Singer Suchitra: பாலசந்தர் குறித்து அவதாறு பேச்சு.."முதல்ல குற்றவாளிய தண்டியுங்க, அப்புறமா என்னை கண்டியுங்க"! சுசித்ரா-singer suchitra condems director association after statement about vetran director balachander remarks - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Singer Suchitra: பாலசந்தர் குறித்து அவதாறு பேச்சு.."முதல்ல குற்றவாளிய தண்டியுங்க, அப்புறமா என்னை கண்டியுங்க"! சுசித்ரா

Singer Suchitra: பாலசந்தர் குறித்து அவதாறு பேச்சு.."முதல்ல குற்றவாளிய தண்டியுங்க, அப்புறமா என்னை கண்டியுங்க"! சுசித்ரா

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Sep 21, 2024 08:59 AM IST

Singer Suchitra: பாலசந்தர் குறித்து அவதாறு பேச்சு பேசியாத பாடகி சுசித்ராவுக்கு இயக்குநர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. முதல்ல உங்களிடம் புகார் அளித்த நபர் கூறும் குற்றவாளிய தண்டியுங்க, அப்புறமா என்னை கண்டியுங்க என சுசித்ரா பதிலடி கொடுத்துள்ளார்.

Singer Suchitra: பாலசந்தர் குறித்து அவதாறு பேச்சு.."முதல்ல குற்றவாளிய தண்டியுங்க, அப்புறமா என்னை கண்டியுங்க"! சுசித்ரா
Singer Suchitra: பாலசந்தர் குறித்து அவதாறு பேச்சு.."முதல்ல குற்றவாளிய தண்டியுங்க, அப்புறமா என்னை கண்டியுங்க"! சுசித்ரா

பாடகி சுசித்ராவுக்கு இயக்குநர் சங்கம் கண்டனம்

இதுகுறித்து தமிழ் இயக்குநர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு திரைப்பட உலகில் சமீபத்தில் திரை உலகத்தை சார்ந்தவர்களே திரை உலக கலைஞர்களுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வண்ணம் சிலரின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சனம் செய்வதும், யூகத்தின் அடிப்படையில் தவறான செய்திகளை பரப்புவதும் வழக்கமாகி உள்ளது.

தமிழ்த்திரை உலகில் என்றும் அழிக்க முடியாத புகழையும், திரை உலகினர் மட்டுமல்லாது தமிழ் ரசிகர்கள் அனைவராலும் மதிக்க கூடிய போற்றக்கூடியவராக மிகப்பெரிய சாதனை புரிந்து மறைந்தவர் இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர்.

தேசிய விருது, கலைமாமணி, பத்மஸ்ரீ, தாதா சாகேப் பால்கே போன்ற மிகப்பெரிய விருதுகளை பெற்று

தமிழ் திரை உலகுக்கே அவர் பெருமை சேர்த்தவர். அவரின் புகழை கெடுக்கும் வண்ணம் தற்போது பாடகி

சுசித்ரா, கே.பாலசந்தரை பற்றி அவதூறாகவும், அவர் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாகவும் பேட்டி கொடுத்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்க செயலாகும்.

மனம் போன போக்கில் விமர்சிப்பது கண்டனத்துக்குரியது

யாரும், யாரையும் மனம் போன போக்கில் விமர்சனம் செய்வது மிகவும் தவறான செயலாகும். இது தொடராத வண்ணம் தடுத்து நிறுத்துவது திரைப்பட உலகில் உள்ள அனைவரின் பொறுப்பாகும்.

இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தரை பேட்டி என்ற பெயரில் அவரின் புகழை களங்கப்படுத்திய பாடகி சுசித்ராவை தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சுசித்ரா ரியாக்சன்

இயக்குநர் சங்கத்தின் இந்த கண்டன அறிக்கை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்திருக்கும் பாடகி சுசித்ரா, " நடிகை பத்மப்ரியாவுக்கு உங்களில் ஒருவர் தான் பிரச்னை கொடுத்தார். அவர் அளித்த புகாரை மௌனப்படுத்திய தமிழக இயக்குநர்கள் சங்கத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். அந்த வழக்கில் குற்றவாளியை நீதியின் முன் நிறுத்திய பிறகு அவர்கள் என்னை துரத்தட்டும்." என குறிப்பிட்டுள்ளார்.

பாலசந்தர் குறித்து சுசித்ரா அவதூறு பேச்சு

சமீப காலமாக சினிமா பிரபலங்கள் பலரை பற்றி அவதூறாக பேசி பேட்டி அளித்து வருகிறார் பாடகி சுசித்ரா. குறிப்பாக பிரபலங்கள் நடிககைகள், பெண்களுக்கு அளித்த பாலியல் தொல்லைகள் குறித்து சகட்டுமேனிக்கு பேசி வருகிறார்.

பாடலாசிரியர் வைரமுத்து பற்றி தொடர்ந்து அவர் பேசிய பேச்சு சர்ச்சைய கிளப்பியது. அந்த பேட்டியில் மறைந்த இயக்குநர் சிகரம் பாலசந்தர் குறித்தும் பேட்டி ஒன்றில் மோசமாக விமர்சித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், "வைரமுத்து தனக்கு பரிசு கொடுப்பதாக வீட்டுக்கு வரவழைத்து பேண்டீன் ஷாம்பு பாட்டில் கொடுத்தார். இயக்குநர் பாலசந்தர் சாகும் வரை காம உணர்வு மிக்கவராக இருந்தார். இந்த மாதிர ஆளுங்க சாகுற வரை இப்படித்தான் இருப்பார்கள்" என்று பேசியிருப்பார்.

அவர் பேசிய இந்த வார்த்தை ட்ரெண்டான நிலையில், இதுதொடர்பான ஷார்ட்ஸ் விடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. இந்த சூழ்நிலையில் சுசித்ராவுக்கு இயக்குநர்கள் சங்கம் கண்டனமும், அதற்கு அவர் பதிலடியும் கொடுத்துள்ளார்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.