நடிகர் சூர்யாவின் க்ர்ஷ் யார் தெரியுமா? - தம்பி கார்த்தியிடம் போட்டுவாங்கி போட்டுடைத்த பாலய்யா!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  நடிகர் சூர்யாவின் க்ர்ஷ் யார் தெரியுமா? - தம்பி கார்த்தியிடம் போட்டுவாங்கி போட்டுடைத்த பாலய்யா!

நடிகர் சூர்யாவின் க்ர்ஷ் யார் தெரியுமா? - தம்பி கார்த்தியிடம் போட்டுவாங்கி போட்டுடைத்த பாலய்யா!

Marimuthu M HT Tamil Published Nov 11, 2024 10:31 AM IST
Marimuthu M HT Tamil
Published Nov 11, 2024 10:31 AM IST

நடிகர் சூர்யாவின் க்ர்ஷ் யார் தெரியுமா? - தம்பி கார்த்தியிடம் போட்டுவாங்கி போட்டுடைத்த பாலய்யாவின் செயல் வைரல் ஆகியுள்ளது.

நடிகர் சூர்யாவின் க்ர்ஷ் யார் தெரியுமா? - தம்பி கார்த்தியிடம் போட்டுவாங்கி போட்டுடைத்த பாலய்யா!
நடிகர் சூர்யாவின் க்ர்ஷ் யார் தெரியுமா? - தம்பி கார்த்தியிடம் போட்டுவாங்கி போட்டுடைத்த பாலய்யா!

நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா(பாலய்யா) தொகுத்து வழங்கும் அன்ஸ்டாப்பளிள் வித் என்.பி.கே. டாக் ஷோவில் (Unstoppable with NBK Season 4) நடிகர் சூர்யாவும் பாலிவுட் நடிகர் பாபி தியோலும் கலந்துகொண்டனர். இது ஆஹா ஓடிடி தளத்தில் வெளியானது.

பிரபல தெலுங்கு நடிகர் பாலய்யா எனப்படும் நந்தமுரி பாலகிருஷ்ணா நடத்தும் ‘அன்ஸ்டாப்பளிள் வித் என்.பி.கே' என்னும் டாக் ஷோவின் நான்காவது சீசன் கடந்த அக்டோபர் 25ஆம் தேதி, இரவு 8:30 மணிக்கு ஆஹா ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த நிகழ்ச்சியின் முதல் எபிசோடுக்கு, ஆந்திர முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

அன்ஸ்டாப்பளின் என்.பி.கே நிகழ்வில் சூர்யா:

இந்நிலையில் அன்ஸ்டாப்பபிள் வித் என்பிகே (Unstoppable with NBK Season 4) நிகழ்ச்சியின் இரண்டாவது எபிசோடில், நடிகர் சூர்யா விருந்தினராக கலந்துகொண்டார். கங்குவா படத்தின் புரொமோஷனுக்காக சூர்யா பங்கு எடுத்த எபிசோடு ஆஹா ஓடிடியில் கடந்த நவம்பர் 8ஆம் தேதி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

சமீபத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா தொகுத்து வழங்கிய இந்த டாக் ஷோவில் சூர்யா, தனக்குப் பிடித்த உணவு முதல் தனக்கு பிடித்த படம் வரை அனைத்தையும் பகிர்ந்து கொண்டார். ஆனால் பாலய்யா கேட்ட ஒரு கேள்விக்கு மட்டும் சூர்யா பதிலளிக்கத் தயங்கினார். 

அப்போது சூர்யாவின் தம்பி கார்த்திக்கு போன் செய்த நந்தமுரி பாலகிருஷ்ணா, சூர்யாவின் க்ரஷ் யார் எனக்கேட்டார். அதற்கு கார்த்தி பதிலளித்ததும் ஒட்டுமொத்த அரங்கும் சிரித்தது. அவற்றுள் சில.

உங்களுக்குப் பிடித்த உணவு எது என்று கேட்டபோது, "எனக்கு பிடித்த உணவு பிரியாணி" என்று சூர்யா பதிலளித்தார். அதன்பிறகு எந்த வயதில் உங்களுக்கு முதல் ஈர்ப்பு ஏற்பட்டது என்று கேட்டார், நந்தமுரி பாலகிருஷ்ணா. ஆனால் சூர்யாவிடம் இருந்து அவ்வளவு எளிதாக எந்தப் பதிலும் வரவில்லை. பாலய்யா நீ யார் என்று கேட்டு வற்புறுத்தினார். பாலய்யா வற்புறுத்தியும் சூர்யா யாருடைய பெயரையும் சொல்லவில்லை.

போனில் போட்டுக்கொடுத்த நந்தமுரி பாலகிருஷ்ணா:

இதையடுத்து  நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா என்ற பாலய்யா, சூர்யாவின் தம்பி கார்த்திக்கை போனில் அழைத்து இந்த கேள்விக்குப் பதில் கேட்டார். 

அதற்குப் பதிலளித்த கார்த்தி, ’சுக்குபுக்கு சுக்குபுக்கு ரயிலே என்று ஒரு பழைய பாடல் இருக்கிறது. அதில் நடித்த நடிகை தான் சார்’ என்று சொன்னார்.

கார்த்தி பதிலளிக்க முயற்சிக்கையில் சூர்யா அவரை நிறுத்தச்சொன்னார். ஆனால், அதற்குள் எல்லோரும் யூகித்து விட்டனர். உடனே, நந்தமுரி பாலகிருஷ்ணா, ‘கெளதமியா’ எனக் கேட்டார். சூர்யா உட்பட அனைவரும் சிரித்துவிட்டனர். இந்த சம்பவத்துக்குப் பிறகு, ’செய்தித்தாள் இந்த செய்தியால் நிரம்பி வழியும்" என்று பாலய்யா நக்கலடித்தார்.

1993ஆம் ஆண்டு வெளியான ஜென்டில்மேன் திரைப்படத்தில் சிக்கு புக்கு சுக்கு புக்கு ரயிலே என்ற பாடலில் பிரபுதேவாவுடன் கெளதமி நடனமாடியிருப்பார் எனத் தெரிகிறது. 

கங்குவா திரைப்படம் வரும் நவம்பர் 14ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. சூர்யா மற்றும் திஷா பதானி நடித்த பெரிய பட்ஜெட் படத்தைக் காண காத்திருக்கும் அனைத்து ரசிகர்களுக்கும் இது மகிழ்ச்சியை அளித்துள்ளது. இது பல்வேறு மொழிகளில் ரிலீஸாகிறது.