HBD Anjali: கற்றது தமிழ் ஆனந்தி முதல் கேம் சேஞ்சர் வரை.. யதார்த்த நடிகை அஞ்சலி - பிறந்த நாள் சிறப்புப் பகிர்வு
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Anjali: கற்றது தமிழ் ஆனந்தி முதல் கேம் சேஞ்சர் வரை.. யதார்த்த நடிகை அஞ்சலி - பிறந்த நாள் சிறப்புப் பகிர்வு

HBD Anjali: கற்றது தமிழ் ஆனந்தி முதல் கேம் சேஞ்சர் வரை.. யதார்த்த நடிகை அஞ்சலி - பிறந்த நாள் சிறப்புப் பகிர்வு

Marimuthu M HT Tamil
Jun 16, 2024 07:14 AM IST

HBD Anjali: கற்றது தமிழ் ஆனந்தி முதல் கேம் சேஞ்சர் வரை.. யதார்த்த நடிகையாக மிளிரும் அஞ்சலியின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவர் திரைத்துறையில் கடந்து வந்த பாதையைப்பேசுகிறது இந்தக் கட்டுரை..

HBD Anjali: கற்றது தமிழ் ஆனந்தி முதல் கேம் சேஞ்சர் வரை.. யதார்த்த நடிகை அஞ்சலி - பிறந்த நாள் சிறப்புப் பகிர்வு
HBD Anjali: கற்றது தமிழ் ஆனந்தி முதல் கேம் சேஞ்சர் வரை.. யதார்த்த நடிகை அஞ்சலி - பிறந்த நாள் சிறப்புப் பகிர்வு

யார் இந்த நடிகை அஞ்சலி?: 

ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில், ரசோல் என்னுமிடத்தில் ஜூன் 16ஆம் தேதி, 1986ஆம் ஆண்டு பிறந்தவர் தான், நடிகை அஞ்சலி. நடிகை அஞ்சலிக்கு இரண்டு சகோதரர்களும், ஒரு சகோதரியும் உடன்பிறந்தவர்கள் ஆவர். தனது பள்ளிப் படிப்பை ரசோலிலேயே தெலுங்கு மீடியத்தில் படித்த நடிகை அஞ்சலி, அதன்பின், சென்னைக்குப் புலம்பெயர்ந்தார். அப்போது இளங்கலை கணிதம் பயின்றார். அதன்பின் சின்ன சின்ன குறும்படங்களில் நடித்த அஞ்சலி, அதில் கிடைத்த அங்கீகாரம் மூலம், சினிமாத்துறைக்குள் நுழைந்தார்.

திரைத்துறையில் நுழைந்த அஞ்சலி:

ஆரம்பத்தில் மாடலிங் செய்துகொண்டு, சின்ன விளம்பரங்களில் நடித்துக் கொண்டு இருந்த அஞ்சலிக்கு, சிவ நாகேஸ்வர ராவ் என்னும் இயக்குநர், தெலுங்கில் ‘போட்டோ’என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். அதன்பின் ’பிரேமலேகா ராசா’ என்னும் தெலுங்கு படத்திலும் நடித்தார். இந்த இரண்டு படங்களும் தோல்வியானது. இதனால், தெலுங்கு சினிமாவில் நடிகையாக வேண்டும் என்ற தன் கனவை இழந்தார்.

நல்ல பெர்மாராக மாறிய அஞ்சலி:

அதன்பின்,  இவரது படத்தைக் கண்ட இயக்குநர் ராம், ‘கற்றது தமிழ்’ என்னும் படத்தில் ஆனந்தி என்னும் மிகவும் ஆழமான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார். இப்படம், தமிழ் சினிமா ரசிகர்களிடையே அஞ்சலி யார் என்பதை வெளிச்சமிட்டுக் காட்டியது. நிறைய 90’ஸ் கிட்ஸ்களுக்கு அஞ்சலி நடித்த ஆனந்தி கேரக்டரை போன்று, தோழி அமைந்திடாதா என்னும் ஏக்கத்தையே வரவைத்தது. அவ்வளவு கச்சிதமாக நடித்திருந்தார், அஞ்சலி.

