FEFSI: சண்டை பயிற்சியாளர் இறப்பு.. சினிமா படப்பிடிப்புகள் ரத்து.. பெப்சி எடுத்த முடிவு!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Fefsi: சண்டை பயிற்சியாளர் இறப்பு.. சினிமா படப்பிடிப்புகள் ரத்து.. பெப்சி எடுத்த முடிவு!

FEFSI: சண்டை பயிற்சியாளர் இறப்பு.. சினிமா படப்பிடிப்புகள் ரத்து.. பெப்சி எடுத்த முடிவு!

Aarthi Balaji HT Tamil
Jul 23, 2024 02:12 PM IST

FEFSI: சினிமா படப்பிடிப்புகளில் சண்டை பயிற்சியாளர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக வரும் ஜூலை 25 ஆம் தேதி கூட்டம் நடைபெறவுள்ளது. அதனை முன்னிட்டு அன்றைய ஒரு நாள் மட்டும் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்ய பெப்சி அமைப்பு முடிவு செய்து உள்ளது.

சண்டை பயிற்சியாளர் இறப்பு.. சினிமா படப்பிடிப்புகள் ரத்து.. பெப்சி எடுத்த முடிவு!
சண்டை பயிற்சியாளர் இறப்பு.. சினிமா படப்பிடிப்புகள் ரத்து.. பெப்சி எடுத்த முடிவு!

இதனிடையே சினிமா படப்பிடிப்புகளில் சண்டை பயிற்சியாளர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக வரும் ஜூலை 25 ஆம் தேதி கூட்டம் நடைபெறவுள்ளது. அதனை முன்னிட்டு அன்றைய ஒரு நாள் மட்டும் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்ய பெப்சி அமைப்பு முடிவு செய்து உள்ளது.

இது தொடர்பாக வெளியான அறிக்கையில், “ கடந்த 17.7.2024 அன்று சர்தார் 2 படப்பிடிப்பு நடந்த விபத்தில் நமது தென்னித்திய திரைப்பட & டிவி சண்டை இயக்குனர்கள் சண்டை கலைஞர்கள் சங்கத்தின் உறுப்பினர் ஏழுமலை அவர்கள் அகால மரணம் அடைந்த துயரமான செய்தியை நாம் அனைவரும் அறிந்திருப்போம்.

பாதுகாப்பு கருவிகள் முக்கியம்

படப்பிடிப்பில் பணிபுரியும் போது உறுப்பினர்களுக்கு தகுந்த பாதுகாப்பு கருவிகள், படப்பிடிப்பு நிலையங்களில் இருக்க வேண்டும். மற்றும் ஆம்புலன்ஸுடன் கூடிய மருத்துவ வசதிகள் அளிக்கப்பட வேண்டும் என்றும் பல முறை தொடர்ச்சியாக தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், தயாரிப்பு நிறுவனங்களுக்கும் வேண்டுகோள் விடுத்த வண்ணம் உள்ளோம்.

அபாயகரமான சூழ்நிலை

சில நிறுவனங்கள் தவிர பெருழ்பாலான தயாரிப்பு நிறுவனங்கள் இந்த பாதுகாப்பு விதிகளை சிறிதளவும் பின்பற்றுவது இல்லை. மேலும் படப்பிடிப்பில் பணிபுரியும் திரைப்பட கலைஞர்கள் / தொழிலாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பணிபுரிவதால் பல உறுப்பினர்கள் படப்பிடிப்பு நடக்கும் இடங்களிலேயே மரணம் ஏற்படுகின்ற அபாயகரமான சூழ்நிலையில் உறுப்பினர்கள் பணிபுரிந்து வருகின்றார்கள்.

பாதுகாப்பு விழிப்புணர்வு சிறப்பு கூட்டம்

எனவே உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு கருவிகள், வேண்டியும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக வருகின்ற 25.7.2024 தேதியன்று வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில், காலை 9.00 மணியளவில் திரைப்பட கலைஞர்கள் தொழிலாளர்களின் பாதுகாப்பு விழிப்புணர்வு சிறப்பு கூட்டம் ஒன்றை நடத்த உள்ளோம்.

படப்பிடிப்புகள் நடைபெறாது

மேலும் அன்றைய தினம் அனைத்து சங்க உறுப்பினர்களும் கலந்து கொள்ள ஏதுவாக சென்னை நகரில் உள்ளூர் படப்பிடிப்புகள் (சின்னத்திரை, பெரியத்திரை மற்றும் அனைத்து படப்பிடிப்புகள்) நடைபெறாது.

மேலும் வெளியூரில் நடக்கின்ற அனைத்து படப்பிடிப்புகளில் காலை 9. 00 மணி முதல் 10. 00 மணி வரை அனைத்து உறுப்பினர்களையும் படப்பிடிப்பு தளத்திற்கு வரவழைத்து அனைத்து பாதுகாப்பு விதிகளையும் தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என 19. 7. 2024 அன்று நடைபெற்ற சம்மேளன செயற்குழுவில் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.

விழிப்புணர்வு குறித்து அனைத்து பாதுகாப்பு விதிகளையும் வெளியூரில் படப்பிடிப்பு நடைபெறும் அனைத்து தயாரிப்பு நிறுவனங்களுக்கும், தயாரிப்பு நிர்வாகிகள் மூலம் தெரிவிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.