினம் ரத்னம் திரைப்படம் 0.35 கோடி வரை வசூல் செய்யலாம் என சொல்லப்படுகிறது. 

முன்னதாக, ரத்னம் படம் புரமோஷன் தொடர்பான நேர்காணல் ஒன்றில், இயக்குநர் ஹரி, சூர்யாவையும், விக்ரமுமையும் ஒரே ஃப்ரேமில் சந்திக்க வைக்க முடியுமா என்பதற்கு பதில் கொடுத்தார். அந்த பதில் இங்கே!

இயக்குநரின் ஹரியின் சினிமா கேரியரில் மிக முக்கியமான திரைப்படங்களாக விக்ரம் நடித்த சாமி திரைப்படமும், சூர்யா நடித்த சிங்கம் திரைப்படமும் அமைந்தன.

இந்த இரண்டு கதாபாத்திரங்களில் நடித்த விகரமும், சூர்யாவும் அதில் மிகவும் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்கள். இன்றும் அந்த படங்களுக்கு ஏகோபித்த ரசிகர்கள் இருக்கிறார்கள்.

ஒரே ஃப்ரேமில் சந்திக்க வாய்ப்பு இருக்கிறதா?

இந்த நிலையில் அந்த திரைப்படங்களில் இடம் பெற்ற ஆறுச்சாமி கதாபாத்திரமும், துரைசிங்கம் கதாபாத்திரமும் ஒரே ஃப்ரேமில் சந்திக்க வாய்ப்பு இருக்கிறதா என்பதற்கு இயக்குநர் ஹரி பதில் அளித்திருக்கிறார்.

இது குறித்து கலாட்டா சேனலுக்கு அளித்த பேட்டியில் அவர் பேசும் போது, “ நான் இந்த ஐடியாவை சிங்கம் படத்தின் இராண்டாம் எடுக்கும் பொழுது யோசிக்கவில்லை; ஆனால் மூன்றாம் பாகம் எடுக்கும் பொழுது யோசித்தேன். துரைசிங்கம் ஒரு விமானத்தில் செல்லும் பொழுது, ஆறுச்சாமி அவரது மனைவியுடன் எதிரில் வருவார்.

சூர்யா சாரிடம் கூட சொல்லவில்லை

இரண்டு பேரும் ஒரு விஷயம் குறித்து பேசிக் கொள்வார்கள். அப்போது துரை சிங்கமின் மனைவியான அனுஷ்கா, ஆறுச்சாமியிடம் பெருமாள் பிச்சையை நீங்கள் இன்னுமா தேடி கண்டுபிடிக்க வில்லை என்று கேட்பார்.

இந்த உரையாடலின் போது, துரைசிங்கம் ஆறுச்சாமியை பார்த்து சிரிப்பார்; ஆறுச்சாமி துரை சிங்கத்தை பார்த்து சிரிப்பார். காரணம் அவர்களுக்கு உண்மையில் என்ன நடந்தது என்பது நன்றாகத் தெரியும். அந்த உரையாடலை நாங்கள் அப்படியாக எழுதி வைத்திருந்தோம். அதை நான் சூர்யா சாரிடம் கூட சொல்லவில்லை

ஆனால் அதன் பின்னர் நாங்கள் யோசித்தோம். நாம் கமர்சியல் திரைப்படம் எடுக்கிறோம். நாம் எடுக்க நினைப்பதை செய்வதற்கு நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என எல்லோரையும் ஒத்துக் கொள்ள வைக்க வேண்டும். எல்லோரையும் சமாதானம் செய்ய வேண்டும். இதை ஒரு நேர்க்கோட்டில் கொண்டு வருவது என்பது மிகப்பெரிய வேலை. ஆனால் அதை என்னால் செய்ய முடியவில்லை.

தற்போது லோகேஷ் கனகராஜ் அதை அழகாக செய்து கொண்டிருக்கிறார். அதை அவர் ஒவ்வொரு திரைப்படத்திலும் கொண்டு வருவதை பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது மக்களுக்கும் அது மிகவும் பிடித்திருக்கிறது.

சூர்யாவுடன் இணைவது எப்போது ?

நான் எப்போதும் ஒரு படம் முடிந்தவுடன் அடுத்த படம் என்று போய்க்கொண்டே இருப்பேன். சரியான சூழ்நிலை வரும்பொழுது நான் மீண்டும் சூரியா சாருடன் இணைவேன். அருவா திரைப்படம் தற்போதைக்கு நடைபெற வாய்ப்பு இல்லை. அந்தப்படத்திலோ அல்லது வேறொரு படத்தொலோ நானு சூர்யா சாரும் இணைவோம்” என்று பேசினார்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பேட்டியில் பேசிய நபரின் தனிப்பட்ட கருத்துக்கள் ஆகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இந்த தகவல்களுக்கும் ஹிந்துஸ்தான் தமிழ் இணையதளத்திற்கும் சம்பந்தம் கிடையாது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.