இந்த வாரம் டிஆர்பியில் எந்த சீரியலுக்கு முதல் இடம்.. விஜய் டிவியை டாப் 5-க்குள் நுழையவிடாமல் சம்பவம் செய்த சன் டிவி
இந்த வாரம் டிஆர்பியில் எந்த சீரியலுக்கு முதல் இடம்.. விஜய் டிவியை டாப் 5-க்குள் நுழையவிடாமல் சம்பவம் செய்த சன் டிவி
Serials TRP: தமிழ் மக்களுக்கும், சீரியலுக்கும் ஒரு பெரிய பந்தம் இருக்கிறது. அந்த இரண்டையும் யாராலும் பிரிக்க முடியாது. காலை ஆரம்பித்து இரவு வரை சீரியல் பார்ப்பது என்பது இன்றும் பல வீடுகளில் நிகழத்தான் செய்கிறது. 2024ஆம் ஆண்டின் 42ஆவது வாரத்தில் டி.ஆர்.பி.யில் முதல் ஐந்து இடத்தைப் பிடித்த சீரியல்கள் குறித்துப் பார்ப்போம். இந்தப் பட்டியலில் ஒரு இடத்தில் கூட விஜய் டிவியின் சீரியல்கள் எதுவும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கயல்:
சன் தொலைக்காட்சியில் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல், கயல். அக்டோபர் 25, 2021ஆம் ஆண்டு முதல் தொடங்கிய இந்த நெடுந்தொடர் தற்போது வரை வெற்றிகரமாக நடந்து வருகிறது. தந்தையை இழந்து குடும்பத்தின் மொத்த பொறுப்புகளையும் தூக்கி சுமக்கும் மகளாக ’கயல்’ என்னும் இளம் பெண் இருக்கிறார்.
அவர் செய்யும் செயல்களுக்குப் பல்வேறு தடைகள் எழுகின்றன. போதாக்குறைக்கு அவரது திருமணத்தை நிறுத்த அவரது நெருங்கிய சொந்தங்கள் கங்கணம் கட்டி செயல்பட்டன. அதை எல்லாம் சமாளித்து பிரச்னைகளை முறியடிக்கிறார், கயல் என்பதே கதை.
நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த, கயல், எழில் திருமணம் தற்போது நடந்துவிட்டது. கடந்த வாரம் போலவே, கயல் சீரியல் தான் டி.ஆர்.பி ரேட்டிங்கில் 11.08 புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்றுள்ளது.
மூன்று முடிச்சு:
சன் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா , அ.சுரேஷ் பாபு தயாரிப்பில் ஒளிபரப்பாகி வரும் புதிய சீரியல் ’மூன்று முடிச்சு. இந்த வாரம், 9.78 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
இந்த சீரியலில் கதையின் நாயகன், தன் திருமண நாளில் சடாரென கல்யாணத்தை நிறுத்திவிட்டு தான் நேசித்த கிராமத்துப் பெண்ணின் கழுத்தில் தாலியைக் கட்டிவிட்டார். அடுத்தடுத்து டிவிஸ்ட் தரும் மூன்று முடிச்சு சீரியலின் கதை, பல ரசிகர்களைக் கடந்த வாரம் ஈர்த்திருக்கிறது.
சிங்கப்பெண்ணே:
கிராமத்தில் மகிழ்ச்சியாக இருந்த இளம்பெண் ஆனந்தி, குடும்ப கஷ்டத்தைப் போக்க சென்னை வருகிறாள். வேலைக்கு வந்த ஒரு பெண்ணின் கதை என்னவாகிறது என்பதே சிங்கப்பெண்ணே கதை. சமீபத்தில் தொடங்கிய இந்த தொடர் சன் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வாரம் டி.ஆர்.பி. ரேட்டிங்கில் 9.17 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது.
மருமகள்:
'மருமகள்' என்ற புதிய சீரியல் சன் தொலைக்காட்சியில் ஜூன் 10 முதல் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த புதிய சீரியல் திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பாகிறது. கேப்ரியல்லா ஆதிரை என்னும் கதையின் நாயகியாக நடிக்கிறார். ஆதிரையை எப்படியாவது திருமணம் செய்ய வேண்டும் என்று முனைப்பில் இருக்கிறார், பிரபு. ஆனால் ஒரு பக்கம் கல்யாண செலவை நினைத்து அவர் பயத்திலும் இருக்கிறார். எல்லாவற்றிலும் கணக்கு பார்க்கும் அவர், திருமணத்திலும் அதையே பின் செய்கிறார். இதனால் வரும் பிரச்னைகளையும் எதிர்கொள்கிறார். இந்த மருமகள் சீரியல் இந்த வாரம் 8.97 புள்ளிகளைப் பெற்று நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.
சுந்தரி:
சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல், சுந்தரி. இந்த வார டிஆர்பியில் 8.75 புள்ளிகள் பெற்று ரேட்டிங் லிஸ்டில் 5ஆவது இடத்தில் சுந்தரி இருக்கிறது. மாவட்ட ஆட்சியராக இருக்கும் சுந்தரி, ஆதரவற்ற சிறுமியின் மாற்றந்தாயாக இருந்து பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்வது ரசிகர்களைக் கவர்ந்து உள்ளது.