தமிழ் செய்திகள்  /  Entertainment  /  38-year-old Anjali's Unmarried Life Is Influenced By The Forces

Actress Anjali: 38 வயதாகியும் திருமணம் ஆகாத அஞ்சலியின் வாழ்வில் விளையாண்ட சக்திகள்!

Marimuthu M HT Tamil
Feb 03, 2024 03:39 PM IST

நடிகை அஞ்சலி விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

38 வயதாகியும் திருமணம் ஆகாத அஞ்சலியின் வாழ்வில் விளையாண்ட சக்திகள்!
38 வயதாகியும் திருமணம் ஆகாத அஞ்சலியின் வாழ்வில் விளையாண்ட சக்திகள்!

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழில் ’கற்றது தமிழ்’ படத்தில் ஆனந்தி என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதன் மூலம் காத்திரமான நடிகையாக அறிமுகம் ஆனவர், நடிகை அஞ்சலி. இவர், ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ரசோலில் 1986ஆம் ஆண்டு பிறந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகியப் பல்வேறு மொழிகளில் நடித்து இருந்தாலும் தமிழில் அதிகப் படங்களில் நடித்து வந்தார். குறிப்பாக, அஞ்சலி நடித்த அங்காடி தெரு, ரெட்டை சுழி, மகிழ்ச்சி, தூங்கா நகரம், மங்காத்தா, எங்கேயும் எப்போதும், தம்பி வெட்டோத்தி சுந்தரம், அரவான், வத்திக்குச்சி, மாப்ள சிங்கம், இறைவி, தரமணி, பலூன், பேரன்பு, நாடோடிகள் 2, சிந்துபாத், பாவ கதைகள் ஆகியப் படங்கள் ஹிட்டானது மட்டுமின்றி, அவருக்கு நல்ல பெயரையும் பெற்றுத் தந்தன.

இந்நிலையில் இயக்குநர் ராம் இயக்கத்தில் நடிகை அஞ்சலி, ‘ஏழு கடல் ஏழு மலை’ என்னும் படத்தில் நடித்திருந்தார். இப்படம் சமீபத்தில் ரோட்டார்டாம் திரைப்பட விழாவில் திரையிட்டு காண்பிக்கப்பட்டு, மிகுந்த பாராட்டுகளைப் பெற்றது. இப்படி தமிழ் சினிமா கேரியரில் நல்ல பெயரைக் கொண்டிருந்தாலும் அவர் மனதிற்குள் இன்னும் திருமணம் ஆகவில்லை என்ற சோகம் இருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

முன்னதாக கருங்காலி என்னும் படத்தில் நடிக்கும்போது இயக்குநர் களஞ்சியத்துக்கும் நடிகை அஞ்சலிக்கும் இடையே நெருக்கம் இருந்ததாக அரசல் புரசலாக கிசுகிசுக்கப்பட்டது.

எங்கேயும் எப்போதும் படத்தில் நடிக்கும்போது ஜெய்க்கும் அஞ்சலிக்கும் ஏற்பட்ட நட்பு அது இருவருக்கும் இடையே காதலாக மலர்ந்ததாகவும், பின்னர் நடிகர் ஜெய்யின் குடிப்பழக்கத்தினால் பிரிவு ஏற்பட்டதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. அதன்பின் விமல் படத்தில் சேர்ந்து நடிக்கும்போது, அவருடன் ஜோடியாக சேர்ந்து கிசுகிசுக்கப்பட்டார், அஞ்சலி. 

இப்படி பெயர் கெட்டுப்போனதால் தமிழ் சினிமாவுக்கு ஏற கட்டிவிட்டு, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய சினிமாக்களில் நடிக்கத்தொடங்கினார், அஞ்சலி. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக நல்லபெயரை சம்பாதித்து வருகிறார். அதேபோல் கமிட் ஆன சினிமாக்களை முடித்துவிட்டு விரைவில் நல்லப்பெயருடன் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளாராம், நடிகை அஞ்சலி. அதனால் தற்போது வரன் தேடும் படலத்தில் குதித்துள்ளனர், நடிகை அஞ்சலியின் பெற்றோர்.

கற்றது தமிழ் ஆனந்தியாக வந்து தமிழ் ரசிகர்களை ஈர்த்த அஞ்சலிக்கு நல்ல வாழ்க்கைத்துணை அமையட்டும்!

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.