தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Devayani: நடிகர் சங்க கட்டிடம் கட்டுங்கள்..விஜயகாந்த் சார்பாக கோரிக்கை வைத்த தேவயானி

Devayani: நடிகர் சங்க கட்டிடம் கட்டுங்கள்..விஜயகாந்த் சார்பாக கோரிக்கை வைத்த தேவயானி

Aarthi Balaji HT Tamil
Jan 20, 2024 08:01 AM IST

நடிகர் சங்க கட்டிடம் கட்ட வேண்டும் என தேவயானி கோரிக்கை வைத்து உள்ளார்.

தேவயானி
தேவயானி

ட்ரெண்டிங் செய்திகள்

அதன்படி, மறைந்த நடிகர் விஜயகாந்த்தின் நினைவேந்தல் கூட்டம் சென்னை, தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நேற்று(ஜன.19) நடைபெற்றது. 

இதில், கமல்ஹாசன், சரத்குமார், ராதாரவி, நாசர், விக்ரம், கார்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், ஜெயம் ரவி, சத்யராஜ், தேவயானி, ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட நட்சத்திரங்கள் மேடையில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்தின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

அந்த நிகழ்வில் பேசிய தேவயானி, “ விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக இருந்த போது தான் நான் நடிகர் சங்கத்தில் இணைந்தேன். அவரே போன் செய்து நடிகர் சங்கத்தில் இணையச் சொன்னார். அது எவ்வளவு பெரிய விஷயம். கார்கில் விழா மதுரையில் நடந்தது.

நட்சத்திரங்களான நாங்கள் அனைவரும் ஒரே ரயிலில் சென்னையிலிருந்து சென்றோம். கார்கில் போர் சமயத்தில் பணம் திரட்டி கொடுத்தோம். அது அவரால் மட்டும் தான் முடியும். ஒரு குடும்பமாக நாங்கள் சென்றோம். 

யார் அது மாதிரி சேர்க்க முடியும். இது ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது. அவரின் சொந்த தயாரிப்பில் இரண்டு படங்கள் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ரொம்ப இயல்பான குணம் கொண்டவர். படப்பிடிப்பு செட் என்றால் முதலில் அவர் தான் இருப்பார். அவர் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. நடிகர் சங்க கட்டிடத்தை விரைவில் கட்டி முடிக்க வேண்டும்.  எல்லாரும் இணைந்து குடும்பமாக உள்ளே செல்வோம் “ என்றார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்