ஹாட் டாப்பிக்காக மாறிய சிவகார்த்திகேயன் வீடியோ.. எங்கப் பாத்தாலும் இத பத்தி தான் ஒரே பேச்சு..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ஹாட் டாப்பிக்காக மாறிய சிவகார்த்திகேயன் வீடியோ.. எங்கப் பாத்தாலும் இத பத்தி தான் ஒரே பேச்சு..

ஹாட் டாப்பிக்காக மாறிய சிவகார்த்திகேயன் வீடியோ.. எங்கப் பாத்தாலும் இத பத்தி தான் ஒரே பேச்சு..

Malavica Natarajan HT Tamil
Dec 09, 2024 08:32 AM IST

நடிகர் சிவகார்த்திகேயன் அவர் மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளுக்கு வாழ்த்திய வீடியோ இதுவரை 100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதித்துள்ளது.

ஹாட் டாப்பிக்காக மாறிய சிவகார்த்திகேயன் வீடியோ.. எங்கப் பாத்தாலும் இத பத்தி தான் ஒரே பேச்சு..
ஹாட் டாப்பிக்காக மாறிய சிவகார்த்திகேயன் வீடியோ.. எங்கப் பாத்தாலும் இத பத்தி தான் ஒரே பேச்சு..

300 கோடியைக் கடந்த வசூல்

சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளியான படங்களிலேயே தியேட்டரில் ஒரு மாதத்திற்கு மேலாக வெற்றிகரமாக ஓடிய திரைப்படம் அமரன் தான். அத்துடன் வெளியான அத்தனை நாளிலும் ரசிகர்கள் ஆதரவைப் பெற்று கிட்டத்தட்ட 330 கோடி ரூபாய் வசூலைப் பெற்றது.

அத்துடன், இந்தத் திரைப்படத்தின் வெற்றி ஓடிடியிலும் தொடர்கிறது. இது இப்படி இருக்கையில், சிவகார்த்திகேயன் தனது மனைவியின் பிறந்தநாளுக்காக செய்த சர்ப்ரைஸ் தான் இப்போது மீண்டும் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது.

ஹாட் டாப்பிக்காக மாறிய சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸாக வந்து வாழ்த்து தெரிவிக்க விரும்பினார். இதற்காக அவர், ராணுவ அதிகாரி உடையில் வந்து ஆச்சரியப்படுத்தினார்.

இந்த வீடியோவை சிவகார்த்திகேயன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். அதைப் பார்த்த பலரும் சிவகார்த்திகேயன் மற்றும் அவரது மனைவியின் அன்பை பார்த்து ரசித்தனர். இந்நிலையில், இவர் வெளியிட்ட இந்த ஒரு வீடியோ தான் தற்போது மீண்டும் ஹாட் டாப்பிக்.

100 மில்லியன் பார்வையாளர்கள்

காரணம், சிவகார்த்திகேயன் வெளியிட்ட இந்த வீடியோவை 100 மில்லியன் பார்வையாளர்களுக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.

இதுவரை எந்த தென்னிந்திய நடிகர் வெளியிட்ட வீடியோவும் இவ்வளவு பார்வையாளர்களைக் கடந்தது இல்லையாம். இதனால், மனைவிக்கு சிவகார்த்திகேயன் கொடுத்த அன்பை, அவரது ரசிகர்கள் அவருக்கு கொடுத்து அவரை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளனர்.

சிவாகார்த்திகேயன் சர்ப்ரைஸ்

வீட்டில் சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்த மனைவி ஆர்த்தியின் பின்னாடி, அமரன் பட கெட்டப்பில் சென்று அமைதியாக நின்றுள்ளார் சிவகார்த்திகேயன். தனக்கு பின்னால் யாரோ இருப்பதை உணர்ந்து திரும்பி பார்த்த அவரது மனைவி ஆர்த்தி சட்டென ஷாக்காகி, அது தன் கணவர்தான் என உணர்ந்த பிறகு க்யூட் சிரிப்புடன் ரெமான்ஸை வெளிப்படுத்தியுள்ளார். இந்த விடியோ தற்போது இணையத்தில் வைராகி லைக்குகளை குவித்து வருகிறது.

இராணுவ வீரரின் உண்மைக் கதை

சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்துள்ள அமரன் படம்ம் காஷ்மீரில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது பாகிஸ்தான் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட இராணுவப் படை வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை கதையாக கொண்டுள்ளது. உண்மைக் கதை என்பதால் படம் வெளியாகும் முன்பே படத்திற்கு அதிக வரவேற்பு இருந்தது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் பயன்படுத்திய பெரிய ரக துப்பாக்கி உண்மையானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்ந்து காட்டிய நடிப்பு அரக்கர்கள்

நடை, உடை, பாவனை, கட்டு மஸ்தான உடம்பு என முகுந்தின் ஒட்டு மொத்த உருவமாக இதுவரை நாம் பார்க்காத நடிகராக சிவகார்த்திகேயனை மாற்றி இருக்கிறார் இயக்குனர் ராஜ்குமார். நடிப்பிலும் முழுக்க முழுக்க வேறொரு களத்தில் இறங்கி, மீண்டும் ஒரு பரீட்சார்த்த முயற்சியை கையில் எடுத்து அதில் வெற்றியும் பெற்று இருக்கிறார் சிவா. ஒரு இராணுவ வீரனுக்கான மிடுக்கு ஒரு பக்கம் கவர, இன்னொரு பக்கம் அவர் நடிப்பில் வெளிப்பட்ட எமோஷன் திரையை சிதற விடுகிறது. இதனால், ஏற்கனவே படம் பார்த்தவர்களும் கூட, இவர்களின் நடிப்பால் ஈர்க்கப்பட்டு தியேட்டருக்கு திரும்பத் திரும்ப வருகின்றனர்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.