போராட்டம், சர்ச்சைக்கு மத்தியில் ரூ. 200 கோடி வசூல்..காஸ்ட்லி பரிசு! உச்சகட்ட ஹாப்பி மோடில் சிவகார்த்திகேயன்
அமரன் படத்துக்கு எதிராக போராட்டம், சர்ச்சை என ஒரு புறம் இருந்தாலும், இதற்கு மத்தியில் படம் ரூ. 200 கோடி வசூலித்துள்ளது. உச்சகட்ட ஹாப்பி மோடில் இருக்கும் சிவகார்த்திகேயன், படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷுக்கு காஸ்ட்லி பரிசை அளித்துள்ளார்.

தீபாவளிக்கு வெளியான நான்கு பாடங்களில் ரேஸில் வென்ற படமாக சிவகார்த்திகேயன் - சாய்பல்லவி நடித்த அமரன் படம் உள்ளது. திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக ஓடிவரும் இந்த படம் தற்போது வரை பாக்ஸ் ஆபிஸில் ரூ. 200 கோடிக்கு மேல் வசூலித்திருப்பதாக தகவல்கள் உலா வருகின்றன. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து அமரன் படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை அறிமுக இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார்.
காஸ்ட்லி பரிசு
அமரன் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக படத்தின் திரைக்கதை, சிவகார்த்திகேயன், சாய்பல்லவி ஆகியோரின் நடிப்புக்கு இணையாக ஜி.வி. பிரகாஷ்குமாரின் இசையும் முக்கியத்துவம் பெற்றிருந்தது. படத்தின் பாடல்கள் மட்டுமல்லாமல், பின்னணி இசையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. அத்துடன் எமோஷனலாக படத்துடன் கனெக்ட் செய்துள்ளது.