கங்குவா கொடுத்த அடி.. இனிமே இந்தத் தப்ப மட்டும் பண்ணாத.. டைரக்டருக்கு டைட் கொடுத்த சூர்யா
சூர்யா நடிப்பில் திரைக்கு வரவுள்ள கார்த்திக் சுப்புராஜின் படத்தில் இந்தத் தவறை மட்டும் செய்யவே கூடாது என சூர்யா தெளிவாக கூறியுள்ளார்.

கங்குவா நடிகர் சூர்யாவின் சினிமா வரலாற்றில் மாபெரும் வெற்றிப் படமாக அமையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது வெளியான முதல் நாளில் இருந்தே பெரும் நெகட்டிவ் விமர்சனத்தை பெற்று வந்தது.
இதனால் படம் பார்க்க வரும் ரசிகர்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்து படம் மாபெரும் தோல்வியை சந்தித்தது. இதற்கு முக்கிய காரணமாக பர்க்கப்படுவது படத்திற்கு வைக்கப்பட்ட புரொமோஷன் நிகழ்ச்சிகள் தான். இதில் படம் குறித்து பல ஹைப்புகளை கொடுத்த நிலையில், ரசிகர்கள் பல எதிர்பார்ப்புகளுடன் தியேட்டருக்கு வந்து ஏமாந்து போயினர்.
கங்குவாவால் முக்கிய முடிவெடுத்த சூர்யா
இது சூர்யாவிற்கு பெரிய அடியாகவே இருந்தது. 2 ஆண்டுகளுக்குப் பின், சூர்யா கதாநாயகனாக நடித்த படம் வெளியாகி உள்ள சமயத்தில் இதுபோன்ற விமர்சனங்கள் அடுத்தடுத்து வெளியாகும் சூர்யாவின் படத்தையும் பெரிதாக பாதிக்கும் என நம்பப்படுகிறது. இதனால், சூர்யை சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
