சிவசங்கரிக்கு கயல் கொடுத்த எச்சரிக்கை.. துள்ள துடிக்க கொல்ல நினைக்கும் தயாளன்.. கயல் எபிசோடு அப்டேட்!
கயல் சீரியலில் கயல் சிவசங்கரிக்கு எச்சரிக்கை ஒன்றை விடுக்கிறார். அந்த எச்சரிக்கை என்ன என்பதை பார்க்கலாம்.
கயல் சீரியலில் இருந்து இன்று வெளியான ப்ரோமோவில், மூர்த்தி கத்திக்குத்து பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த நிலையில், கல்யாண கோலத்தோடு கயலும் எழிலும், அவர்களது குடும்பத்தினரும், அங்கு பதைப்பதைப்போடு காத்துக்கொண்டிருந்தார்கள்.
இதற்கிடையே தனியாக வந்த சிவசங்கரியிடம் வந்த கயல், எனது அண்ணனை ஆள் வைத்து கொலை செய்ய முயற்சி செய்தது நீங்களாக கூட இருக்கலாம் என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது என்று கூறி, எனக்கு ஒரு நல்ல மாமியாராக இருந்தீர்கள் என்றால்…. என்று எச்சரிக்கை விடுக்கிறாள். இதற்கிடையே கண் விழித்த மூர்த்தி நான் இந்த சமயத்தில் கயலின் பக்கத்தில் ஒரு அப்பா ஸ்தானத்தில் இருந்திருக்க வேண்டும் என்று கூறினான். ” தொடர்பான காட்சிகள் இடம் பெற்று இருந்தன.
கடந்த எபிசோடில் நடந்தது என்ன?
கத்திக்குத்து பட்டு மூர்த்தி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தான். அவனுக்கு மருத்துவர் அறுவை சிகிச்சை செய்தார். கயல் மற்றும் குடும்பத்தினர் பரபரப்பில் வெளியே தவித்துக் கொண்டிருந்தார்கள். சிகிச்சை முடிந்து வெளியே வந்த மருத்துவர் மூர்த்தி நன்றாக இருக்கிறான் என்று சொல்ல, அனைவரும் உள்ளே சென்று அவனைப் பார்த்தார்கள்.
கல்யாணக்கோலத்தில் கயல் இருப்பதை பார்த்த மூர்த்தி, தயவு செய்து நீ மாப்பிள்ளையை கூட்டிக்கொண்டு சம்பிரதாயங்களை கவனி என்று சொன்னான். ஆனால் கயலோ உன்னை இப்படி விட்டுவிட்டு நான் எப்படி அங்கு சந்தோஷமாக இருக்க முடியும். நான் இங்கேதான் இருப்பேன்; நீ டிஸ்சார்ஜ் ஆகும் வரை உனக்கு உறுதுணையாக இருப்பேன் என்று சொல்லி அடம் பிடித்தாள். ஆனால் மூர்த்தி விடுவதாக இல்லை. அவனை சமாதானப்படுத்தி வலுக்கட்டாயமாக புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைத்தான்.
காரியத்தை சாதித்துக் கொண்டாள்.
இதற்கிடையே மூர்த்தியை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற தயாளன் சிவசங்கரிக்கு போன் செய்து, கயல் உங்களை ஜெயித்து அவரது காரியத்தை சாதித்துக் கொண்டாள். என்னுடைய மகள் தற்போது மனநல காப்பகத்தில் இருக்கிறாள். உங்களுடைய பிள்ளையை காதலித்தது தவிர, தீபிகா வேறு என்ன தவறு செய்தால் சொல்லுங்கள்… என்னை இப்படி ஏமாற்றி விட்டீர்களே என்று சாடினார்.
அத்துடன் இதற்கு காரணமான கயலையும் எழிலையும் கொலை செய்ய கூட நான் துணிவேன் என்று சொல்ல, துடித்து போன சிவசங்கரி, என்னுடைய மகனுக்கு ஏதாவது ஒன்று நடந்தால், உங்களுக்கு எதிரியாக மாறுவதற்கு கூட நான் யோசிக்க மாட்டேன் என்று சொல்ல, இறங்கி வந்த தயாளன், என்னுடைய மகள் உங்களுடைய மகனை காதலித்ததால், நீங்கள் அவளுக்கு அவனுக்கு அம்மா. அதனால் எழிலை நான் எதுவும் செய்யப் போவதில்லை.
ஆனால் கயலை ஒரு வழி ஆக்கி விடுவேன் என்று சொல்ல தற்போதைக்கு ஏதும் செய்ய வேண்டாம். ஏனென்றால் இப்போது நீங்கள் உள்ளே வந்தால், மூர்த்தியின் கொலைக்கு நீங்கள்தான் காரணமோ சந்தேகம் வெளிப்பட்டு, அதன் மூலமாக நானும் வெளியே தெரிய ஆரம்பித்து விடுவேன் என்று எச்சரித்தாள். இதையடுத்து அவள் அமைதியானார்.
இதனைதொடர்ந்து புகுந்த வீட்டிற்கு வந்த கயலுக்கும் எழிலுக்கும் ஆரத்தி எடுக்கப்படுகிறது. இதையடுத்து எல்லோரும் உட்கார்ந்து பேச, கயல் அப்பா மூர்த்தியை கத்தியால் குத்தி கொலை செய்யும் அளவுக்கு யார் துணிந்து இருப்பார்? அவனுக்கான எதிரி யார்? என்ற கேள்விகளை எழுப்ப, சிவசங்கரிக்கு மனதில் பயம் உண்டாகிறது.
டாபிக்ஸ்