Aan paavam: ‘எத்தனை சினிமா எத்தனை டிராமா பாத்தாச்சு.. எத்தனை டூயட் எத்தனை டியூன் கேட்டாச்சு’ புளிக்காத ஆண்பாவம்!-how many movies and how many dramas have you watched unfermented masculinity - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Aan Paavam: ‘எத்தனை சினிமா எத்தனை டிராமா பாத்தாச்சு.. எத்தனை டூயட் எத்தனை டியூன் கேட்டாச்சு’ புளிக்காத ஆண்பாவம்!

Aan paavam: ‘எத்தனை சினிமா எத்தனை டிராமா பாத்தாச்சு.. எத்தனை டூயட் எத்தனை டியூன் கேட்டாச்சு’ புளிக்காத ஆண்பாவம்!

Pandeeswari Gurusamy HT Tamil
Dec 27, 2023 05:30 AM IST

இன்றும் பெண்பாவம் குறித்து பேசும் காலத்தில் முப்பத்தி எட்டு ஆண்டுகளுக்கு முன் ஆண் பாவம் என்று பெயர் வைத்ததில் இருந்தே ஏடாகூடமாக ஆரம்பமாகிறது திரைப்படம்.

ஆண் பாவம்
ஆண் பாவம்

பாண்டியராஜன் இயக்கத்தில் வெளிவந்த படம். பாண்டியன், பாண்டியராஜன் இருவரும் அண்ணன் தம்பி யாகவும் வி.கே.ராமசாமி அப்பாவாகவும் பாட்டியாக கொல்லங்குடி கருப்பாயி, சீதா,ரேவதி, ஜனகராஜ்,பூர்ணம் விஸ்வநாதன் ஆகியோர் நடித்துள்ளனர்.

படம் முழுவதும் எடக்கு மடக்கான காமெடி கலந்த திரைக்கதையே படத்தை ஜெயிக்க வைத்தது என்று கூறலாம்.  ஒரு காட்சியில் காரை ரிவர்ஸ் எடுக்கும் நபர் பின்னால் உள்ள பாலத்தின் கைப்பிடி சுவரில் இடித்து விடக்கூடாது என்பதற்காக பாண்டிய ராஜனிடம் கூறி விட்டு காரை ரிவர்ஸில் வருவார்.. வரலாம்.. வாங்க.. வாங்க.. போதும்.. போதும்..  வண்டி முட்டிருச்சு என்று அலட்சியமாக சொல்லி விட்டு போவார்.  இப்படித் தான் படம் முழுக்க முழுக்க சிதறி கிடக்கும். அதனால்தான் ‘எத்தனை சினிமா எத்தனை டிராமா பாத்தாச்சு.. எத்தனை டூயட் எத்தனை டியூன் கேட்டாச்சு’ ஆனாலும் இன்றும் ரசிகர்களுக்கு புளிக்காத  திரைப்படமாக ஆண்பாவம் உள்ளது.

மூத்த மகன் பாண்டியன் பெண் பார்க்க போகும் போது முகவரி மாறி வேறு வீட்டுக்கு போய் அந்த பெணணுக்கும் மாப்பிள்ளை க்கும் பிடித்து போக ஆரம்பிக்கிறது சிக்கல். நான் கொடுத்த சரியான முகவரியில் உள்ள பெண்ணைதான் திருமணம் முடிக்க வேண்டும் என்று அப்பா வி.கே.ராமசாமிகறாராக சொல்லிவிட வேறு வழியின்றி திருமண ஏற்பாடுகள் துரிதமாக நடக்கின்றன.

தவறான முகவரியில் ஒரு பெண் இருக்கும் போது அப்பா சொல்லி விட்ட முகவரியிலும் ஒரு பெண் இருக்கத்தானே செய்யும் என்று யோசித்து கொண்டிருக்கும் போதே வாத்தியார் பூரணம் விஸ்வநாதன் மகளாக ரேவதியை இடைவெளி காட்சிக்குள் கொண்டு வருவார் இயக்குனர். குறும்ப கார பெண்ணாக ரேவதி சிறு பிள்ளைகளுக்கு டியூஷன் என்ற பெயரில் வீட்டில் சினிமா பாட்டுகளை ஓடவிட்டு ஆட்டம் போடும் காட்சிகள் எல்லாம் குதூகலம். ஒரு விபத்தில் ரேவதி சிக்கி மருத்துவ மனையில் அனுமதிக்கும் போது ரேவதி கால்ஷீட் இல்லாமல் போயிருக்கும் போல. ரேவதி இல்லாமலேயே மருத்துவமணை காட்சிகளை நகர்த்தி இருப்பார்.  ரேவதி க்கு பேச்சு வராமல் போகவே அவர் பாடிய பாடலை டேப் ரிகார்டரில் கேட்கும் சோகத்தில் பாண்டிய ராஜ் புகுந்து தட்டி விட்டு உடைத்து கலகலப்பாக மாற்றுவார்

கடைசி இரண்டு நிமிடங்களில் கிளைமாக்ஸ்.  யார் யாரை திருமணம் செய்தார்கள் என்பதையும் நகைச்சுவை இழையோட முடித்திருப்பார்.

படத்தின் பெரிய பலம் இளையராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட்.  இந்திரன் வந்தது சந்திரன் வந்தது இந்த சினிமாதான்,, என்ன பாட சொல்லாத,, காதல் கசக்குதய்யா,, குயிலே.. குயிலே.. பூங்குயிலே போன்ற பாடல்களுடன் சிறந்த பின்னணி இசை யும் அமர்க்களபடுத்தும். 

படத்தின் பல இடங்களில் தனது குருவான பாக்யராஜ் சாயல் தெரியும் பாண்டிய ராஜனிடம். இரட்டை அர்த்தம் இல்லாத.. யாரையும் காயப்படுத்தாத.. கிராமிய வாழ்வியலை.. கலாச்சாரத்தை நகைச்சுவையோடு திரைக்கதை யால் வென்ற படம் ஆண் பாவம்.. அன்றும், இன்றும், என்றும் எவர்கிரின் மூவி என்றே சொல்லலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.