இதுவல்லவா சர்ப்ரைஸ்!சிவகார்த்திகேயன் செய்த காரியம்..ஷாக் ஆன மனைவி - க்யூட் ரியல் ரொமான்ஸ்
அமரன் கெட்டப்பில் சிவகார்த்திகேயன் செய்த காரியத்தால் ஷாக் ஆன அவரது மனைவி, க்யூட்டாக ரொமான்ஸை வெளிப்படுத்திய விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

சிவாகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி ரிலீஸாக வந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் அமரன் படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 250 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இதன் மூலம் ரூ. 250 கோடி கிளப்பில் இணைந்த கோலிவுட் நடிகராகியுள்ளார் சிவகார்த்திகேயன்.
இதையடுத்தும் அமரன் பட கெட்டப்பில் தனது மனைவிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
சிவாகார்த்திகேயன் சர்ப்ரைஸ்
வீட்டில் சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்த மனைவி ஆர்த்தியின் பின்னாடி, அமரன் பட கெட்டப்பில் சென்று அமைதியாக நின்றுள்ளார் சிவகார்த்திகேயன். தனக்கு பின்னால் யாரோ இருப்பதை உணர்ந்து திரும்பி பார்த்த அவரது மனைவி ஆர்த்தி சட்டென ஷாக்காகி, அது தன் கணவர்தான் என உணர்ந்த பிறகு க்யூட் சிரிப்புடன் ரெமான்ஸை வெளிப்படுத்தியுள்ளார். இந்த விடியோ தற்போது இணையத்தில் வைராகி லைக்குகளை குவித்து வருகிறது.