நாங்க சொல்ற வரைக்கும் எந்த படத்தையும் எடுக்கக் கூடாது.. மீண்டும் ஆர்டர் போட்ட தயாரிப்பாளர் சங்கம்
மறு அறிவிப்பு வரும் வரை புதிய திரைப்படங்களின் படப்பிடிப்புகளை தொடங்க வேண்டாம் என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

நாங்க சொல்ற வரைக்கும் எந்த படத்தையும் எடுக்கக் கூடாது.. மீண்டும் ஆர்டர் போட்ட தயாரிப்பாளர் சங்கம் (facebook)
தமிழ் சினிமாவில் அதிகரிக்கும் பெரிய பட்ஜெட் படங்கள், நடிகர்களின் சம்பள உயர்வு, திட்டமிடப்பட்ட நாட்களைக் கடந்து படப்பிடிப்பு போன்ற பிரச்சனைகள் சமீப காலங்களில் அதிகரித்துள்ளது. இதனால், தயாரிப்பாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் பேச்சுவார்த்தை
இந்த பிரச்சனைகளை விரைந்து சரிசெய்ய தேனாண்டாள் முரளி தலைமையிலான தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், நடிகர் சங்கம், பெப்சி உள்ளிட்ட சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
சுமூகமாக நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையல் நவம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் புதிய படங்களை துவக்க வேண்டாம் உள்ளிட்ட சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.