தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Love Story: உச்ச இடத்தை காதலுக்காக உதறிய தேவயானி; இப்போதும் இணைபிரியாமல் வாழும் ராஜகுமாரன்

Love Story: உச்ச இடத்தை காதலுக்காக உதறிய தேவயானி; இப்போதும் இணைபிரியாமல் வாழும் ராஜகுமாரன்

Sep 18, 2023 08:42 PM IST Marimuthu M
Sep 18, 2023 08:42 PM , IST

  • இன்றைய காலகட்டத்தில் திருமண பந்தம் ஒரு ஆண்டைத் தாண்டுவதே குதிரை கொம்பான விஷயமாக மாறிவிட்டது. இது சினிமா துறையில் இன்னும் படுமோசம். அப்படியிருக்க காதல் வயப்பட்டு திருமணம் முடித்த தேவயானி - ராஜகுமாரன் தம்பதியினர் 22 ஆண்டுகளைக் கடந்து அதே அன்புடன் ஒற்றுமையாக வாழ்ந்துவருகின்றனர். அவர்களின் காதல் கதை

ஒரு உதவி இயக்குநராக அறிமுகமாகி, ஒரு பெண்ணின் மனதில் கணவராக இடம்பிடித்தவர் தான், இயக்குநர் ராஜகுமாரன். சூர்யவம்சம் படத்தில், விக்ரமனிடம் உதவி இயக்குநாரகப் பணிபுரிந்த ராஜகுமாரனுக்கு, தேவயானியிடம் வசனம் சொல்லித்தரும் வேளை இருந்ததாம். அப்போது எந்தவொரு பாசாங்கும் இல்லாமல், மிக இயல்பாக தேவயானிக்கு தமிழ் உச்சரிப்பு, நடிப்பு, வசனம் ஆகியவற்றை சொல்லிக் கொடுத்திருக்கார், ராஜகுமாரன். அப்போது, தாங்கள் முதல் படம் செய்யும்போது, தான் கதை கேட்காமல் நடிப்பேன் என்று சொல்லியிருக்கிறார், தேவயானி. அந்தளவுக்கு ராஜகுமாரன் தேவயானிக்கு ஒரு நம்பிக்கையான ஆளாக மாறியிருந்தார். 

(1 / 5)

அதேபோல, தான் முதலில் இயக்கும் நீ வருவாய் என என்னும் படத்திற்கு, புரொடியூசரை பிடித்துவிட்டு, தேவயானியைப் பார்க்கப்போயிருக்கிறார், ராஜகுமாரன். அவரைப் பார்த்ததும் படம் ஓகே ஆகிவிட்டதுதானே என குழந்தைப் போல் சந்தோஷப்பட்டு சிரித்தாராம், தேவயானி. அதன்பின், நீ வருவாய் என படத்தில் தேவயானி நடித்தும், படமும் பெரிய ஹிட் ஆனது. அப்போதே, ராஜகுமாரன் மீது மிகப்பெரிய பாசம் வந்திருக்கிறது, தேவயானிக்கு!

(2 / 5)

அதன்பின், விண்ணுக்கும் மண்ணுக்கும் திரைப்படத்தினை இயக்கும் வாய்ப்பினைப் பெற்றார், இயக்குநர் ராஜகுமாரன். அப்படத்திலும் ஹீரோயினாக தேவயானியை ஃபிக்ஸ் செய்து அணுகியுள்ளார், ராஜகுமாரன். உடனே, அவருக்கு சம்மதம் கிடைத்துள்ளது. இதற்கிடையே தேவயானிக்கு ஒரு சேலையினை யதார்த்தமாக வாங்கிக்கொடுத்துள்ளார்,ராஜகுமாரன். இந்நிலையில் ராஜகுமாரன் மீது இருக்கும் காதல் காரணமாக, அவர் வாங்கித்தந்த சேலையினை அணிந்துகொண்டு, நம்மைப் பற்றி பலரும் பலவாறு கிசுகிசுக்கின்றனர் எனக்கூறியுள்ளார். ஆனால், ராஜகுமாரன் அதை கண்டுகொள்ளவில்லையாம். பின் வெளிப்படையாக தன் காதலை வெளிப்படுத்தியுள்ளார். அதன்பின் இருவருக்கும் காதல் பற்றிக்கொண்டது.

(3 / 5)

பிறகு, தன் காதலை தனது குடும்பத்தினரிடம் வெளிப்படையாக சொல்லிவிட்டார், தேவயானி. ஆனால், கடும் எதிர்ப்புக் கிளம்பியது. ராஜகுமாரன் வீட்டில் பெரியளவில் எதிர்ப்பு இல்லை. தேவயானியை வீட்டுச் சிறையில் வைக்க அவர்களது பெற்றோர் முடிவு செய்தநிலையில், வீட்டைவிட்டு வெளியேறிய தேவயானி, ராஜகுமாரனுடன் சென்றுவிட்டார். இதனையறிந்த தேவயானியின் பெற்றோர், இவர்களது திருமணம் திருப்பதியில் நடக்கிறது என பரவிய தகவலையறிந்து அங்கு முகாமிட்டு தேடியுள்ளனர். ஆனால், தேவயானி - ராஜகுமாரன் திருமணம் திருத்தணியில் ரகசியமாக நடைபெற்றது.

(4 / 5)

2001ஆம் ஆண்டு,திருமணம் முடித்தாலும் ராஜகுமாரனுக்கு இயக்குநராக சரியான பிரேக் கிடைக்கவில்லை. திருமணத்தின்போது, உச்ச நட்சத்திரமாக இருந்தாலும் திருமணமானதும் தேவயானியின் மார்க்கெட் டல்லடிக்க ஆரம்பித்தது. இந்நிலையில் எதைப் பற்றியும் கவலைப்படாமல் பல்வேறு மொழிகளில் நடிக்க கிடைக்கும் வாய்ப்பு, சீரியல் என அனைத்தையும் பயன்படுத்தி வாழ்வில் முன்னேறினார், தேவயானி. வாய்ப்பில்லை எனினும் கணவரையும் அவர் கைவிடவில்லை. இந்த அந்நியோயன்ய தம்பதிகளின் அன்புக்குப் பரிசாய் இனியா, பிரியங்கா என இருபெண் குழந்தைகள் உள்ளனர்.  

(5 / 5)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்