Deva: விஜய் வாழ்க்கையை புரட்டிய படம்.. சிறப்பான வெற்றியை கொடுத்த தேவா
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Deva: விஜய் வாழ்க்கையை புரட்டிய படம்.. சிறப்பான வெற்றியை கொடுத்த தேவா

Deva: விஜய் வாழ்க்கையை புரட்டிய படம்.. சிறப்பான வெற்றியை கொடுத்த தேவா

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 17, 2024 07:00 AM IST

தேவா திரைப்படம் இன்றுடன் வெளியாகி 29 ஆண்டுகள் ஆகின்றன.

தேவா
தேவா

அப்படி அவரது சினிமா வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்திய திரைப்படங்களில் ஒன்றுதான் தேவா. வித்தியாசமான கதைகளை கொண்ட இந்த திரைப்படத்தை இயக்கியவர் நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர்.

ஆரம்ப காலகட்டத்தில் நடிகர் விஜய்யை வைத்து எத்தனையோ திரைப்படங்கள் இவர் இயக்கியிருந்தாலும் ஒரு சில படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றனர். அப்படிப்பட்ட திரைப்படங்களில் தேவா திரைப்படமும் முக்கிய இடத்தை வகித்து வருகிறது.

கதை

 

வெளியூரில் இருந்து படித்துவிட்டு ஊருக்கு வர கூடிய நடிகர் விஜய், அங்கே இருக்கக்கூடிய நடிகை ஸ்வாதியை காதலிக்கின்றார். நடிகர் விஜயின் அண்ணனாக மன்சூர் அலிகான் நடித்திருப்பார் மிகவும் மோசமான நடவடிக்கைகளால் அனைவராலும் வெறுக்கப்பட்டு அந்த ஊரில் மன்சூர் அலிகான் வாழ்ந்து வருவார்.

உன் கொடுமையான செயல்களில் ஈடுபடக்கூடிய மன்சூர் அலிகானுக்கு உதவியாக மணிவண்ணன் செயல்படுவார். அந்த ஊரில் பல்வேறு விதமான கொடுமை செயல்களை செய்யும் மன்சூர் அலிகானை எதிர்த்து சுவாதியின் தந்தையான சிவகுமார் போராட்டம் செய்வார்.

சுவாதியை காதலிப்பது குறித்து அவரது தந்தை சிவக்குமாரிடமும் தனது தாயிடமும் விஜய் அனுமதி வாங்கி விடுகிறார். ஆனால் அண்ணனான மன்சூர் அலிகான் விஜய்யின் காதலுக்கு சம்மதம் தெரிவிக்க மறுக்கிறார். விஜய்யும் அவரது தாயும் மன்சூர் அலிகான் எதிர்த்து சிவகுமார் சேர்ந்து போராட்டம் செய்கின்றனர். விஜய் மற்றும் சுவாதிக்கு நிச்சயதார்த்தம் செய்யப்பட்டாலும், போராட்டம் வெற்றியடைந்த பிறகு திருமணம் நடக்கும் என விஜய் முடிவு செய்கிறார்.

தம்பியான விஜய்யும் அவரது காதலி சுவாதியும் சேரக்கூடாது என்பதற்காக மன்சூர் அலிகான் பல்வேறு விதமான இடையூறுகளை கொடுக்கின்றார் கடைசியில் அனைத்து இடையூறுகளையும் கடந்து மன்சூர் அலிகானை கொலை செய்ய விஜய் செல்கிறார். அப்போது சிவக்குமார் அதனை தடுத்து விடுகிறார். மன்சூர் அலிகான் ஒரு உதவியாக இருந்த மணிவண்ணன் கையால் கடைசியில் கொல்லப்படுகிறார்.

இந்த திரைப்படத்திற்கு இசையமைத்தவர் தேவா. இந்த பட பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றி பெற்றன. இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் 3 பாடல்கள் பாடியுள்ளார். அய்யய்யோ அலமேலு என்ற பாடல் இன்றுவரை பார்ட்டி சாங்காக இருந்து வருகிறது.

எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடிய ஒரு கடிதம் எழுதினேன் பாடல் இன்றுவரை பலருது பிளே லிஸ்டில் இருந்து வருகிறது என்று கூறினால் அது மிகையாகாது. படத்திலிருந்து பெற்ற பெரும்பாலான பாடல்களை பாடலாசிரியர் வாலி எழுதியுள்ளார்.

நடிகர் விஜய்யின் திரை பயணத்தில் தேவா திரைப்படம் ஒரு மிகப்பெரிய மைல்களாக அமைந்தது. இந்த திரைப்படம் இன்றுடன் வெளியாகிய 29 ஆண்டுகளாகின்றன. தமிழ் சினிமா மட்டுமல்லாது, நடிகர் விஜய் பயணத்திலும் தேவா திரைப்படம் தவிர்க்க முடியாத திரைப்படமாக கட்டாயம் இருக்கும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.