Radhika Sarathkumar: வேண்டாம்.. வேண்டாம் என சொல்லியும் கட்டாயப்படுத்தி கிஸ் அடித்த கமல்.. பகீர் கிளப்பிய ராதிகா
Radhika Sarathkumar: படங்களில் முத்தக் காட்சியில் உதடுகளை அழுத்தி முத்தம் கொடுப்பார். ஆனால் நான் அதை தடுத்தபோது சிலர் என்னை எதிர்த்தனர். பின்னர் பல வாய்ப்புகள் நழுவிப் போனது' என்றார் ராதிகா சரத்குமார்.
Radhika Sarathkumar: ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான பிறகு, பல நடிகைகள் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இளம் ஹீரோயின்கள் முதல் சீனியர் ஹீரோயின்கள் வரை அனைவரும் தங்களுக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்களைத்தான் பேசுகிறார்கள். ஆனால் இது போன்ற சம்பவங்கள் மலையாள திரையுலகில் மட்டுமின்றி பிற மொழிகளிலும் நடப்பதாக பல நடிகைகள் கூறுகின்றனர்.
சினிமாவின் மற்ற துறைகளிலும் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள் என்று நடிகர்கள் கூறுகிறார்கள், ஆனால் யாரும் பேசுவதில்லை. தென்னிந்திய சினிமாவின் மூத்த நடிகைகளில் ஒருவரான ராதிகா சரத்குமாரின் சமீபத்திய கருத்து இண்டஸ்ட்ரியை பரபரப்பில் ஆழ்த்தி உள்ளது. பல மொழிகளில் நடித்து உள்ளார். அதனால் தான் சினிமா துறையில் என்ன நடக்கிறது என்பது எனக்கு தெரியும் என்று கூறியுள்ளார்.
கேரவனில் ரகசிய கேமராக்களை பொருத்தி பெண்கள் உடை மாற்றும் சம்பவங்களை அங்கிருக்கும் ப்பார்த்ததாகவும், சில ஆண்கள் அந்த வீடியோக்களை செய்து மகிழ்ந்ததாகவும், குழுவாக அமர்ந்திருந்த ஆண் ஊழியர்கள் அந்த வீடியோக்களை பார்த்ததாகவும் ராதிகா சரத்குமார் தெரிவித்தார்.
ராதிகாவின் கருத்துக்கு பிறகு, சிறப்பு புலனாய்வு குழு இந்த விஷயத்தை கையில் எடுத்துள்ளது. தற்போது ராதிகா கூறிய மற்றொரு விஷயமும் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ராதிகாவின் பரபரப்பு குற்றச்சாட்டு
பல ஆண்டுகளுக்கு முன்பு அவர் கூறிய கருத்து தற்போது வைரலாகியுள்ளது. முத்த காட்சிகளில் நடித்து பிரபலமான ஒரு நடிகர் தன்னை முத்தக் காட்சிகளில் நடிக்க வற்புறுத்தியதாக அவர் கூறினார். அவர் யாரோ அல்ல உலக நாயகன் கமல் ஹாசன். அவர் மீது ராதிகா பரபரப்பு குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.
முத்தக் காட்சி
அவர் கூறுகையில், “ பொதுவாக கமல் ஹாசன் படங்களில் முத்தக் காட்சிகள் இருக்கும். இளைஞர்களை கவரும் வகையில் இது போன்ற காட்சிகளை திரைப்படங்களில் போடுவதில் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ஒரு காலத்தில் கமல் ஹாசன் படங்களில் முத்தக் காட்சிகள் இருக்க வேண்டும் என்பது விதி. சில நடிகைகள் முத்தக்காட்சிகளில் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் நடிக்கிறார்கள். ஆனால் ஒரு சிலர் அந்த காட்சிகளுக்கு பயந்து சிலர் கமல் ஹாசன் படங்களில் நடிப்பதில்லை.
உதடுகளை அழுத்தி முத்தம்
படங்களில் முத்தக் காட்சியில் உதடுகளை அழுத்தி முத்தம் கொடுப்பார். ஆனால் நான் அதை தடுத்தபோது சிலர் என்னை எதிர்த்தனர். பின்னர் பல வாய்ப்புகள் நழுவிப் போனது' என்றார் ராதிகா சரத்குமார்.
முத்தக் காட்சி தொடர்பாக கமல் ஹாசன் மீது புகார்கள் வந்தன. நடிகை ரேகா இதற்கு முன்பும் இதே போன்ற புகார் அளித்து உள்ளார். படத்தில் தன்னிடம் சொல்லாமல் முத்தக் காட்சிகள் போடப்பட்டதாகவும், கமல் ஹாசன் தன்னை கட்டாயப்படுத்தி முத்தமிட்டதாகவும் கூறியுள்ளார். தற்போது ராதிகாவின் இந்த கருத்து வைரலாகி வருகிறது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.