HBD Director Shankar: தமிழ் சினிமாவின் பான் இந்தியா இயக்குநர்..பிரமாண்டம், பிரமிப்பு! சினிமா ரசிகர்களை கட்டிப்போட்டவர்-tamil cinema filmmaker director shankar birthday today - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Director Shankar: தமிழ் சினிமாவின் பான் இந்தியா இயக்குநர்..பிரமாண்டம், பிரமிப்பு! சினிமா ரசிகர்களை கட்டிப்போட்டவர்

HBD Director Shankar: தமிழ் சினிமாவின் பான் இந்தியா இயக்குநர்..பிரமாண்டம், பிரமிப்பு! சினிமா ரசிகர்களை கட்டிப்போட்டவர்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 17, 2024 07:41 AM IST

சினிமாவில் நடிகராகும் ஆசையில் வந்து தற்போது தமிழ் சினிமாவின் பான் இந்தியா இயக்குநர் ஆக உருவெடுத்து இருப்பவர் இயக்குநர் ஷங்கர். பிரமாண்டம், பிரமிப்பு மூலம் மூன்று தசாப்தங்களாக சினிமா ரசிகர்களை கட்டிப்போட்டவர் ஆக திகழ்கிறார்.

HBD Director Shankar: தமிழ் சினிமாவின் பான் இந்தியா இயக்குநர்
HBD Director Shankar: தமிழ் சினிமாவின் பான் இந்தியா இயக்குநர்

தமிழ் சினிமாவில் பக்தி படங்களின் இயக்குநர் திருலோகசந்தர், குடும்ப படங்களின் இயக்குநர் விசு, கிராமிய படங்களின் இயக்குநர் பாரதி ராஜா என ஒவ்வொரு இயக்குநர்களுக்கும் என தனித் பிராண்ட் உள்ளது. அந்த வரிசையில் இயக்குநர் ஷங்கருக்கு பிரமாண்டம், பான் இந்தியா, உலக மார்க்கெட் என சினிமாவின் தரத்தையும், உயரத்தையும் வேறு லெவலுக்கு இழுத்து செல்லும் பிராண்ட் இயக்குநராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

நடிகர் டூ இயக்குநர் அவதாரம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தான் இயக்குநர் ஷங்கரின் சொந்த ஊர். மெக்கானிக்கல் எஞ்ஜினியரிங் படிப்பு, சினிமா மீது குறிப்பாக நடிப்பின் மீது ஆர்வம்.

மேடை நாடகங்களின் நடித்து வந்த ஷங்கர் நடிப்பை பார்த்து கவர்ந்த இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர், அவரை அழைத்து தனது கதைக்கு நகைச்சுவை வசனம் எழுத சொன்னார். இது நடிக்கும் வாய்ப்பை எதிர்பார்த்து சென்ற சங்கருக்கு பெருத்த ஏமாற்றமாக இருந்தது. இருந்தாலும் எஸ்.ஏ.சந்திர சேகருடன் இணைந்து ஜெய் சிவ் சங்கர் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினார்.

1986ல் நடந்த பூவும் புயலும் படத்தில் சிறு வேடத்தில் தோன்றினார். மேலும் சில படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்தார்.

நடிப்புக்கான முயற்சி எட்டாக்கனியாகவே இயக்குநராக முயற்சித்த ஷங்கர் அதில் வெற்றியும் கண்டார்.

புது வித மேக்கிங்

தமிழ் சினிமாவுக்கு என இருந்த வழக்கமான மேக்கிங் பாணியில் இருந்து விலகி ரிச்னஸ், அழகியல் அதிகரிக்கும் புது வித மேக்கிங் ஸ்டைலை அறிமுகப்படுத்தினார்.

குறிப்பாக படத்தில் இடம்பெறும் பாடல்களை ரசிகர்களை பார்க்க வைக்கும் விதமாக முதல் ப்ரேம்மில் இருந்தே கண்களுக்கு விருந்தளிக்கும் விதமாக கலர்புல்லாக படமாக்கும் வித்தையை வெளிப்படுத்தினார்.

டெக்னிக்கல் கிங்

ஒரு படத்துக்கு கதை சொல்லல், நடிப்பு ஆகிய விஷயத்தை மேலும் மெருகேற்றி காட்டும் டெக்னிக்கல் விஷயங்களில் கவனம் செலுத்துபவராகவும், அதில் புதுமையை புகுத்துபவராக இருந்தார். அதன் வெளிப்படாக தனது முதல் படமான ஜென்டில் மேன் படத்தில் இடம்பெறும் சிக்கு புக்கு ரயிலே படத்தில் சிறிய கிராபிக்ஸ், இரண்டாவது படமான காதலன் படத்தில் முக்காலா முகாபுலா பாடலில் கிராபிக்ஸ் என அதகளப்படுத்தியிருப்பார்.

ஷங்கரின் இந்த புதுமை நன்கு ஒர்க் அவுட்டாகி போக, தனது படங்களில் தொடர்ந்து கிராபிக்ஸ், விஷுவல் எபெக்ட்ஸ் போன்ற டெக்னிக்கல் விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதை வழக்கமாக்கினார்.

இதேபோல் எந்த ஒரு காட்சி அல்லது பாடலாக இருந்தாலும் அதில் சம்பிரதாய விஷயங்களை கடந்த பிரமாண்டத்தை புகுத்தினார். கற்பனையில் எண்ணக்கூடிய விஷயங்களை திரையில் மெய்யாக தோன்ற வைத்தார்.

இதன் காரணமாகவே இவர் இயக்கிய ஒவ்வொரு படங்களும் ஜனரஞ்சகமான உலகத் தரம் மிக்க படங்களாக உருமாறின.

தயாரிப்பாளராக தரமான படங்கள்

இயக்குநராக ரசிகர்களை கட்டிப்போடும் படங்களை தந்த ஷங்கர், தயாரிப்பாளராகவும் தரமான படங்களை உருவாக்கியுள்ளார். தனது எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் வடிவேலு நடித்து சிம்புதேவன் இயக்கிய இம்சை அரசன் 23ம் புலிகேசி, வசந்தபாலன் இயக்கிய வெயில், பாலாஜி சக்திவேல் இயக்கிய காதல் என இந்த லிஸ்டில் சொல்லிக்கொண்டே போகலாம்.

பான் இந்தியா இயக்குநர்

கமல்ஹாசன் போல் தமிழ் சினிமாவில் பல்வேறு புதுமைகள் புகுத்தியவர்களில் முக்கியமானவராக ஷங்கர் இருந்துள்ளார். பான் இந்தியா என்ற சொல் கடந்த சில ஆண்டுகளாக அனைத்து மொழி சினிமாக்களிலும் அதிகம் பேசப்படும் சொல்லாக இருந்து வருகிறது. ஆனால் இதற்கு முன்னோடியாக 90ஸ் காலகட்டத்திலேயே தனது படங்கள் மூலம் இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த இயக்குநராக திகழ்ந்து வரும் ஷங்கர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.