Pasi Narayanan Name Reason: கள்ளம்கபடமற்ற முகம்! முகபாவனையில் சிரிப்பை வரவழைக்கும் நடிகர் பசி நாராயணன் பெயரின் பின்னணி-tamil comedy actor over three decades pasi narayanan name reason and his best performance - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Pasi Narayanan Name Reason: கள்ளம்கபடமற்ற முகம்! முகபாவனையில் சிரிப்பை வரவழைக்கும் நடிகர் பசி நாராயணன் பெயரின் பின்னணி

Pasi Narayanan Name Reason: கள்ளம்கபடமற்ற முகம்! முகபாவனையில் சிரிப்பை வரவழைக்கும் நடிகர் பசி நாராயணன் பெயரின் பின்னணி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 22, 2024 06:03 PM IST

Pasi Narayanan Name Reason: கள்ளம்கபடமற்ற சிரிப்பு, டயலாக் மற்றும் முகபாவனைகளால் சிரிப்பை வரவழக்கும் நடிகராக திகழ்ந்தவர் பசி நாராயணன். மீம்ஸ் நாயகனாக வலம் வரும் நடிகர் பசி நாராயணன் பெயரின் பின்னணி காரணம் என்ன என்பதை பார்க்கலாம்.

Pasi Narayanan Name Reason: கள்ளம்கபடமற்ற முகம்!முகபாவனையில் சிரிப்பை வரவழைக்கும் நடிகர் பசி நாராயணன் பெயரின் பின்னணி
Pasi Narayanan Name Reason: கள்ளம்கபடமற்ற முகம்!முகபாவனையில் சிரிப்பை வரவழைக்கும் நடிகர் பசி நாராயணன் பெயரின் பின்னணி

டாப் நடிகர்கள் இல்லாமல் பிற நடிகர்களுக்கும் பல அடைமொழி பெயர்களால் அழைக்கப்பட்டு வருகிறார்கள். நடிகர்களின் திறமை, தனித்துவ நடிப்பு காரணமாக இந்த பெயர்கள் அவர்களுடன் ஒட்டிக்கொள்கிறது. இந்த அடைமொழி பெயர்கள் என்பது மற்ற மொழி சினிமாக்களை காட்டிலும் தமிழ் மொழியில் சற்று அதிகமாகவே உள்ளது.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் அடைமொழி பெயருடன் மூன்று தசாப்தங்களாக தனது காமெடி நடிப்பால் முத்திரை பதித்தவர் பசி நாரயணன். இவரது பெயரை சொன்னால் பலருக்கும் தெரியாது. மாறாக சூரியன் படத்தில் கவுண்டமணியுடன் காமெடி செய்யும் இவர், போன் வயரு பிஞ்சு ஒரு வாரம் ஆச்சுன்னு சொல்றதை யாராலும் மறக்க முடியாது.

கவுண்டமணியின் காமெடியை மெருகேற்றும் துணி காமெடி நடிகர்களில் முக்கியமானவர்களின் ஒருவராக இருந்தவர் பசி நாரயணன். சூரியின் படத்துக்கு முன்பே கவுண்டமணியுடன் இணைந்து பல படங்களில் தோன்றியிருக்கும் பசி நாராயணன் வயிறு குலுங்க சிரிக்க வைத்திருப்பார்.

எம்ஜிஆருடன் சினிமா பயணம்

சிவகாசியை சேர்ந்த பசி நாராயணன் நடிப்பு மீது கொண்ட ஆர்வத்தினால் மேடை நாடகங்களில் நடிக்க தொடங்கினார். 15 வயதில் இருந்த நாடகங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் தலை காட்டி வந்த அவர், சென்னை வந்திறங்கி சினிமா வாய்ப்புகளை தேடி நடிகரானார்.

