Vijay Antony: ‘அது நான் இல்லை..’ விஜய் மில்டனுக்கு விளக்கம் கொடுத்த விஜய் ஆண்டனி - நடந்தது என்ன?
Vijay Antony: மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தில் இடம் பெற்ற சர்ச்சைக்குரிய விஷயம் குறித்து விஜய் ஆண்டனி விளக்கம் அளித்து உள்ளார்.
விஜய் ஆண்டனி, மேகா ஆகாஷ், சத்யராஜ் மற்றும் சரத்குமார் நடிப்பில் உருவான மழை பிடிக்காத மனிதன் படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது.
இந்த படம் சென்சார் சென்றுவிட்டு வந்தவுடன் தனக்கு தெரியாமல் யாரோ ஒரு இணைத்துவிட்டதாக தெரிவித்து வீடியோ ஒன்றைய வெளியீட்டு இருந்தார் இயக்குநர் விஜய் மில்டன்.
இயக்குநர் விஜய் மில்டன் முன்வைத்த குற்றச்சாட்டிற்கு 'அதைச் செய்தது நான் இல்லை' என்று பதிலளித்து விஜய் ஆண்டனி ட்விட்டரில் வெளியீட்டு உள்ளார்.
அதில், “ மழை பிடிக்காத மனிதன் படத்தின் துவக்கத்தில் வரும் இரண்டு நிமிடக்காட்சியை, தனது ஒப்புதல் இல்லாமல் யாரோ இணைத்து உள்ளதாக, என் நண்பர், படத்தின் இயக்குநர் திரு.விஜய் மில்டன் வருத்தம் தெரிவித்திருந்தார். அது நான் இல்லை. இது சலீம் 2 இல்லை “ எனக் குறிப்பிட்டு உள்ளார்.
பத்திரிக்கையாளர் காட்சியில் அமர்ந்தேன்
அந்த வீடியோவில், “மீடியா நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். பொதுவாகவே நான் பத்திரிக்கையாளர்களுக்கு பிரத்யேகமாக திரையிடப்படும் காட்சியில் இருக்கமாட்டேன். முதல் நாள், பட ரிலீஸ் சம்பந்தமான டென்ஷன் இருக்கும் என்பதால், எங்கேயாவது சென்று விடுவேன். ஆனால் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தை பொருத்தவரை, படம் உங்களுக்கு பிடித்திருக்கிறதா என்பது குறித்து பார்ப்பதற்காகவே, பத்திரிக்கையாளர் காட்சியில் அமர்ந்தேன்.
இந்த படத்தின் ஹீரோ யார்? அவன் ஒரு டாக்டரா அடியாளா..? உள்ளிட்ட கேள்விகளை வைத்துதான் இந்த கதையை நான் எழுதியிருந்தேன். மர்மமாக ஒருவன் வந்து இறங்குகிறான். அவனுக்கு தலையில் அடிபட்டு இருக்கிறது. அவனுக்கு ஏன் அடிபட்டு இருக்கிறது அவனுக்கு பின்னால் யார் இருக்கிறார்..? இதற்கிடையில் வரும் சரத்குமார் யார்? அமைச்சர் ஒருவர் சென்னையில் தேடப்படுவது ஏன்? அவனை காப்பாற்ற முயற்சி செய்பவர்கள் யார் யார்? அவனைத் தேடி வருகிறவர்கள் யார் யார்? உள்ளிட்ட கேள்விகளைக்கொண்டே இந்தப்படத்தின் திரைக்கதையை நான் நகர்த்திக் கொண்டு சென்றிருந்தேன். ஆனால் படத்தை பத்திரிகையாளர்களுக்கான காட்சியில் நான் பார்க்கும் பொழுது, அதிர்ச்சிக்கு உள்ளானேன்.
ஒரு நிமிட காட்சி
காரணம் என்னவென்றால், படத்தின் முன் பகுதியில் ஒரு நிமிடத்திற்கு காட்சிகள் வைக்கப்பட்டிருக்கின்றன. படத்தின் இயக்குநராக அந்த காட்சிகளை நான் படத்தில் வைக்கவில்லை. அந்த காட்சிகள் எப்படி வந்தது என்று எனக்கு தெரியவில்லை. அந்த ஒரு நிமிட காட்சியில் அவன் யார்? அவனுடைய பின்னணி என்ன? உள்ளிட்டவற்றை முழுவதுமாக சொல்லிவிட்டார்கள். அப்படி முதலிலேயே கதையின் கருவை சொல்லிவிட்டால், இந்தப் படத்தை எப்படி நாம் பார்க்க முடியும். அதற்காகவா நாங்கள் இவ்வளவு கஷ்டப்பட்டு படத்தை எடுத்தோம். இப்படி ஒரு சீன் வருகிறது என்றால் அதற்கு ஏற்றவாறு நான் திரைக்கதையை மாற்றி எழுதியிருப்பேன்.
சென்சார் செய்யப்பட்ட ஒரு படத்தில் இயக்குநரின் அனுமதி இல்லாமல், ஒரு நிமிட காட்சிகளை வைப்பதற்கு யார் அவர்களுக்கு அனுமதி கொடுத்தார் என்று தெரியவில்லை. இப்படி ஒரு படத்தை காலி செய்ய கூடாது. உங்களிடம் நான் ஒரு கோரிக்கை வைத்து கொள்கிறேன். தயவு செய்து அந்த ஒரு நிமிடத்தை மறந்து விட்டு, நீங்கள் இந்த படத்தை ஓட்டி பாருங்கள். படம் உங்களுக்கு விறுவிறுப்பாக செல்லும்.
எந்தவித சம்பந்தமும் கிடையாது
நான் திரைக்கதையில் அவன் யார் என்பதை கருவாக வைத்து, சின்ன சின்ன மர்ம முடிச்சிகளை வைத்திருக்கிறேன். ஆனால் அந்த ஒரு நிமிட காட்சியில், அந்த காட்சிகளுக்கான காரணங்கள் அனைத்தும் முன்னமே தெரிந்து விட்டது. அப்படி பார்க்கும் பொழுது படம் பார்க்கக்கூடிய பார்வையாளர்கள் காட்சி நகரும் பொழுது, இவைதான் எங்களுக்கு முன்னமே தெரியுமே என்ற ரீதியில் தான் படத்தை பார்ப்பார்கள்.
நான் இதற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. நான் அதற்குள் ஆழமாக செல்ல விரும்பவில்லை. ஆகையால், இந்தப்படம் குறித்தான விமர்சனங்களையோ அல்லது கருத்துக்களையோ நீங்கள் வெளியிடும் பொழுது, படத்தின் முன் பகுதியில் இருக்கக்கூடிய ஒரு நிமிடத்தை மறந்து விட்டு, வெளியிடுங்கள். அதை நான் படத்தில் வைக்கவில்லை. அதற்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது.” என்றார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்