தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Venkat Prabhu : 'நீ தல ரசிகன்.. உனக்கு என் படத்துல சான்ஸா?' பிரேம்ஜி ரிஜக்ட் செய்த விஜய்.. போட்டு உடைத்த வெங்கட்பிரபு!

Venkat Prabhu : 'நீ தல ரசிகன்.. உனக்கு என் படத்துல சான்ஸா?' பிரேம்ஜி ரிஜக்ட் செய்த விஜய்.. போட்டு உடைத்த வெங்கட்பிரபு!

Divya Sekar HT Tamil
Sep 11, 2023 09:59 AM IST

இயக்குநர் வெங்கட் பிரபு, பிரேம்ஜி தனியார் ஊடகம் ஒன்றில் அளித்த பேட்டியில் தல ரசிகர் என்பதால் பிரேம்ஜி என் படத்தில் நடிக்க கூடாது என தளபதி விஜய் சொன்னதாக வெங்கட்பிரபு பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

வெங்கட்பிரபு
வெங்கட்பிரபு

ட்ரெண்டிங் செய்திகள்

ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. மேலும் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரபல நடிகர் ஜெய் நடிப்பார் என கூறப்படுகிறது. இப்படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்க இருக்கும் நிலையில் பிரியங்கா மோகன் ஒரு நாயகி என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டது.

இன்னொரு நாயகியாக நடிக்க ஜோதிகா, சிம்ரன், சினேகா ஆகியோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் வெங்கட் பிரபு தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் சினேகாவுடன் எடுத்துக் கொண்ட வீடியோவை வெளியிட்டுள்ளார். 

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ’தளபதி 68’ திரைப்படத்தில் சினேகா தான் நடிக்கவுள்ளார் என கமெண்ட் செய்து வருகின்றனர். அஜித்துக்கு மங்காத்தா, சிம்புவுக்கு மாநாடு என சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர் வெங்கட் பிரபு தளபதி விஜய்க்கும் அப்படி மாஸ் படத்தை கொடுப்பார் என ரசிகர்கள் அதிக எக்ஸ்பெக்டேஷனை தளபதி 68 படத்தின் மீது வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் இயக்குநர் வெங்கட் பிரபு, பிரேம்ஜி தனியார் ஊடகம் ஒன்றில் பேட்டி அளித்துள்ளனர். அதில் தளபதி விஜய் பிரேம்ஜி தல ரசிகர் என்பதால் ரிஜக்ட் செய்ததாக கூறியுள்ளனர். அதாவது அந்த பேட்டியில் பிரேம்ஜி கூறும்போது , “ தளபதி என்கிட்ட நானும் உங்க அண்ணனும் படம் பண்ணும் போது அதில் நீ நடிக்க கூடாதுனு சொன்னாரு. ஏன் அண்ணானு கேட்டத்துக்கு நீ தல ஆளுனு சொன்னாரு.

நீ வேணா அந்த படத்துக்கு மியூசிக் பண்ணு ஆன நீ நடிக்க கூடாது என சொன்னாரு. அதுக்கப்புறம் கெஞ்சிக் கூத்தாடி இல்ல அண்ணா ஏற்கனவே உங்க ரசிகர்கள் எல்லாம் என்ன கழுவிக் கழுவி ஊத்தறாங்க அண்ணா” என நகைச்சுவையாக பிரேம்ஜி அந்த வீடியோவில் கூறியிருந்தார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்