1966இல் எம்ஜிஆர் நடிப்பில் வெளியான அன்பே வா தான் இவருக்கு முதல் படம். படத்தில் கல்லூரி கேங்கில் ஒருவராக வருவார். தொடர்ந்து சிவாஜி கணேசன் நடித்த இருமலர்கள், ஜெய்ஷங்கர் நடித்த ராஜா வீட்டு பிள்ளை, எம்ஜிஆரின் குடியிருந்த கோயில், சிரித்து வாழ வேண்டும் போன்ற படங்களில் சின்ன வேடங்களில் சில காட்சிகள் என தோன்றி வந்தார். அதுவரை நாரயணன் என்ற பெயரிலேயே நடித்து வந்தார்.

நாராயணன் பசி நாராயணன் ஆனது எப்படி?

1979இல் துரை இயக்கத்தில் வெளியான பசி படத்தில் சவுண்ட் கண்ணையா என்ற கேரக்டரில் தோன்றி ஹீரோயின் ஷோபாவை ஒரு தலையாக காதலிப்பதும், அவர் இம்ரஸ் செய்ய மைக் செட்டில் பாட்டு போடுவதுமாக காமெடியில் அதகளம் செய்திருப்பார். சீரியஸாக செல்லும் படத்தில் நாராயணன் தோன்றும் காட்சி கலகலப்பாக அமைந்திருக்கும். இவரது இந்த கேரக்டரை இன்ஸ்பிரேஷனாக வைத்து பின்னர் தமிழில் பல படங்கள் வந்தன.

இந்த படத்தில் இவரது நடிப்பு அனைவரின் கவனத்தையும் ஈரக்க, பின்னர் நாரயணன் பெயருக்கு பின்னால் பசி ஒட்டிக்கொண்டது. அத்துடன் இந்த அடையாளம் இவரது சினிமா கேரியரிலும் திருப்புமுனை ஏற்படுத்தி அடுத்தடுத்து வாய்ப்புகளை பெற்று தந்தது.

கள்ளம்கபடமற்ற சிரிப்பு

வசனம், முகபாவனை என இரண்டின் மூலமாகவும் சிரிக்க வைத்த காமெடி நடிகர்களில் முக்கியமானவராக பசி நாரயணன் திகழ்ந்தார். இவரது அற்புத நடிப்பு திறமையை இயக்குநர், நடிகர் பாண்டியராஜன் தனது பல படங்களில் வெளிப்படுத்தி செய்திருப்பார்.

அவரது ஆண்பாவம் படத்தில் ஹோட்டல் நடத்தும் ஜனகராஜ் மற்றும் துணி கடைக்காரர் ஏமாற்றுவது, மனைவி ரெடி படத்தில் தமிழ் வாத்தியராக நிகழ்த்தும் உரையாடல் என்று சொல்லிக்கொண்டே போகலாம். பசி நாரயணன் என்ற பெயர் சொன்னாலே கள்ளம்கபடமற்ற இவரது சிரிப்புதான் நினைவுக்கு வரும். சிரித்தவாறே மற்றவர்களை சிரிக்க வைக்கும் தனித்துவம் கொண்ட நடிகராக திகழ்கிறார்.

பிளாக் அண்ட் ஒயிட் சினிமா காலத்தில் இருந்தே நடித்து வரும் பசி நாராயணன் கவுண்டமனி, செந்திலுடன் இணைந்த பல படங்களில் தோன்றி புகழ் பெற்றார். இவர் பேசு ஒன்றிரண்டு வசனங்கள் கூட பஞ்ச் போல் மனதில் பதிந்துள்ளன. இவர் கடைசியாக விஜய்யுடன் நினைத்தேன் வந்தாய் படத்தில் நடித்திருந்தார். அதிலும் காபி சாப்டீங்களாண்ணா, டிபன் சாப்டீங்களாண்ணா என்ற வசனம் மிகவும் பிரபலமானது.

நடிப்பு மட்டுமின்றி நடனம், கதை சொல்லுதல், எழுத்தாளர் என பன்முகம் கொண்டவராக பசி நாராயணன் திகழ்ந்தார். தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் இவர் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்களின் நாயகனாகவும் உலா வருகிறார். சூரியன் படத்தில் கவுண்டமணியுடன் இணைந்து இவர் வெளிப்படுத்தும் முக பாவனை அடங்கிய மீம்ஸ் பல்வேறு வகைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.