மூன்று மடங்கு அதிக சம்பளம்..என்னை விட நன்கு தமிழ் பேசிய ஜோதிகா..அப்போது நான் உணர்ந்த விஷயம்! சூர்யா பேச்சு
என்னை விட நன்கு தமிழ் பேசிய ஜோதிகா, மூன்று மடங்கு அதிக சம்பளம் வாங்கினார். அப்போது தான் சில விஷயங்களை உணர்ந்தேன் என கங்குவா புரொமோஷன் நிகழ்ச்சியில் சூர்யா எமோஷனலாக பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் இந்திய திரையுலகிலேயே அதிக ரசிகர்களை கொண்டிருக்கும் ஸ்டார் தம்பதிகளாக சூர்யா - ஜோதிகா இருந்து வருகிறார்கள். அடுத்தடுத்து பாலிவுட் படங்களில் கமிட்டாகியிருக்கும் ஜோதிதாக, தற்காலிகமாக மும்பையில் செட்டிலாகியுள்ளது.
அவருடன் நடிகர் சூர்யாவும் மும்பையில் வசித்து வருகிறார். அத்துடன் தனது படங்களின் ஷுட்டிங்குக்காக மட்டும் சென்னை மற்றும் பிற பகுதிகளுக்கு செல்வதும், மும்பைக்கு வருவதுமாக இருக்கிறார்.
சூர்யாவின் புதிய படமான கங்குவா வரும் வியாழக்கிழமை உலகம் முழுவதும் பிரமாண்டமாக திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தின் புரொமோஷன் பணிகளில் பிஸியாக இருக்கும் சூர்யா, இந்தியா முழுவதும் முக்கிய நகரங்களில் படத்தை பிரபலப்படுத்தி வருகிறார்.
கங்குவா புரொமோஷன் நிகழ்ச்சியின்போது படம் பற்றி பேசுவதோடு மட்டுமல்லாமல், தனது தனிப்பட்ட வாழ்க்கை, தனது மனைவியும் நடிகையுமான ஜோதிகா பற்றியும் பல்வேறு விஷயங்களை சூர்யா பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் சினிமாவில் இருவரும் ஒரே காலகட்டத்தில் பயணத்தை தொடங்கினாலும், ஜோதிகா தன்னை விட மூன்று மடங்கு அதிகமாக சம்பளம் வாங்கியது பற்றி சூர்யா பேசியுள்ளார்.
என்னை விட தமிழில் நன்கு பேசுவார்
இதுபற்றி சூர்யா கூறும்போது, "எனக்கு தமிழ் தெரியும். தவிர நான் ஒரு நடிகரின் மகன், ஆனால் வசனம் பேசுவதில் தடுமாறிக்கொண்டிருந்தேன். எனது வசனங்கள், வரிகளை மறந்துவிடுவேன். நடிக்கவும் தெரியாமல் சிரம்ப்பட்டேன். என்னுடைய மூன்றாவது அல்லது நான்காவது படம் வரை இந்த தடுமாற்றம் தொடர்ந்தது.
ஆனால் ஜோதிகா அப்படியில்லை. அவருடைய வேலை நெறிமுறையின் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருந்தது, என்னை விட அவருக்கு வசனங்கள் நன்றாகத் தெரிந்திருந்ததோடு, அதை சரியாகவும் வெளிப்படுத்துவார். அவர் தனது இதயத்தால் பணியை நேசித்ததோடு, அனைத்தையும் மிகவும் நேர்மையாக கற்றுக் கொண்டார். இதன் விளைவாக அவர் வெற்றியை நோக்கி உயர்ந்தார்.
