Actress Gowthami: ‘பிரேக்கப் ரொம்ப ரொம்ப வலிக்கும்… ஆனா அதுல இருந்துதான்’ - நடிகை கெளதமி ஓப்பன் டாக்!
நான் இந்த இடத்தில் சொல்ல விரும்புவது என்னவென்றால், நீங்கள் பள்ளி, கல்லூரி என எவ்வளவு கட்டங்களை தாண்டி, சாதித்து இங்கு வந்து இருக்கிறீர்கள் என்பதை தயவு செய்து யோசித்து பாருங்கள் - நடிகை கெளதமி!
(1 / 6)
Actress Gowthami: ‘பிரேக்கப் ரொம்ப ரொம்ப வலிக்கும்… ஆனா அதுல இருந்துதான்’ - நடிகை கெளதமி ஓப்பன் டாக்!
(2 / 6)
Actress gowthami: பிரபல நடிகையான கெளதமி காதல் தோல்வி குறித்து பேசி இருக்கிறார். இது குறித்து எஸ்.எஸ். மியூசிக் சேனலுக்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில், “எல்லோருடைய வாழ்க்கையிலும் பிரேக்கப் இருந்திருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. குறிப்பாக இளம் வயதில், அதை சந்திக்கும் பொழுது, நீங்கள் இன்னும் அதிகமாக மனம் உடைந்து போவீர்கள். உடைந்து போய் விடுவீர்கள்: நான் இந்த இடத்தில் சொல்ல விரும்புவது என்னவென்றால், நீங்கள் பள்ளி, கல்லூரி என எவ்வளவு கட்டங்களை தாண்டி, சாதித்து இங்கு வந்து இருக்கிறீர்கள் என்பதை தயவு செய்து யோசித்து பாருங்கள். நீங்கள் ஒரு பிரேக்கபை சந்திக்கும் பொழுது, அந்த பிரேக்கப் எதனால் ஒர்க்அவுட் ஆகவில்லை என்பதை யோசியுங்கள்.
(3 / 6)
அதிலிருந்து அனுபவத்தை மட்டும் எடுத்துக் கொண்டு முன்னேறுங்கள். அது உங்களுக்கு எவ்வளவு வலியை கொடுத்தாலும், அதில் இருக்கக்கூடிய நல்ல விஷயங்களை தேடுங்கள். அந்த பாரத்தை மறப்பதற்கு, புதிதாக ஏதாவது ஒரு விஷயத்தை கற்றுக் கொள்ளுங்கள். .
(4 / 6)
நிறைய இடங்களுக்கு பயணப்படுங்கள். நீங்கள் அந்த நபருடன் இருக்கக்கூடிய சூழ்நிலைகளில் மட்டும் சுற்றி வரும் பொழுது, அது தொடர்பான நினைவுகள் உங்களை மீண்டும் மீண்டும் துன்புறுத்த வாய்ப்பு இருக்கிறது. ஆகையால் அந்த சூழ்நிலையை தவிர்த்து பயணம் செய்ய தொடங்கி விடுங்கள். வேலையை மாற்றுங்கள்: உங்களது வேலை செய்யும் இடத்தை கூட மாற்றி விடுங்கள் காரணம், நீங்கள் அப்படி ஒரு மாற்றத்தை நடத்தும் பொழுது, உங்களுடைய பொறுப்புகள் மாறும். நீங்கள் புதிதாக ஒரு மாற்றத்தை உங்கள் வாழ்க்கைக்குள் கொண்டு வர முடியும். ஆனால், நடந்தது எதையும் நீங்கள் உங்களுடைய தோல்வியாக மட்டும் நினைத்துக் கொள்ளாதீர்கள்.” என்று பேசினார்.
(5 / 6)
மேலும் பேசும் அவர் பேசும் போது, “ நீங்கள் தான் உங்களுடைய பலம். நீங்கள் ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருந்து, அந்த ரிலேஷன்ஷிப் சரிவர ஒர்க் அவுட் ஆகவில்லை என்றால், அதற்கு நீங்கள் அதற்கு முழு பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
மற்ற கேலரிக்கள்