Tamil Debut Directors 2024: இந்த ஆண்டில் வித்தியாச படைப்புகளால் கவனம் ஈர்த்த அறிமுக இயக்குநர்கள் யாரெல்லாம் தெரியுமா?-tamil movie debut directors in 2024 who gain attention from their movies - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Debut Directors 2024: இந்த ஆண்டில் வித்தியாச படைப்புகளால் கவனம் ஈர்த்த அறிமுக இயக்குநர்கள் யாரெல்லாம் தெரியுமா?

Tamil Debut Directors 2024: இந்த ஆண்டில் வித்தியாச படைப்புகளால் கவனம் ஈர்த்த அறிமுக இயக்குநர்கள் யாரெல்லாம் தெரியுமா?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 21, 2024 06:10 PM IST

Tamil Debut Directors 2024: இந்த ஆண்டில் இதுவரை வெளியாகியிருக்கும் படங்களில் தங்களது வித்தியாச படைப்புகளால் கவனம் ஈர்த்த அறிமுக இயக்குநர்கள் யாரெல்லாம் என்பதை பார்க்கலாம். ரசிகர்களை கவர்ந்த ப்ளுஸ்டார், லவ்வர், ஜே பேபி போன்ற படங்களை புதுமுக இயக்குநர்கள் தான் இயக்கியிருந்தனர்.

Tamil Debut Directors 2024: இந்த ஆண்டில் வித்தியாச படைப்புகளால் கவனம் ஈர்த்த அறிமுக இயக்குநர் யாரெல்லாம் தெரியுமா?
Tamil Debut Directors 2024: இந்த ஆண்டில் வித்தியாச படைப்புகளால் கவனம் ஈர்த்த அறிமுக இயக்குநர் யாரெல்லாம் தெரியுமா?

இந்த ஆண்டில் இதுவரை வெளியான படங்களில் ஏராளமான படங்கள் அறிமுக இயக்குநர்களின் இயக்கத்தில் வெளியாகியிருப்பதுடன், கவனத்தையும் பெற்றுள்ளன. அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று, கவனத்தை ஈரத்த அறிமுக இயக்குநர்கள் யாரெல்லாம், அவர்களின் படங்கள் என்ன என்பதை பார்க்கலாம்

ப்ளூஸ்டார்

அசோக் செல்வன், சாந்தனு பாக்யராஜ், கீர்த்தி பாண்டியன், பிருத்வி ராஜன் நடிப்பில் வெளியான ஸ்போர்ட்ஸ் டிராமா படமான ப்ளூஸ்டார் படத்தை எஸ். ஜெயகுமார் இயக்கியுள்ளார்.

சென்னையின் புறநகர் பகுதியான அரக்கோணம் பக்கத்தில் 1990களில் நடக்கும் கதையாக, கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி இரு குழுக்களுக்கு இடையிலான மோதலை கொண்ட படமாக அமைந்துள்ளது.

இந்த படம் ஜனவரி மாதம் 25ஆம் தேதி வெளியானது. அமேசான் ப்ரைம் ஓடிடியில் ப்ளூஸ்டார் படம் உள்ளது

லவ்வர்

மணிகண்டன், ஸ்ரீகெளரி பிரியா நடிப்பில் வெளியான ரொமாண்டிக் ட்ராமா படம்தான் லவ்வர். இந்த ஜெனரேஷன் காதலர்களின் காதலை அபட்டமாக வெளிக்காட்டும் விதமாக இந்த படத்தின் கதை அமைந்திருந்தது.

காதலி மீது அதீதி அக்கறை செலுத்தும் காதலன் என்ற கதைகருவுடன், டாக்ஸிக் காதல் என்ற புதுவித களத்தை கொண்டதாக இந்த படம் அமைந்தது. அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இந்த படத்தை இயக்கியிருந்தார்.

இந்த படம் பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி வெளியானதோடு, நேர்மறையான விமர்சனங்களையும் பெற்றது. லவ்வர் படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் உள்ளது.

ஜே பேபி

ஊர்வசி பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க, அட்டகத்தி தினேஷ், லொல்ளு சபா மனோகர் உள்பட பலரும் நடித்திருக்கும் இந்த படம் குடும்ப டிராமா படமாக அமைந்திருந்தது.

உண்மை கதையை அடிப்படையாக கொண்ட உருவாக்கப்பட்ட இந்த படத்தை சுரேஷ் மாரி இயக்கியிருந்தார். மார்ச் மாதம் 8ஆம் தேதி வெளியான இந்த படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் உள்ளது

ரோமியோ

விஜய் ஆண்டனி - மிருணாளினி ரவி இணைந்து நடிக்க அறிமுக இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் ரொமாண்டிக் காமெடி டிராமா பாணியில் வெளியான படம் ரோமியோ. படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

இரண்டு இளம் ஜோடிகளுக்கு இடையிலான காதல், ஊடல் பின்னணியில் வரும் இன்னொரு கதாபாத்திரத்தால் நிகழும் குழப்பம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு காமெடியுடன், காதலும் கலந்த படமாக ரோமியோ அமைந்திருக்கும்.

கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் 11ஆம் தேதி வெளியான இந்த படம் அமேசான் ப்ரைம் ஓடிடி, ஆஹா ஓடிடி தளங்களில் உள்ளது

உயிர் தமிழுக்கு

ஆன்டி இந்தியன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஆதம் பாவா இயக்குநராக அறிமுகமான படம் உயிர் தமிழுக்கு. இந்த படத்துக்கு அஜயன் பாலா திரைக்கதை எழுதியிருந்தார்.

சமகால அரசயிலை பின்னணியாக கொண்ட கதைகளத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் இயக்குநர் அமீர் கதையின் நாயகனாக நடித்திருந்தார். சாந்தின் ஸ்ரீதரன் இமான் அண்ணாச்சி, ஆனந்த ராஜ் உள்பட பலரும் நடித்திருந்த இந்த படம் மே 10ஆம் தேதி வெளியானது. படத்துக்கு பெரிய வரவேற்ப்பு கிடைக்கவில்லை. இந்த படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் உள்ளது.

நண்பன் ஒருவன் வந்த பிறகு

கமிங் ஏஜ் காமெடி ட்ராமா பாணியில் இளம் துள்ளலுடன், இந்த கால இளைஞர்களின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவாகியிருக்கும் நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தை அறிமுக இயக்குநர் ஆனந்த் ராம் இயக்கியுள்ளார்.

புதுமுகங்கள் நடிப்பில் உருவாகியிருக்கும் இந்த படம் இந்த மாதம் 2ஆம் தேதி வெளியாகி நேர்மறை விமர்சனங்களை பெற்றுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.