அதன்பின், 2008ஆஅம் ஆண்டு ‘ஆயுதம் செய்வோம்’ என்னும் படத்தில் சுந்தர். சியுடன் சேர்ந்து நடித்து இருந்தாலும் இப்படமும் எதிர்பார்த்த பெயரை அஞ்சலிக்குப் பெற்றுத் தரவில்லை. அதன்பின், இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் ‘சேர்மக்கனி’ என்னும் ஜவுளிக்கடையில் வேலைபார்க்கும் பெண்ணாக நடித்த ‘அங்காடித் தெரு’ படம், பலரையும் அவரது கதாபாத்திரத்துடனும் அவரது நடிப்புடனும் ஒன்ற வைத்தது.

அதன்பின், இயக்குநர் தாமிரா இயக்கத்தில் ‘ரெட்டை சுழி’ படத்திலும், இயக்குநர் கெளதமன் இயக்கி நடித்த ‘மகிழ்ச்சி’படத்திலும் நடித்தார், நடிகை அஞ்சலி. ஆனால், இப்படம் பெரியளவில் ரசிகர்களால் கொண்டாடப்படவில்லை. அதன்பின், ’தூங்கா நகரம்’ என்னும் படத்தில் மதுரைப் பெண்ணாக நடித்திருப்பார், அஞ்சலி.

பின், அஜித்தின் 50ஆவது படமான ‘மங்காத்தா’வில், சுசித்ரா சுமந்த் என்னும் கேரக்டரில் வைபவின் ஜோடியாக நடித்தார். பலரால் கவனிக்கப்பட்டார்.

அடுத்து வந்தது தான், இயக்குநர் சரவணன் இயக்கத்தில் ‘எங்கேயும் எப்போதும்’ திரைப்படம். இப்படத்தில் எதையும் தைரியமாக முடிவு எடுக்கும் ஒரு நர்ஸாகவும், தனது காதலனை அதிகாரம் செலுத்தும் காதலியாகவும் ’மணிமேகலை ராமசாமி’ என்னும் கதாபாத்திரத்தில் வெளுத்து வாங்கியிருப்பார். ‘அடடா கடவுள் ஆண்கள் நெஞ்சை மெழுகில் செய்தானடி.. ஒவ்வொரு நொடியிலும் பெண்ணைக் கண்டால் உருகிட வைத்தானடி’ என இப்படத்தில் இருந்த அஞ்சலியை பல ஆண்கள் ரசித்தனர். 

அடுத்து வந்த ’தம்பி வெட்டோத்தி சுந்தரம்’ படத்தில் லார்ட் மேரி கதாபாத்திரம், ’அரவான்’ படத்தில் வஞ்சி என்னும் கதாபாத்திரம், ’கலகலப்பு’வில் மாதவி என்னும் கதாபாத்திரம் அஞ்சலியை கமர்ஷியல் ஏரியாவிலும் பேசவைத்தது.

பின் கின்ஸ்லின் இயக்கத்தில், ஏ.ஆர். முருகதாஸ் தயாரித்த ‘வத்திக்குச்சி’ திரைப்படத்தில், அறிமுக நடிகர் திலீபனுடன் லீனா என்னும் கதாபாத்திரத்தில் வாழ்ந்திருப்பார், அஞ்சலி. இப்படத்தில் வரும் ’கண்ண கண்ண உரசி உரசி என்னைப் பார்க்கிற’ என்னும் பாடல் மிகப்பெரிய ஹிட்டடித்தது.

அதன்பின், ’இறைவி’ திரைப்படத்தில் ‘பொன்னி’ என்னும் கதாபாத்திரத்துக்கு உயிர்கொடுத்து நடித்திருப்பார், அஞ்சலி. பின், மலையாள உலகின் மெகா ஸ்டார் மம்முட்டி, தமிழில் நடித்த  ‘பேரன்பு’வில் விஜயலட்சுமி என்னும் விஜியாக, யாரும் எதிர்பார்க்காத கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

தற்போது, இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் ’கேம் சேஞ்சர்’ படத்திலும், இயக்குநர் ராமின் இயக்கத்தில் ‘ஏழு கடல் ஏழு மலை’ ஆகியப் படங்களிலும் நடித்து வருகிறார், நடிகை அஞ்சலி.

தமிழ் சினிமாவில் தனது ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிக்கும் யதார்த்த நடிகை அஞ்சலிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் கூறுவதில் மகிழ்ச்சியடைகிறது, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்!

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.