காதல் டூ கொலை முயற்சி.. சினிமாவை மிஞ்சும் கதையில் சிக்கிய நடிகர்.. பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் அந்த நபர் யார்?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  காதல் டூ கொலை முயற்சி.. சினிமாவை மிஞ்சும் கதையில் சிக்கிய நடிகர்.. பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் அந்த நபர் யார்?

காதல் டூ கொலை முயற்சி.. சினிமாவை மிஞ்சும் கதையில் சிக்கிய நடிகர்.. பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் அந்த நபர் யார்?

Malavica Natarajan HT Tamil
Oct 06, 2024 10:57 PM IST

பவுன்சர், சீரியல் நடிகர், கர்ப்பிணியிடம் அநாகரிகமாக நடந்துகொன்டு சிறை சென்றவர் என தமிழ் மக்களால் அறியப்படும் சீரியல் நடிகர் அர்னவ் பிக்பாஸ் சீசன் 8 வீட்டிற்குள் நுழைகிறார். அவர் குறித்த தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்.

காதல் டூ கொலை முயற்சி.. சினிமாவை மிஞ்சும் கதையில் சிக்கிய நடிகர்.. பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் அந்த நபர் யார்?
காதல் டூ கொலை முயற்சி.. சினிமாவை மிஞ்சும் கதையில் சிக்கிய நடிகர்.. பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் அந்த நபர் யார்?

சீரியல் வாய்ப்பு

இதையடுத்து, அங்குள்ள ஒருவரின் ஆலோசனையின் பேரில், சீரியலில் வாய்ப்பு கிடைத்து. இவர் முதன்முதலில் சன் டிவியில் ஒளிபரப்பான சக்தி சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார். பின் அதே சன் டிவியில், கேளடி கண்மனி, பிரியசகி, கல்யாண பரிசு, அழகு போன்ற சீரியர்களில் நடித்தார். அதன் பின் விஜய் டிவியில் செல்லம்மா சீரியலில் வாய்ப்பு கிடைத்தும் அங்கு சென்றார். இங்கு தான் அவரது வாழ்க்கையையே புரட்டிப்போட்ட சம்பவம் நடந்துள்ளது.

5 வருட லிவிங் டு கெதர்

கேளடி கண்மனி தொடரில் நடித்துவந்தபோது, உடன் நடித்த திவ்யா என்பவரை காதலித்துள்ளார். அப்போது, இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் சுமார் 5 வருடம் தனியாக வாழ்ந்து வந்துள்ளனர். பின், யாருக்கும் தெரியாமல் திவ்யாவை இந்து முறைப்படி திருமணம் செய்துள்ளார். இதற்கிடையில் திவ்யா கர்ப்பமான நிலையில், இவர்கள் குறித்த தகவல் வெளியாகத் தொடங்கியது.

தொடங்கிய சண்டை

இதையடுத்து திவ்யா, இவர்கள் இருவரின் திருமணப் புகைப்படம், தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தையும் சோசியல் மீடியாவில் பதிவேற்றினார். இதில் தொடங்கியது அர்னவ் வாழ்க்கையில் பஞ்சாயத்து.

திவ்யா சோசியல் மீடியாவில் போட்டாவை போட்டதால் ஆரம்பித்த சண்டை படிப்படியாக வளர்ந்தது. இதையடுத்து இருவரும் ஒருவருக்கொருவர் மாறி மாறி குறை சொல்லி வந்தனர். முதலில் திவ்யா, அர்னவ்விற்கு திருமணம் ஆன பின்பும் செல்லம்மா சீரியல் நடிகை அன்ஷிதாவுடன் எல்லை மீறிப் பழகுகிறார். திருநங்கை ஒருவருடன் தொடர்பில் உள்ளார் என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

முட்டி மோதிய தம்பதி

இதற்கு பதிலளித்த அர்னவ், திவ்யா தனக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை உள்ளதை மறைத்து என்னை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதை மறைக்க இப்படி தன் மீது புகாரளிப்பதாக கூறினார்.

இதையடுத்து, அர்னவ் தான் கர்ப்பமாக இருப்பதை தெரிந்த உடனே என்னை விட்டு சென்றுவிட்டார். அதுமட்டுமல்லாமல் என்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றால் இஸ்லாம் மதத்திற்கு மாற வேண்டும் என வலியுறுத்தி கட்டாய மதமாற்றம் செய்தார் எனக் கூறினார். மேலும், தான் கர்ப்பமாக இருப்பதை அறிந்தம் வயிற்றிலேயே எட்டி உதைத்தார் எனவும் கூறினார்.

ஜெயிலுக்கு போன அர்னவ்

இந்தப் புகாரின் அடிப்படையில் அர்னவை போலீசார் கைதும் செய்தனர். பின் அர்னவ் ஜாமீனில் வெளிவந்தார். இவர்கள் இருவரின் பிரச்சனைக்கு இடையில், திவ்யாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அதை அர்னவ் காண வரவில்லை எனவும் திவ்யா குறை கூறி வந்தார்.

இவர்கள் சண்டையில், பலரும் அர்னவிற்கு எதிராக திரும்ப, செல்லம்மா சீரியலில் நடித்த அன்ஷிதா அர்னவ்விற்கு ஆதரவாக நின்றார்.

முடிந்த சீரியல்

இதனால், இந்த விவகாரம் ஒருபுறம் சென்றாலும் சிறையிலிருந்து வெளியே வந்த அர்னவ் தொடர்ந்து சீரியலில் நடித்தார். பின் தனக்கு பிறந்த குழந்தை குறித்தும் நெகிழ்ச்சியாக அர்னவ் பல இடங்களில் பேசியுள்ளார். இந்நிலையில், இப்போது அந்த சீரியலும் முடிவுக்கு வந்தது. அர்னவ் திவ்யா பிரச்சனையாலே இந்த சீரியலின் டிஆர்பி அதிகரித்ததாக பலரும் கூறி வந்த நிலையில், அர்னவ் இப்போது பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளார்.

 பரபரப்பிற்கு பஞ்சமில்லாத அர்னவ்வின் வாழ்க்கையை மேலும் பரபரப்பாக்க உள்ளது இந்த பிக்பாஸ் சீசன். பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் இவரை மக்கள் எவ்வாறு ஏற்றுக் கொள்கின்றனர். இவர் நிகழ்ச்சியில் மற்ற போட்டியாளர்களிடம் எவ்வாறு நடந்து கொள்கிறார் என்பதை இன்று முதல் காணலாம்.

Whats_app_banner