மூன்று மடங்கு அதிகமாக சம்பளம் வாங்கினார்
நான் சினிமாவில் நிலைபெறுவதற்கு ஐந்து வருடங்கள் எடுத்துக் கொண்டேன். என்னை ஹீரோ என்று சொல்லிக் கொள்ளவும், சொந்த மார்க்கெட் உருவாக்கும் சிறிது காலம் ஆனது. காக்க காக்க படத்தில் அவருடைய சம்பளம் என்னுடையதை விட மூன்று மடங்கு அதிகம். அப்போது தான் நான் வாழ்க்கையில் எங்கே இருக்கிறேன் என்பதை உணர்ந்தேன்.
ஜோதிகா என் வாழ்வில் ஒரு பகுதியாக இருக்க தயாராக இருந்தார். அதற்கு அவரது பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்தார்கள். அந்த நேரத்தில் நான் எவ்வளவு சம்பாதிக்கிறேன், அவர் என்ன சம்பாதிக்கிறாள் என்பதை உணர்ந்தேன். நான் அவருக்கு இணையாக முன்னேற வேண்டுமென்பதை உணர்ந்தேன்.
அவருக்கு சமமாக இருந்தால் தான், குறைந்தபட்சம் பாதுகாப்பை உணர வைக்க முடியும் என கருதினேன். இறுதியில், எல்லாம் நடந்தது" என்றார்.
பிரபஞ்சம் எங்களை இணைக்கும்
முன்னதாக கேரளாவில் நடந்த கங்குவா புரொமோஷனில் பேசிய நடிகர் சூர்யா, "ஜோதிகாவுடன் மீண்டும் நடிக்க வேண்டும் என்பது கனவாகவே உள்ளது. அதை நான் விரும்புகிறேன். விரைவில் நடக்கும் என நம்புகிறேன்.
எங்கள் இருவரையும் வைத்து படம் இயக்க வேண்டும் என எந்த இயக்குநரையும் நாங்கள் கேட்க விரும்பவில்லை. மாறாக அது தானாகவே நடக்க வேண்டும். ஏதாவதொரு இயக்குநர் நாங்கள் இருவரும் இணைந்து நடிக்குமாறு பொருதமான கதையை கொண்டு வர வேண்டும். இந்த பிரமபஞ்சம் அதை நடத்தி வைக்கும்" என்று கூறினார். அந்த வகையில் ஜோதிகாவுடன் மீண்டும் இணைந்து நடிக்க வேண்டும் என்ற விருப்பத்தை அவர் தெரிவித்திருப்பதுடன், அது இயக்குநர்கள் கையில்தான் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
கங்குவா கதை
கங்குவா படத்துக்கு 700 ஆண்டுகளுக்கு முந்தைய உலகத்தை சிறுத்தை சிவா உருவாக்கி உள்ளார். அங்கு 3 தெய்வங்களை வழிபட்டு வந்த மக்களுக்குக்கிடையே ஏற்பட்ட கருத்து மோதல்கள் யுத்தமாக மாறுகிறது. இதில் யார் வெல்கிறார்கள் என்பது தான் படத்தின் கதையாக உள்ளது.
கங்குவாவின் உலகம் நெருப்பை கடவுளாக கும்பிடுகிறார்கள். அதேபோல் ரத்தத்தை கடவுளாக வணங்கிறார்கள் உதிரனின் உலகம். நீரை கடவுளாக வழிபடும் மக்கள் இருக்கிறார்கள். இந்த மூன்று உலகங்களுக்கு இடையே நடைபெறும் போட்டியை பேண்டஸி, ஆக்ஷன் கலந்து சொல்லப்பட்டிருக்கிறது.
கங்குவா ரிலீஸ்
பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் கங்குவா படம் சூர்யா நடிப்பில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகிறது. இந்த படம் மூலம் பாலிவுட் இளம் நாயகி திஷா பதானி, பாலிவுட் நடிகர் பாபி தியோல் ஆகியோர் தமிழில் அறிமுகமாகிறார்கள். படம் தமிழ், தெலுங்கு, இந்தி தவிர உலகம் முழுவதும் 38 மொழிகளில் வெளியாக இருக்கிறது.