தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Manickam Narayanan: ‘முதல்ல காச திருப்பிக்கொடு..ஜென்டில் மேன்னா நடத்தையில காமி அஜித்..’ - மாணிக்கம் நாராயணன்

Manickam Narayanan: ‘முதல்ல காச திருப்பிக்கொடு..ஜென்டில் மேன்னா நடத்தையில காமி அஜித்..’ - மாணிக்கம் நாராயணன்

Kalyani Pandiyan S HT Tamil
Jun 01, 2024 05:00 AM IST

Manickam Narayanan: “ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் உன்னை போல சாதித்தவர்கள் பல பேர் இருக்கிறார்கள். அப்படி இருக்கும் பொழுது நான் கிழித்து விட்டேன்…சாதித்து விட்டேன்... கோழி பிரியாணி வைத்தேன்..ஆடு பிரியாணி வைத்தேன்…” - மாணிக்கம் நாராயணன்

Manickam Narayanan: ‘முதல்ல காச திருப்பிக்கொடு..ஜென்டில் மேன்னா நடத்தையில காமி அஜித்..’  - மாணிக்கம் நாராயணன்
Manickam Narayanan: ‘முதல்ல காச திருப்பிக்கொடு..ஜென்டில் மேன்னா நடத்தையில காமி அஜித்..’ - மாணிக்கம் நாராயணன்

ட்ரெண்டிங் செய்திகள்

அஜித் சாதிக்க வில்லை 

அப்படி பார்த்தால் சிவாஜிக்கு யார் பின்னால் இருந்து உதவினார்கள். கமல்ஹாசனுக்கு, ரஜினிகாந்திற்கு அவர்களது குடும்பம் சினிமாவில் மேலே வர உதவியதா  என்ன... ஒரு சில சினிமா கலைஞர்களுக்கு அவர்களது குடும்பம் பின்னணியாக இருந்திருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் அஜித், தான் சாதித்து விட்டதாக சொல்லிக் கொள்கிறார். அப்படி என்ன நீ சாதித்து விட்டாய்... உன்னை போல் சாதித்தவன் 100 பேர் இருக்கிறார்கள்.. 

ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் உன்னை போல சாதித்தவர்கள் பல பேர் இருக்கிறார்கள். அப்படி இருக்கும் பொழுது நான் கிழித்து விட்டேன்…சாதித்து விட்டேன்... கோழி பிரியாணி வைத்தேன்..ஆடு பிரியாணி வைத்தேன்… என்று சொல்லிக்கொள்கிறார். என்னடா பண்றீங்க.. நான் கூடத்தான் நன்றாக சமைப்பேன்.. ஆனால் எனக்கு பிரியாணி வைக்க தெரியாது. காரணம் என்னவென்றால் நான் ஆடு கோழிகளை வெட்டுவதில்லை; யார் வேண்டுமென்றாலும், தன்னுடைய மனைவிக்காக சமைக்கலாம் அதில் என்ன தவறு கிடையாது. 

நானும் சமைப்பேன்

நாங்கள் தென்ஆப்பிரிக்காவில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினோம். அந்த நிகழ்ச்சியில் பல பாடகர்கள் கலந்து கொண்டார்கள். அவர்களுக்கெல்லாம் நானும் என்னுடைய மனைவியும்தான் இணைந்து சமைத்துக் கொடுத்தோம். இதில் என்ன இருக்கிறது... நடிகனாக இருந்தால் சமைக்க கூடாதா என்ன.. உனது மனைவி ஷாலினி மிக நன்றாக சமைப்பாள் என்று எனக்கு தெரியும். அவளுக்கு நீ நன்றாக சமைத்து கொடு...  உனக்கு உணவு  ஸ்ரெஸ் பஸ்டராக செயல்படுகிறது. 

அப்படியானால் அதை எதற்கு நீ நான் செய்கிறேன் சொல்லிக் கொள்கிறாய். ஜென்டில்மேன் என்று சொன்னால் சமைக்க வேண்டுமா என்ன? ஜென்டில்மேன் என்பது உன்னுடைய நடத்தையில் தெரிய வேண்டும்.  அதில் உன்னுடைய ஜென்டில்மேன் தனத்தை காண்பிக்கலாம். வாங்கிய பணத்தை முதலில் திருப்பி கொடு.. வாங்கியதற்கு ஆதாரம் கொடுத்தால் அவனை அழைத்துப் பேசு.. நீ ஏன் மணிரத்னம் போல் பணிந்து ஓடுகிறாய். தயவு செய்து சாவதற்குள் ஒரு நாளாவது மனிதனாக மாறு.. நீ என்னிடம் பணம் வாங்கியது உண்மையா இல்லையா என்பதை நிரூபி. நான் அதை ஆதாரத்தோடு நிரூபித்து விட்டேன். இல்லை என்று நீ நிரூபித்து விட்டால்,நான் வாயை மூடிக்கொண்டு சும்மா இருக்க போகிறேன்.” என்று பேசினார். 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பேட்டியில் பேசிய நபரின் தனிப்பட்ட கருத்துக்கள் ஆகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இந்த தகவல்களுக்கும் ஹிந்துஸ்தான் தமிழ் இணையதளத்திற்கும் சம்பந்தம் கிடையாது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்