"ஒரு பொய்யாவது சொல் கண்னே.." பலரது மனதில் ரீங்காரமிடும் பாடல்களை பாடிய மெலடி மன்னன் பாடகர் ஸ்ரீனிவாஸ்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  "ஒரு பொய்யாவது சொல் கண்னே.." பலரது மனதில் ரீங்காரமிடும் பாடல்களை பாடிய மெலடி மன்னன் பாடகர் ஸ்ரீனிவாஸ்

"ஒரு பொய்யாவது சொல் கண்னே.." பலரது மனதில் ரீங்காரமிடும் பாடல்களை பாடிய மெலடி மன்னன் பாடகர் ஸ்ரீனிவாஸ்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Nov 07, 2024 11:30 AM IST

ஒரு பொய்யாவது சொல் கண்னே உள்பட மனதில் ரீங்காரமிடும் பல பாடல்களை பாடிய மெலடி மன்னனாக திகழ்பவர் பாடகர் ஸ்ரீனிவாஸ். டிவி ஷோக்களில் நடுவராகவும் பல்வேறு திறமையாளர்களை ஊக்குவித்து வருகிறார்.

"ஒரு பொய்யாவது சொல் கண்னே.." பலரது மனதில் ரீங்காரமிடும் பாடல்களை பாடிய மெலடி மன்னன் பாடகர் ஸ்ரீனிவாஸ்
"ஒரு பொய்யாவது சொல் கண்னே.." பலரது மனதில் ரீங்காரமிடும் பாடல்களை பாடிய மெலடி மன்னன் பாடகர் ஸ்ரீனிவாஸ்

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய திரையுலகிலும் பாடல்களை பாடியிருக்கும் தமிழ் கலைஞனாக இருந்து வருகிறார்.

ஸ்ரீனிவாஸை பாடகராக மாற்றிய மணிரத்னம் படம்

தென்காசி மாவட்டம் அம்பாசமுத்திரம் தான் பாடகர் ஸ்ரீனிவாஸ் சொந்த ஊர். 1992இல் மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமான ரோஜா படம் தான், ஸ்ரீனிவாஸ் பாடகராக அறிமுகமாவதற்கு இன்ஸ்பிரேஷனாக அமைந்திருந்தது.

இந்த படத்தால் இசை மீது ஆர்வம் ஏற்பட்டு, இசையத்துறையில் சாதிக்க வேண்டும் என கருதி 1993இல் சென்னை வந்த ஸ்ரீனிவாஸ் முறையாக இசை மற்றும் பாடல் பயிற்சியை மேற்கொண்டார்.

இதன் பலனாக பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு வித்யாசாகர் இசையயில் தெலுங்கில் உருவான ஒன் பை டூ என்ற படத்தில் முதல் பாடலை பாடியுள்ளார்.

முதல் தமிழ் பாடல்

பிரபல பாகிஸ்தான் பாடகர் மெஹ்தி ஹாசன் கஜல்களை வாசித்ததன் மூலம் ஏ.ஆர். ரஹ்மானால் ஈர்க்கப்பட்டு அவருடன் பணியாற்றும் வாய்ப்பை பெற்றார் ஸ்ரீனிவாஸ். அவரது இசையில் முதல் முறையாக 1996இல் வெளியான மிஸ்டர் ரோமியோ படத்தில் இடம்பிடித்த மெல்லிசையே பாடலை பாடினார். இதன் பிறகு ஏ.ஆர். ரஹ்மானுடன் தொடர்ந்து பல படங்களில் அவரது பயணம் நீடித்தது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சூப்பர் ஹிட்டான பாடல்களான உயிரே படத்தில் என் உயிரே, படையப்பா படத்தில் மின்சார பூவே, தாஜ்மஹால் படத்தில் சொட்ட சொட்ட, அலைபாயுதே படத்தில் சிநேகிதனே, என்றென்றும் புன்னகை, ஜோதா அக்பர் படத்தில் முழுமதி அவளது, ஜோடி படத்தில் ஒரு பொய்ய வரசொல் போன்ற பாடல்கள் இவரது குரலில் உருவானவை தான்.

தமிழை போல் பிற மொழிகளிலும் பல்வேறு ஹிட் பாடல்களை பாடி அங்கும் தனக்கென ரசிகர்கள் கூட்டத்தை கொண்ட பாடகராக வலம் வந்தார்.

இசையமைப்பாளராக கலக்கல்

என் இனிய இளமானே என்ற படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஸ்ரீனிவாஸ். ஆனால் அந்த படம் வெளியாகவில்லை. இதைத்தொடர்ந்து 2002இல் வெளியான ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே படத்தில் ஐந்து இசையமைப்பாளர்களில் ஒருவராக பணியாற்றினார். இந்த படத்தில் இவர் இசையமைத்த இனி நானும் நானினல்லை என்ற பாடல் ஹிட்டனாது.

தொடர்ந்து மலையாளம், இந்தி மொழிகளிலும் சில படங்களுக்கு இசையமைத்த இவர் 2015இல் தமிழில் வெளியான கங்காரு பட இசையமைப்பாளராக பணியாற்றினார்.

டிவி ஷோக்களில் நடுவர்

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் முதல் சீசன் முதல் ஐந்தாவது சீசன் வரை நடுவராக வந்த இவர், பல்வேறு இளம் திறமைகளை கண்டறிந்து ஊக்குவித்தார். இதன் பின்னர் ஜீ தமிழ் டிவியில் சரி கம ப சீனியர்கள் முதல் சீசனில் இருந்து தற்போது ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீசன் 4 வரை நடுவராக இருக்கிறார். அத்துடன் மலையாளத்தில் ஏசியாநெட் டிவியில் ஒளிபரப்பான ஸ்டார் சிங்கர், பிளவர்ஸ் டிவியின் டாப் சிங்கர் நிகழ்ச்சிகளிலும் நடுவராக இருந்துள்ளார்.

பாடகர்களில் மெலடி மன்னனாக திகழ்ந்து வந்த ஸ்ரீனிவாஸ் பலரின் மனதில் நீங்காமல் ரீங்காரம் அடித்துக்கொண்டிருக்கும் பாடல்களை பாடியவராக இருந்து வருகிறார். இதுவரை அனைத்து மொழிகளிலும் சேர்த்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடகர் ஸ்ரீனிவாஸ் பாடியுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது, சிறந்த பாடகருக்கான தமிழ்நாடு அரசு, கேரள அரசு விருதுகளை வென்ற பாடகராக திகழும் ஸ்ரீனிவாஸ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.