NATIONAL AWARD MOVIES IN OTT: தேசிய விருதுகளை அள்ளிய படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் பார்க்கலாம்? இதே முழு லிஸ்ட்-ponniyin selvan 1 thiruchitrambalam where can watch national award winning films on ott - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  National Award Movies In Ott: தேசிய விருதுகளை அள்ளிய படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் பார்க்கலாம்? இதே முழு லிஸ்ட்

NATIONAL AWARD MOVIES IN OTT: தேசிய விருதுகளை அள்ளிய படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் பார்க்கலாம்? இதே முழு லிஸ்ட்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 24, 2024 10:26 PM IST

National Award Winning Movies in Ott: 70வது தேசிய விருதுகளை அள்ளிய படங்கள் என்தெந்த ஓடிடி தளங்களில் பார்க்கலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். தமிழில் பொன்னியின் செல்வன் 1, திருச்சிற்றம்பலம் ஆகிய படங்கள் தேசிய விருதுகளை வென்றுள்ளன.

National Award Winning Movies in Ott: தேசிய விருதுகளை அள்ளிய படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் பார்க்கலாம்? இதே முழு லிஸ்ட்
National Award Winning Movies in Ott: தேசிய விருதுகளை அள்ளிய படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் பார்க்கலாம்? இதே முழு லிஸ்ட்

தமிழில் சிறந்த படமாக மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 1 படம் தேர்வாகியுள்ளது. அத்துடன் தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தில் ஹீரோயினாக நடித்த நித்யா மேனன் சிறந்த நடிகை விருதை வென்றுள்ளார். இதையடுத்து 70வது தேசிய விருதை வென்ற படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் இடம்பிடித்துள்ளன என்பதை பார்க்கலாம்

பொன்னியின் செல்வன் 1

மணிரத்னம் இயக்கத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் புடை சூழ நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் 1 படத்துக்கு நான்கு தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. அதன்படி 70வது தேசிய விருதில் அதிக விருதுகளை வென்ற படமாகவும் உள்ளது.

இந்த படத்துக்கு சிறந்த பின்னணி இசை இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், சிறந்த ஒளிப்பதிவு ரவிவர்மன், சிறந்த சவுண்ட் டிசைன் ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி மற்றும் சிறந்த பிராந்திய மொழி படங்கள் ஆகிய விருதுகள் கிடைத்துள்ளன.

ரசிகர்களை கவர்ந்து பாக்ஸ் ஆபிஸில் ரூ. 500 கோடிக்கு மேல் வசூலையும் ஈட்டிய படமாக இருந்து வரும் பொன்னியின் செல்வன் அமேசான் ப்ரைம் ஓடிடியில் உள்ளது.

திருச்சிற்றம்பலம்

தனுஷ், நித்யா மேனன், இயக்குநர் பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் நடித்து பீல் குட் திரைப்படமாக ரசிகர்களை கவர்ந்தது திருச்சிற்றம்பலம். இந்த படத்தின் நாயகி நித்யா மேனன் சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். குச் எக்ஸ்பிரஸ் படத்தில் நடித்த மானிஷி பாரக் என்பவருடன் இணைந்து நித்யா மேனனும் சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

அதேபோல் திருச்சிற்றம்பலம் படத்தில் இடம்பிடித்த ட்ரெண்ட் பாடலாக திகழ்ந்த மேகம் கருக்காதா பாடலுக்கு டான்ஸ் அமைத்த ஜானி மாஸ்டர் மற்றும் சதீஷ் கிருஷ்னன் ஆகியோருக்கு சிறந்த நடனத்துக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அனைவரும் ரசிக்ககூடிய படமாக இருக்கும் திருச்சிற்றம்பலம் அமேசான் ப்ரைம் விடியோவில் உள்ளது

கந்தாரா

ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான கன்னட படமான கந்தாரா பான் இந்தியா அளவில் பிரபலமானது. படத்தில் தனது அற்புதமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த ரிஷப் ஷெட்டி சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் இந்த படத்துக்கு சிறந்த பொழுதுபோக்கு படத்துக்கான தேசிய விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இடம்பிடித்திருக்கும் இந்த படம், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளின் டப்பிங் வெர்ஷனுடன் உள்ளது. இதன் இந்தி பதிப்பை நெட்பிளிக்ஸில் காணலாம்

ஆட்டம்

சிறந்த எடிட்டிங், சிறந்த எடிட்டிங் மற்றும் சிறந்த பிராந்திய மொழி படம் மலையாளம் என மூன்று தேசிய விருதுகளை மலையாள படமான ஆட்டம் வென்றுள்ளது. ஆனந்த் ஏகர்ஷி இயக்கத்தில் பல்வேறு நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இந்த படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் உள்ளது.

பிரம்மாஸ்த்ரா பகுதி 1: சிவா

ரன்பீர் கபூர் நடிப்பில் சூப்பர் ஹிட்டான பாலிவுட் படம் பிரம்மாஸ்த்ரா பகுதி 1: சிவா. இந்த படத்துக்கு மூன்று தேசிய விருதுகளை வென்றுள்ளது. அதன்படி சிறந்த அனிமேஷன், விஷுவல் எபெக்ட்ஸ் விருது, சிறந்த இசையமைப்பாளராக பிரிதம், சிறந்த பின்னணி பாடகர் (ஆண்) அர்ஜுத் சிங் ஆகிய விருதுகளை கிடைத்துள்ளன. மொழிகளை கடந்த அனைத்து ரசிகர்களையும் கவர்ந்த இந்த படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் உள்ளது

ஊஞ்சாய்

அமிதாப் பச்சன் நடித்திருக்கும் இந்த படத்தை இயக்கியுள்ள சூரஜ் பர்ஜத்யா சிறந்த இயக்குநர் விருதும், படத்தில் நடித்திருந்த நீனா குப்தா சிறந்த துணை நடிகைக்கான விருதையும் வென்றுள்ளனர். ரசிகர்களை கவர்ந்த இந்த சாகச திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் உள்ளது.

குல்மோகர்

சிறந்த இந்தி திரைப்படம், சிறந்த வசனகர்த்தா, படத்தில் நடித்த மனோஜ் பாஜ்பாயி சிறப்பு விருது என மூன்று தேசிய விருதுகளை வென்றிருக்கும் படமாக குல்மோகர் உள்ளது. பேமிலி ட்ராமா பாணியில் அமைந்திருக்கும் இந்த படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் நேரடியாக வெளியானது

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.