Tamil Movies : அட்லீயின் முதல் படம் முதல் தமிழில் எண்டரி கொடுத்த மகேஷ் பாபு வரை.. இன்றைய நாளில் வெளியான படங்கள் இதோ!-tamil movies released on sep 26 chekka chivantha vaanam spyder raja rani - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Movies : அட்லீயின் முதல் படம் முதல் தமிழில் எண்டரி கொடுத்த மகேஷ் பாபு வரை.. இன்றைய நாளில் வெளியான படங்கள் இதோ!

Tamil Movies : அட்லீயின் முதல் படம் முதல் தமிழில் எண்டரி கொடுத்த மகேஷ் பாபு வரை.. இன்றைய நாளில் வெளியான படங்கள் இதோ!

Divya Sekar HT Tamil
Sep 27, 2024 11:14 AM IST

Tamil Movies Released on Sep 26 : சிம்பு, அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, அருண் விஜய் நடித்த செக்கச்சிவந்த வானம், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், ராஜா ராணி என சில படங்கள் இன்றைய நாளில் வெளியாகியுள்ளன. இன்றைய நாளில் வெளியான படங்கள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

Tamil Movies : அட்லீயின் முதல் படம் முதல் தமிழில் எண்டரி கொடுத்த மகேஷ் பாபு வரை.. இன்றைய நாளில் வெளியான படங்கள் இதோ!
Tamil Movies : அட்லீயின் முதல் படம் முதல் தமிழில் எண்டரி கொடுத்த மகேஷ் பாபு வரை.. இன்றைய நாளில் வெளியான படங்கள் இதோ!

ஒரு நகரத்தையே தன் கட்டுக்குள் வைத்திருக்கிறார் தாதா பிரகாஷ்ராஜ். அவரைக் கொல்ல முயற்சி நடக்கிறது. அதைச் செய்தது யார் என்ற கேள்விக்கு விடை சொல்லும் முன்பே, தாதாவின் மகன்கள் அரவிந்த்சாமி, அருண் விஜய், சிம்பு 3 பேரும் தந்தையின் இடத்துக்கு வரத் துடிக்கின்றனர். பிரகாஷ்ராஜின் சிம்மாசனத்தைப் பிடிக்க 3 பிள்ளைகளுக்குள் நடக்கும் போட்டியும், வஞ்சமும், இழப்புகளும் தான் படத்தின் கதை.

ஸ்பைடர் (Spyder)

பிரபல இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான திரைப்படம் ஸ்பைடர். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மகேஷ் பாபு நேரடியாக முதன் முறையாக நடித்த தமிழ் திரைப்படம் இது. இதில் பரத், எஸ் ஜே சூர்யா, நதியா, ஆர் ஜெ பாலாஜி மற்றும் பலர் நடித்துளளனர். மேலும் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவாளராகவும், சிறீகர் பிரசாத் படத் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர். இப்படம் செப்டம்பர் 27, 2017 இல் வெளியானது.

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் (Onaayum Aattukkuttiyum)

மிஷ்கின் இயக்கி நடித்திருந்த படம் ஓநாயும் ஆட்டுக்குட்டியும். 2013-ம் ஆண்டு த்ரில்லர் படமாக உருவான இந்த படம் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்தது. தமிழ் சினிமாவின் கல்ட் கிளாசிக் படமாக மாறியது. ஓநாயும் ஆட்டுக்குட்டியும் செப்டம்பர் 27, 2013ல் வெளியானது. இப்படத்தில் பாடல்கள் இல்லை. பின்னணி இசை இளையராஜா அமைத்துள்ளார்.

ராஜா ராணி (Raja Rani)

அட்லீ இயக்கிய முதல் படமான ராஜா ராணி, பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இந்த திரைப்படத்தில் ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா நசீம், சத்யராஜ், சந்தானம், சத்யன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் செப்டம்பர் 27, 2013 அன்று வெளியானது. இந்த திரைப்படம் தெலுங்கு மொழியில் ராஜா ராணி என்ற அதே பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு மார்ச் 14 அன்று வெளியானது. காதல் தோல்வியோடு வாழ்க்கை முடிந்துவிடுவதில்லை. ஒவ்வொரு காதலுக்குப் பிறகும் இன்னொரு காதல் இருக்கிறது, இன்னொரு வாழ்க்கை இருக்கிறது என்பது தான் கதை.

சமஸ்தானம் (Samasthanam)

2002 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சமஸ்தானம். ராஜ் கபூர் இயக்கிய இந்த படத்தில் சரத்குமார் இரட்டை வேடங்களிலும், சுரேஷ் கோபி, தேவயானி, அபிராமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். எம். கஜாமைதீன், கே. ஆயிஷாவாஸ் ஆகியோர் தயாரித்த இப்படத்திற்கு தேவா இசையமைத்தார். இப்படம் 2002 செப்டம்பர் 27 அன்று வெளியானது. சரத்குமார், சூர்யா ஆகியோர் பிரிக்க முடியாத நெருங்கிய நண்பர்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் மிகவும் நெருக்கமாக இருந்ததால் சூர்யாவுக்கு ஒரு மணமகனைத் தேர்ந்தெடுக்கிறார். அவர்களின் இந்த நெருங்கிய நட்பானது நண்பர்களாக இருந்த அவர்களின் தாத்தா மற்றும் தந்தையரிடமிருந்து வழிவழியாக வந்தது. சங்கரா நண்பர்கள் மீதான வண்மத்தின் காரணமாக அவர்களை பிரிக்க விரும்பி தன்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறார். அதில் வெற்றியும் பெறுகிறார். கடைசியில் சங்கராவின் சதிகளை உணர்ந்து சங்கராவை ஒழித்து நண்பர்கள் மீண்டும் ஒன்றிணைகின்றனர். இதுதான் படத்தின் கதை.

பரிவட்டம் (Parivattam)

பரிவட்டம் 1996ல் வெளிவந்த திரைப்படம். இந்தத் திரைப்படம் டி.கே.ராஜேந்திரனால் இயக்கப்பட்டது. நடிகர் ஜெயராம் மற்றும் நடிகை சுகன்யா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில் கவுண்டமணி, செந்தில் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவநேசன் சொக்கலிங்கம் இசை அமைத்துள்ளார். 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 அன்று இந்த படம் வெளியானது.

அர்த்தமுள்ள ஆசைகள் (Arthamulla Aasaigal)

அர்த்தமுள்ள ஆசைகள் இயக்குனர் பாபு மகாராஜா இயக்கிய திரைப்படம். இதில் கார்த்திக், அம்பிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் கங்கை அமரன்.

நீதியின் மறுபக்கம் (Neethiyin Marupakkam)

1985 செப்டம்பர் 27 இதே நாளில் வெளியானது நீதியின் மறுபக்கம். எஸ்.ஏ.சி.-விஜயகாந்த் கூட்டணியில் பரபரப்பாக பேசப்பட்ட திரைப்படம். ராதிகா, வடிவுக்கரசி, வி.கே.ராமசாமி உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். அதே போல, இளையராஜாவின் இசையில் இன்றும் கேட்கப்படும் இனிமையான பாடல்களை கொண்ட திரைப்படம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.